தொடர்கள்
ஆன்மீகம்
பசுவுக்கு சீமந்தம் ஊரெங்கும் கொண்டாட்டம் - மாலா ஶ்ரீ.

20230218014332165.jpeg

கரூர் மாவட்டம், தண்ணீர் பந்தல் பாளையம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த நவநீதகிருஷ்ணன் கோயில் உள்ளது. இங்குள்ள கோசாலையில் நாட்டு காங்கேயம் பசுவும், கன்றுக்குட்டியும் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நாட்டு காங்கேயம் பசுமாடு சினை பிடித்ததை தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த காங்கேயம் பசுவுக்கு கோயில் நிர்வாகம் சீமந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, 7 மாத சினை பசுவுக்கு கர்ப்பிணி பெண்களுக்கு செய்வது போல், வளையல்களால் தைக்கப்பட்ட புடவை, வால் மற்றும் திமிலுக்கு வாழை மட்டையை கொண்டு பூக்களால் அலங்கரித்து கட்டினர்.

பின்னர் வளையல் மற்றும் பூக்களால் செய்யப்பட்ட மாலைகளை அணிவித்து, அலங்காரம் செய்தனர். இதைத் தொடர்ந்து பசுவுக்கு பெண்கள் சந்தனம், குங்குமம் வைத்தனர். இதையடுத்து கோயில் குருக்கள் மந்திரம் முழங்க, பசுவின்மீது பூக்கள் தூவி காங்கேயம் பசு ஆசீர்வதிக்கப்பட்டது. பின்னர் அந்த பசுமாட்டுக்கு தீபாராதனை காட்டி, நைவேதியம் வழங்கப்பட்டது. இதில் பலரும் சினை பசுமாட்டை வலம் வந்து வணங்கினர். பின்னர் அந்த பசுமாட்டுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்களுக்கு 7 வகையான உணவு வழங்கப்பட்டது.

உங்களுக்கு மறு ஜென்மத்தின் மீது நம்பிக்கை இருந்தால் இந்த பசு சென்ற ஜென்மத்தில் யாராக பிறந்திருக்கக் கூடும் என்று யோசிக்கத் தோன்றுகிறதா ???