இந்தியாவில் பல மாவட்டங்களில் கலெக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள்... அதே சமயம் நீலகிரி கலெக்டர் என்றால் ஒரு சிறப்பாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் நீலகிரியை உருவாக்கின ஜான் சல்லிவன் தான் காரணம்.
மாவட்ட கலெக்டர் என்ற பதவியை 1774 ஆம் வருடம் வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் பிரிட்டிஷ் அரசு உருவாக்கின ஒரு கம்பிர பதவி.
1848 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஜான் சல்லிவன் கூறும்போது, ஒரு மாவட்ட கலெக்டர் என்பவர் சாதாரண நபர் அல்ல... அவர் ஒரு மாகாணத்தின் கவர்னர் அந்தஸ்தை வகிப்பவர், மாவட்டத்தின் அனைத்து முன்னேற்றங்களும் கலெக்டரின் கரத்தில் தான் உள்ளது. ஒரு மாவட்ட மக்களின் உயர்வு, வளர்ச்சி அனைத்துக்கும் மாவட்ட கலெக்டர் தான் பொறுப்பு என்று கூறியுள்ளார். நீலகிரி கலெக்டர் என்பது மிக பெரிய பதவி என்று உணர்த்தியுள்ளார் .
நீலகிரி தனி மாவட்டமாக 1868 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டபோது, முதல் கலெக்டர் பொறுப்பை ஏற்றவர் ஜே.டபுள்யு. பிரிக்ஸ். அவர் நினைவாக தான் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும் பிரிக்ஸ் பள்ளி செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.
பிரிட்டிஷாரின் கடைசி கலெக்டர் எச்.எச். கிரல்ஸ்டோன். 1947 ஆம் வருடம் ஜனவரி மாதம் பதவி ஏற்று, செப்டம்பர் மாதம் விடைபெற்றார். 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திர முதல் மூவர்ண கொடியை ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்றி சல்யுட் அடித்த முதல் கலெக்டர் என்ற பெருமையை பெற்றவர்.
முதல் இந்திய கலெக்டர் பொறுப்பை ஏற்றவர் டி.எஸ். இராமச்சந்திரன் ஐ.சி.எஸ். செப்டம்பர் 6 ஆம் தேதி 1947 ஆம் ஆண்டு. அதற்கு பின்னும் பிரிட்டிஷ் கலெக்டர்கள் பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி பிரிட்டிஷ் கலெக்டராக பணிபுரிந்தவர் ஜி.எம். வைட். ஜூன் மாதம் 1962 முதல் மே மாதம் 1963 வரை பணியில் இருந்துள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஐந்து வருடம் பணியாற்றிய கலெக்டர் எல்.ஆர். பர்ரோவ்ஸ், 1884 முதல் 1889 வரை. குறைந்த வருடம் பணியாற்றிய கலெக்டர் ஜெ.ஆர். காக்ரேல், 1872 ஜூன் முதல் 1876 அக்டோபர் வரை.
சி.எம். முல்லே 1900 டிசம்பர் முதல் ஏப்ரல் 1901... இவரே மீண்டும் மே மாதம் 1991 முதல் 1905 மே மாதம் வரை பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
முதல் கலெக்டர் மற்றும் நகரின் ஆணையாளர் ஜெ.டபுள்யு. பிரிக்ஸ், நான்கு வருடத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டதால், அவரின் பதவி காலம் குறைந்தது என்று கூறப்படுகிறது. அதே போல எம்.எங் என்ற கலெக்டரின் பதவியும் குறைவாக அமைந்தது.
இந்திய சுதந்திரத்திற்குப் பின் அதிக வருடம் பதவியில் இருந்த பிரிட்டிஷ் கலெக்டர் எச்.ஜி.எம். மேக் லௌக்ஹளின், 1949 முதல் 1954 வரை நீலகிரியை நிர்வாகித்த பெருமை இவரை சாரும்.
அதற்குப் பின் இரண்டு இந்திய கலெக்டர்கள் தான் அதிக வருடம் நீலகிரியில் ஆட்சி பொறுப்பை வகித்துள்ளனர். ஏ.எஸ். அலுவாலியா 1966 ஆம் வருடம் ஜூலை மாதம் பதவி ஏற்று, நவம்பர் 1970 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார்.
