நடனக் காட்சி இல்லையாம்
‘தேள்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பு, இயக்கம் ஹரிகுமார், பிரபு தேவா நாயகன். இந்தப் படத்தில் இடது கைப் பழக்கம் உள்ளவராக நடிக்கிறார் பிரபுதேவா. இயக்குனர் ஹரிகுமார், டான்ஸ் மாஸ்டரும் கூட. ஆனால், இந்தப் படத்தில் நடனப்புயல் பிரபுதேவாவிற்க்கு நடன காட்சிகள் கிடையாது.
அழுதார் சிம்பு
சிலம்பரசன் நடிக்கும் ‘மாநாடு’ படம் 25 ஆம் தேதி ரிலீஸ். இதன் ஆடியோ வெளியீட்டு விழா இந்த வாரம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிலம்பரசன் உணர்ச்சிபட்டு அழுதே விட்டார். என்னுடைய படங்களுக்கு பிரச்சனை வருவது வழக்கமானது என்று தொடங்கியவர், அப்போதுதான் அழத்தொடங்கினார். சிம்பு பற்றி பாரதிராஜா பேசும்போது... அவரது சேஷ்டைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த சேஷ்டைகள் இல்லை என்றால் சிம்பு இல்லை என்றார்.
கேப்டன் என்றால் பொறுப்பு
சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ‘கேப்டன்’ படத்தில் ஆர்யா நாயகன். இவரை தவிர சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி இன்னும் பல நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குனர் ‘கேப்டன்’ தலைப்பு பற்றி குறிப்பிடும்போது... நேர்த்தியானது கேப்டன் என்னும் பொறுப்பு, மிக முக்கியமானது. அதுதான் கதை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
துபாயில் ரகுமான்
‘பொன்னியின் செல்வன்’, ‘அயலார்’, ‘கோப்ரா’ என்று நான்கைந்து படங்களுக்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான், தற்போது இருப்பது துபாயில்.
துபாய் எக்ஸ்போ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்ற நிகழ்ச்சி துபாயில் நடக்கிறது. இதில் ஏ.ஆர். ரகுமான் பங்கு மிக முக்கியமானது. மனங்களை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல் என்ற முழக்கம் தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய ஹைலைட். இது ஆறு மாதம் நடக்கும், தொடர் நிகழ்ச்சி. எனவே மார்ச் 2022-ல் இந்தியா திரும்புவார் இசைப்புயல் என்கிறார்கள்.
வாடகைத் தாய் மூலம் குழந்தை
இந்தியில் முன்னணி கதாநாயகிகளில் பிரபலம் பிரீத்தி ஜிந்தா, ‘ஜென் குட்’ என்ற அமெரிக்கரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார். இதை பெருமையாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை.
Leave a comment
Upload