# மகளதிகாரம் - 12 #
"உண்டியல் ஏன்ப்பா எப்போதும்
கர்ப்பமாக இருக்கு?" என்ற
மகளின் சிறு வயதுக்கேள்விக்கு
பதில் தேடி அலைந்தும் கிட்டாது போகவே
பதிலற்ற கேள்விகளுள்
ஒன்றென இருக்கட்டும் என விட்டுவிட்டேன்
மகளுக்கு மகள் பிறந்து
அதே கேள்வியை
அவளிடம் கேட்டாள்
பதிலென்னவாய் இருக்கக்கூடும் என்கிற ஆவல்
எங்கள் இருவருக்கும்
"உன் தாத்தாவே அதுக்கு இன்னும் பதில் சொல்ல
அவர்ட்டயே கேளு..." என்றாள்
நிறம் மங்கி
தூசிபிடித்து
ஊமையாய் உப்பிப் பெருத்திருந்த
உண்டியலை உடைப்பதைத் தவிர
வேறு வழியேயில்லை
சிதறிக்கிடந்தது கடந்த காலம்
வீடு முழுக்க
Leave a comment
Upload