அதே போல தற்போதைய கலெக்டர் ஜெ. இன்னசன்ட் திவ்வியா, ஜூலை மாதம் 2017 ஆம் வருடம் பதவியேற்று 2021 நவம்பர் மாதம் முடித்துள்ளார். இருவரும் நான்கு வருடம் நான்கு மாதம் பதவியில் திறம்பட பணியை செய்து பொறாமை, சூழ்ச்சியில் சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அலுவாலியா காங்கிரஸ் ஆட்சியின் கடைசி நிமிடத்தில் நீலகிரி கலெக்டர் பொறுப்பை ஏற்று, புதிய தி.மு.க. ஆட்சியில் பணிபுரிந்தவர். அதே போல இன்னசன்ட் திவ்வியா அ.இ.அ.தி.மு.க ஆட்சியின் கடைசி சில மாதங்கள் நீலகிரி கலெக்டர் பொறுப்பை ஏற்று, பின் பத்து வருடத்திற்கு பின் ஆட்சியை பிடித்த தி.மு.க. ஆட்சியில் பணிபுரிந்து நிறைவு செய்தவர் என்பது இரு கலெக்டருக்கும் பொருந்தும் ஒரு ஒற்றுமை!
நீலகிரியின் 113 வது மாவட்ட ஆட்சியராக 10-7-2017 அன்று பொறுப்பை ஏற்றார்.. பதவி ஏற்ற நாளிலே, சுகாதாரம் மற்றும் சுற்று சூழலுக்கு முதல் இடத்தை கொடுத்து, ஆய்வுகளை துவக்கினார். நீலகிரி ஒரு உயிர் சூழல் பகுதி. எனவே சுற்று சூழல் மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற சூளுரையுடன் தன் பணியை செய்தார். பிளாஸ்டிக் ஒழிப்புக்கு முன்னுரிமை வழங்கி, அதை முழுமையாக தடை செய்தார். பிளாஸ்டிக் பெட் பாட்டில்களுக்கு தடை விதித்து, மாவட்டம் முழுவதும் ‘வாட்டர் ஏடிஎம்’ இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்தார். அதை அதிகாரிகள் பராமரிக்காமல் விட்டது வருத்தமான ஒன்று..
குப்பை இல்லா நீலகிரியை உருவாக்கி, சுத்தமான மாவட்டமாக மாற்றிவந்தார் ஆட்சியர். “உன்னத உதகை” என்ற அமைப்பை ஏற்படுத்தி, க்ளீன் ஊட்டி திட்டத்தை செயல் படுத்தினார். பெரும்பாலான இடங்கள் பளிச் என்று மாறியது... கோடப் மந்து கால்வாயை சுத்தம் செய்து, குப்பைகள் போடாமல் இருக்க தடுப்பு அமைத்தார்... அதே போல ஊட்டி ஏரியை, கழிவுகளில் இருந்து பாதுகாக்க சுற்று சுவர் எழுப்பினார். மாவட்டம் முழுவதும் ரவுண்டு அடித்து எல்லா துறைகளிலும் இவரின் பார்வை படர்ந்து இருந்தது. அதற்க்காக முதல்வரிடம் பசுமை விருதை பெற்றார் கலெக்டர்.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறையை கண்டறிந்து, அவர்களுக்கு மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்து, மாவட்டம் முழுவதும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்த மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியாவுக்கு, மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி ராணி டெல்லியில் சிறந்த விருதை வழங்கினார்.
நாடளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை திறம்பட நடத்தியவர் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா. “ஓட்டுபோடுங்க” என்ற வாசகத்துடன் தன் அலுவலக உயர் அலுவலர்களை நடிக்கவைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதே போல “கரை நல்லது Nga” என்ற வாசகம் வேட்பாளர்களை ஈர்த்தது... இப்படி தேர்தல் விழிப்புணர்வில் மாவட்டம் முழுவதும் கலக்கினார் கலெக்டர்....
கிண்ணக்கொரை, தெங்கு மராடா, கூடலூர், சேரம்பாடி, முதுமலை என்று அனைத்து குக்கிராமம் முழுவதும் கலெக்டரின் ஆய்வு விசிட் தொடர்ந்து கொண்டிருந்தது.... ஓய்வு இல்லாமல் சுற்றி வந்த கலெக்டருக்கு, மேலும் பணி சேர்ந்தது மழை வெள்ளம்... ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை மழை நிவாரண பணிகளை மேற்கொண்டார்... பாலடா என்ற இடத்தில் காட்டாற்று வெள்ளத்தில் கலெக்டர் சிக்கி உயிர் பிழைத்தார்.
