தொடர்கள்
பொது
பிளேடு பக்கிரி - தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது. மாலா ஶ்ரீ.

20230218014615353.jpg

ராஜஸ்தான் மாநிலம், ஜலூரை சேரந்தவர் யஷ்பால் ராவ். சில மாதங்களுக்கு முன் யஷ்பால் ராவ் வேலை செய்த நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அவர் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்திருக்கிறார். ஒருகட்டத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டில் தனியே இருந்தபோது, அருகில் இருந்த கடைக்கு சென்று, 3 பாக்கெட் ஷேவிங் பிளேடுகளை வாங்கியுள்ளார்.

பின்னர் வீடு திரும்பி, தான் வாங்கி வந்த 3 பாக்கெட் ஷேவிங் பிளேடுகளையும் யஷ்பால் ராவ் இரண்டாக உடைத்தார். பின்னர் அவற்றை தனது வாய்க்குள் போட்டு விழுங்கியுள்ளார். சில நிமிடங்களில் அவருக்கு ரத்த வாந்தி ஏற்பட்டது. அவரை சக நண்பர்கள் மீட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், யஷ்பால் ராவ் ஷேவிங் பிளேடுகளை விழுங்கியிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த 15ம் தேதி 7 டாக்டர்கள் கொண்ட குழு, யஷ்பால் ராவுக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, அவரது வயிற்றில் இருந்து 56 ஷேவிங் பிளேடு துண்டுகளை அகற்றினர். தற்போது யஷ்பால் ராவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதெப்படி இத்தனை பிளேடையும் முழுங்கி விட்டு ஒன்னும் ஆகவில்லை ??

அது என்ன பிராண்டு பிளேடு என்று தெரிந்து விட்டால் அந்த பிளேடு வியாபாரம் படுத்து விடும் என்பது நிச்சயம்.