தொடர்கள்
கவிதை
அனுபவங்களே ஆசிரியராய் ....லாவண்யா மணிமுத்து

20220308170856853.jpg

அனுபவங்கள் பேசுகின்றன


காலம், நேரம், கனம், நொடி
இவை தரும் அனுபவம் தான் எத்தனை எத்தனை
ஆனந்தமாய் ஆழிப் பேரலையாய்
ஏற்றமாய் ஏமாற்றமாய் உற்சாகமாய்

உணர்வாய் மகிழ்வாய் மறுப்பாய்

வடுக்களாய் வாழ்வாய் இகழ்வாய் இதமாய்

முயற்சியாய் முரண்பாடாய்
தோல்வியாய் தோளாய்

ரணங்களாய் ரசனையாய்

ஆனால் முடிவுகள் அதுவல்ல என்று

உணர்ந்த தருணம் முதலாய்
நம்முடன் அனுபவங்கள் பேசுகின்றன

கடந்த நொடி ஒவ்வொன்றும் ஒரு சுகானுபவம்

நம்மை போதிமரம் இல்லாமலேயே புத்தன் ஆக்கும்

இதற்கு இணை இவ்வுலகில் ஏதுமில்லை

இக்கணம் முதல் அனுபவங்களை சேகரியுங்கள்
வாழ்வின் பொக்கிஷம் அதுவே என்று...