தொடர்கள்
பொது
ப்ராக்டிகல் சீரீஸ் – 6 டாடி…..எனக்கு ஒரு டவுட்டு………   :   மாலா ரமேஷ்

20220308214735929.png

“நான் ஒரு தடவ சொன்னா ….நூறு… தடவ சொன்னா மாதிரி….” அப்டின்னு பலவிதமான டோன்ல…. சத்தமா…. எத்தன டைப்ல…. சொன்னாலும் வொர்கவுட் ஆகாத ஒரே இடம்…..எது…? அட…கண்டுபுடிங்கப்பூ…..

அதேதான்…. குழந்தைங்க கேக்கற கேள்விகள்தான்……ஒண்ணொண்ணும் புல்லட் மாதிரிதான்…..அதிலும் சில பேர் வாய் ஓயாம…நீங்க மயக்கம் போடற அளவுக்கு கேள்விக்கணைகளைப் போட்டுத் தாக்குவாங்க பாருங்க…..

என்னப்பூ…பரிதாபமா பாக்கறீங்க…..? உன் ஜாய் இல்ல…எஞ்சாய்….அப்டீன்னு அதுக்கு பதில் சொல்லவேண்டியதுதான்….இன்னிக்குத் தேதியில….பல குழந்தைகளோட உலகம் செல்போன்லயும் டேப்லெட்லயும் லேப்டாப்லயும் சுருங்கிடுச்சு……அதனால…..வெளி இடங்கள்ள போய் விஷயங்கள உள்வாங்கி கேள்வி கேக்கற குழந்தைங்கள நிச்சயம் பாராட்டணும்…..

“இது என்ன..? அது என்ன….?”

“இது ஏன் இங்க இருக்குது….? அது ஏன் அப்படி இருக்குது…?”

“இது அந்த மாதிரி இருக்கக்கூடாதா…? இருக்கக்கூடாதுன்னா…ஏன் இருக்கக்கூடாது…?”

“இருக்கலாம்னா, ஏன் இருக்கணும்…?”

“இது இதுக்கு முன்னாடி எப்படி இருந்துச்சு…? எங்க இருந்துச்சு…? யார் செஞ்சாங்க…? ஏன் செஞ்சாங்க…? எதுக்காக செஞ்சாங்க….?”

“இதை நாம தூக்கிட்டு போயிட்டா என்ன ஆகும்…?”

“இது நாளைக்கும் இப்படியேதான் இருக்குமா…? இருக்காதுன்னா ஏன் இருக்காது…?”

என்று ஆரம்பித்து,

“இந்த ட்ராஃபிக் போலீஸ் அங்கிள் நாள் பூரா நிக்கறாரே…இவருக்கு கால் வலிக்காதா…? இவரு வீட்டுக்கு போவாரா…? எப்ப போவாரு…? யாராவது கூட்டிட்டு போவாங்களா…இல்ல, அவரே போவாரா..?”

“பெட்ரோல் பங்க்ல நம்ம எப்ப வந்தாலும் பெட்ரோல் இருக்குதே…அது தீரவே தீராதா…? தீரும்னா ,அப்றம் எப்படி அதை ஃபில் பண்ணுவாங்க…?”

இந்த ரேஞ்சில, பாக்கிறது…. கேக்கிறது… கவனிக்கிறதுன்னு எல்லாத்துலயும் கேள்விகள் கேட்டா நீங்க குடுத்து வச்சவங்கன்னு நினச்சிக்கணும்….

எவ்வளவுக்கு எவ்வளவு, அதுக்கெல்லாம் மயக்கம் போடாம பதில் சொல்றீங்களோ, அந்த அளவுக்கு அவங்களோட வட்டம் விரியும்….

பதில் சொல்லும்போது நேர்மையா சொல்லணும்….தெரியும்ன்னா தெரியும்னு சொல்லணும்…தெரியலன்னா, தெரிஞ்சிகிட்டு சொல்லணும்...தெரிஞ்சா மாதிரி, தப்பா சொல்றதோ, சமாளிக்கிறதோ கூடாது….

“சும்மா நொய்யி நொய்யினு…..எப்பப்பாத்தாலும் எரிச்சலைக் கிளப்பிட்டே இருக்கிறது……சே……வேற வேலையே இல்ல..,..இந்தா போன்…போ..போய் ஏதாவது பாரு….” ன்னு எரிஞ்சு விழுந்துடாம இருக்கிறது ரொம்ப முக்கியம்…..

அனிச்சப் பூ போலத்தான் குழந்தைங்க….சள்ளுனு நாம எரிச்சலைக் கொட்டினா, அந்தக் குறும்புத்தனம் போயி முகம் அப்படியே வாடிப் போயிடும்…., அப்பவும் திரும்பவும் வருவாங்கதான்… ஆனா, .திரும்ப திரும்ப ஒரு விஷயம் நடந்தா….அதுக்கப்றம் வரவே பயப்படுவாங்க…..செல்போன் போதும்னு செட்டில் ஆயிடுவாங்க…..

அதனால, ஆபீஸ்ல சம்பந்தமே இல்லாத எத்தனையோ பேரை சகிச்சிக்கிற பெரியவங்க.…குழந்தைங்ககிட்ட இயலாமைய காட்டாம…, திட்டாம…., பொறுமையா விஷயங்களச் , சொல்லிக்குடுக்கிறது….வலிமையான அடித்தளத்தை உருவாக்கும்….

எவ்வளவு பெரிய கோட்டைக்கும் ஆதாரம் என்பது அதன் அடித்தளம்தானே…

அடுத்த வாரம் சந்திப்போம்……