நீலகிரி கோடை விழாக்களை புதுமையாக நடத்தத் துவங்கினார்... மலர் காட்சியை தன் நேரடி பார்வையில் நடத்தி முடித்தார். பல புதுமையான பல்சுவை நிகழ்வுகள் நடந்தன, இவரின் ஆட்சியில்.
மாவட்டம் பல சிறப்பான வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வர... கொரோனா தொற்று எட்டி பார்க்க... மாவட்டத்தை உஷாராக சீல் செய்தார் கலெக்டர். அதற்கு பின் லாக் டவுன் தளர்வுகள் அரசு அறிவிக்க, வேறு வழியில்லாமல் கொரோனா நீலகிரியினுள் நுழைந்தது. தடுப்பூசிகளை அனைவரும் போட்டுக்கொள்ள கலெக்டர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். முதல் தவணை தடுப்பூசியை ஓரளவுக்கு போட செய்தார். கொரோனா தடுப்பு ஊசி போட பயந்து ஒளிந்து கொண்ட பழங்குடியினர்கள், ஆதிவாசிகளை நேரில் சென்று சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, நுறு சதவிகிதம் தடுப்புஊசி போட வைத்தார் கலெக்டர்.
நேரடியாக பார்வையிட்ட சுகாதார அமைச்சர் ம. சுப்ரமணியம், பாராட்டினார். இந்தியாவிலேயே ஆதிவாசிகள், பழங்குடியினருக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தின மாவட்டம் நீலகிரி என்று பிரதமரே பாராட்ட... முதல்வர் ஸ்டாலின், இன்னசன்ட் திவ்வியாவை சென்னைக்கு அழைத்து, விருது வழங்கியது பல மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கண்ணூறுத்தியது....
இவர் மேல் ஒரு கண் வைக்க துவங்கி, பல இடங்களில் ஒதுக்கும் படலம் துவங்கியது... அவரின் பணிக்கே தொந்தரவை கொடுக்க துவங்கினார்கள்.
கொரோனா தொற்று பணியில் பம்பரமாக இரவு, பகல் என்று சுழன்று கொண்டிருந்த ஆட்சியருக்கு, மற்ற ஒரு பணி வந்து சேர்ந்தது. அது தான் மசினகுடி சீகுர் வனப்பகுதியில் உள்ள யானை வழித்தடத்தை மறித்து கட்டப்பட்டிருக்கும் சுற்றுலா காட்டேஜுகளின் ஆக்கரமிப்புகளை அகற்றும் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.
மதன் பி லோகூர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது... நீலகிரியில் யானைகள் வழித்தட ஆக்கரமிப்புகளை அகற்றக்கோரி யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, யானைகள் வலைத்தடத்திலுள்ள கட்டிடங்கள் மற்றும் ரீசார்ட்டுகளை உடனடியாக நீக்கக்கோரி உத்தரவிட்டிருந்தனர்.
மேலும் அவைகளை சீல் செய்ய உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விதிமுறைகளை மீறி புதிய கட்டுமானங்களை அனுமதி அழைக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது. இதற்கான அனைத்து பணிகளும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆட்சியாளர் அந்த சம்பந்தப்பட்ட காட்டேஜுகளை சீல் செய்தார். இந்த ஆக்கிரமிப்பு மற்றும் யானை வழித்தடத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு குழுவையும் உச்ச நீதிமன்றம் அமர்த்தியது. அதில் மாவட்ட ஆட்சியரும் இடம்பெறுவார் என்று கூறப்பட்டது. சில நிர்வாக காரணத்திற்காக அதிமுக அரசு, கலெக்டர் இன்னசன்ட் திவ்வியாவை பணியிடை மாற்றம் செய்ய இருந்தது. 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பொது நலம் கருதி, இவரை மாற்றக் கூடாது என்று உத்தரவை பிறப்பித்தது .
