
“என் பிராய முதிர்ச்சியாலும் சரீரத் தளர்ச்சியாலும் முன்பு போல எந்தக் காரியத்தையும் தனியே இருந்து நிறைவேற்றமுடியவில்லை.ஆயினும் தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிப்பித்தலில் உள்ள ஆவல் தணியவில்லை. தமிழ்த்தெய்வமே அவ்வப்பொழுது என் கவலையை நீக்கி வருவதாக எண்ணுகிறேன்” -தமிழ்த்தாத்தா நினைவுநாள்

அன்னைத் தமிழ் பொக்கிஷங்கள் அழியாமல் காத்து
பின்னைக்காலம் போற்றி மகிழவே
பதிப்பித்து
இன்னை மனிதர் தமிழறிய உதவி
என்னையும் உன்னையறிய வைத்து
எம் அன்னைத் தமிழை
உலகறியச் செய்த
உத்தமதானபுரம் தந்த
சரஸ்வதி மைந்தனே
எந்தைதந்தை முன் தொலைத்த தமிழ்நிதியம்
மீட்டெமக்குத்தந்த
சுவாமிநாதனே!!
உன்னை நினைந்தேன்
எம் அன்னை நினைந்தேன்
நாநிலமதில் தமிழோடு உன் புகழ் தயங்காது பரவிடவே
உறுதி கொண்டேன் உன் நினைவகற்றேன்..
தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களின் நினைவு நாளில் அவர் நினைவோடு விகடகவி அவரடி பணிகிறான்.


Leave a comment
Upload