தொடர்கள்
அரசியல்
மீண்டும் ராமரை மீட்ட பராசரன் - ஶ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20220329215453335.jpeg

எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் நம் கையில் இருப்பது பிரார்த்தனை மட்டுமே.

ஆம் அப்படிதான் சென்னை மேற்குமாம்பலத்தை சேர்ந்த பக்தர்கள் ஏப்ரல் 11ஆம் தேதி ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர். அங்குள்ள அயோத்யா மண்டபம் சட்டத்திற்கு விரோதமாக அறநிலையத்துறை அதிகாரிகளால் அத்துமீற்றி கையகப்படுத்தப்பட்டது. காலை ஏழுமணிக்கே வந்த அதிகாரிகளை உள்ளே நுழையவிடாமல் தடுத்த அப்பகுதியை சேர்ந்த பொது மக்களும், அறப்போராட்டம் செய்த பாஜவினரும் கைது செய்ய பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதன் வழக்கு ஒரு வழியாக உச்ச நீதிமன்ற நீதிபதி திரு பண்டாரி அவர்கள் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அயோத்யா மண்டபம் கோயில் அல்ல அது ஒரு சொசைட்டி. அதாவது சமூக நல கூடம் தான். இங்கு சத்சங்கங்களும், உபன்யாசங்களும் மட்டுமே நடக்கிறது அதனால் இதனை அறநிலையத்துறை கையகப்படுத்த முடியாது என்று உத்தரவு பிறப்பித்தது. அதே சமயம் அங்கு ஏதாவது முறைகேடு நடக்கிறது என்று அறியப்பட்டால் அதனை விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

இப்போது தான் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். மேற்குமாம்பலத்தின் ஒரே அடையாளம் அயோத்யா மண்டபம் தான். அதனை பறிகொடுத்தது போல் துக்கத்தில் இருந்த மக்கள் மத்தியில் மகிழ்ச்சி சூழ்ந்தது.

ராமரின் பிறந்த இடமான அயோத்தியாவையே இத்தனை ஆண்டுகாலம் போராடி வென்ற பராசரன் அவர்களின் மகன் சதிஷ் பராசரன் இங்கிருக்கும் அயோத்தி மண்டபத்தை விட்டுவிடுவாரா என்ன.

இந்த வழக்கை பற்றியே மிக விரிவான ஒரு காணொளியை மூத்த பத்திரிகையாளர் திரு கோலாகலாஸ் ஸ்ரீநிவாசன் அவர்களின் காணொளி இங்கே