கலெக்டர் இன்னசன்ட் திவ்வியாவிற்கு பல தரப்பட்ட நெருக்கடிகள் அவரின் உயர் அதிகாரிகள் மூலமே கொடுக்கப்பட்டு வந்துள்ளன.... மசினகுடி வாழைத்தோட்டம் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள எஸ்டேட் மற்றும் குடியிருப்பு பகுதி, தமிழக அரசின் ஒரு முக்கிய அமைச்சரின் நண்பருக்கு சொந்தமானதாம். அந்த கட்டிடத்தின் சீலை அகற்ற கலெக்டருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாம்... அதற்கு கலெக்டர் முடியாது என்று கூறிவிட... இவரை நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாற்றும் வேலையில் இறங்கியுள்ளனர்... தமிழக அரசு, கலெக்டரை நிர்வாக வசதிக்காக மாற்ற உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய... இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 16 ஆம் தேதி நீலகிரி மாவட்ட ஆட்சியரை பணியிடை மாற்றம் செய்ய அனுமதி அளித்தது. ஏற்கனவே ஆட்சியரும் தன்னை பணியிடை மாற்றம் செய்ய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல வழிகளில் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியாவை, நீலகிரியிலிருந்து மாற்றுவதற்கான வேலைகள் நடந்துள்ளது தெரிகிறது. பல விஷயங்களில் இவரை ஒரு முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒதுக்கிவந்ததை பார்க்க முடிந்தது. கடந்த மாதம் முதுமலையில் ஆட்கொல்லி T 23 புலியை பிடித்தே ஆகவேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தது கலெக்டர். அதிலும் இவரை ஒதுக்கும் படலம் தொடர்ந்தது. ஒரு வழியாக புலியை பிடித்தவுடன், அந்தத் தகவல் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியாவிற்கு தெரிவிக்கப்படவில்லை. இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை கேட்டால் ஜீரணிக்க முடிவில்லை என்று கூறுகிறார்கள் சில முத்த பத்திரிகையளர்கள். யானை வழித்தடம் சம்மந்தப்பட்ட பணியை திறம்பட முடித்து அரசுக்கு ஒப்படைத்துள்ளார்...
ஊட்டி நகராட்சி சிறந்த ஒன்று என்று கூறி தமிழக அரசு விருது கொடுத்தது, அந்த விருதும் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியாவின் பணிக்கு தான் கிடைத்துள்ளது என்பது உண்மை.
நாம் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியாவை அவரின் இல்லத்தில் சந்தித்தோம்... “நான் இந்த மாவட்டத்தின் ஆட்சியளராக பணியில் சேர்ந்தேன். அது ஆறு மாதமாகவும் இருக்கலாம் அல்லது ஒரு வருடமாகவும் இருக்கலாம் என்று தான் நினைப்பேன். இங்கு நான்கு வருடங்கள் பணிசெய்ததை இறைவன் கொடுத்த வரமாக கருதுகிறேன்... தினமும் காலை எழும் போது, இந்த நாளில் மக்களுக்கு நல்ல காரியங்களை செய்யவேண்டும் என்று இறைவனிடம் பிரார்திப்பேன். என் மனசாட்சி படி நூறு சதவிகிதம் என்னால் முடிந்த அளவுக்கு என் பணியை செய்த திருப்தியில் விடைபெறுகிறேன்...
இந்த அழகிய மாவட்டத்தில் பணிபுரிய இறைவன் ஒரு வாய்ப்பை கொடுத்ததிற்கு நன்றி... என்னால் மறக்க முடியாத சில விஷயங்கள் உள்ளன. அது பழகுடியினர்களான பனியா பெண்களை மறக்க முடியாது. அவர்கள் ரொம்பவே இன்னொசென்ட் . பல மறக்க முடியாத பணிகளும் உண்டு. அது பல அரசு சார்ந்த மற்றும் நீதிமன்றம் சார்ந்த பணிகள். இந்த மாவட்டத்து அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள், குட் பை”... என்று கண் கலங்கி முடித்தார்.
..
ஊட்டி வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் ஆளுநர்கள் பன்வாரிலால் பிரோக்கித், ஆர்.எம். ரவி நாட்டின், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
மாவட்ட ஆட்சியரை மனதார பாராட்டிவிட்டு சென்றுள்ளனர்...
நீலகிரியை விட்டு விடைபெற்றாலும், யானை வழித்தடம் சம்மதமாக உதவி செய்ய நீதிபதி அழைத்தால் ஊட்டிக்கு வருவார் இன்னசன்ட் திவ்வியா...
விகடகவி குடும்பம் சார்பாக இன்னசன்ட் திவ்வியா ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி.. ஆல் தி பெஸ்ட் கூறினோம்....
அவருக்கு ஒரு சிறந்த பதவியை அரசு கொடுக்கும்.....
Leave a comment
Upload