தொடர்கள்
வரலாறு
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - ஒரு மறுக்க முடியாத அவதாரம்

2023021721561852.jpg

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த நேதாஜியின் மரணம் இன்றும் மர்மமாகவே இருக்கிறது.

ஜப்பானிய சரணடைதல் பற்றிய செய்தி வந்தவுடன், சிங்கப்பூரில் இருந்து வெளியேறும் ஜப்பானிய குண்டுவீச்சு விமானத்தில் தெரியாத இடத்திற்குச் செல்ல நேதாஜி முடிவு செய்தார். ஆகஸ்ட் 18, 1945 அன்று ஃபார்மோசாவில் (தைவான்) தைபே மீது மோசமான விமானம் விபத்துக்குள்ளானது மற்றும் விபத்தில் நேதாஜி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படியானால், இந்த விபத்திற்கு ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ந்தாஜி செய்த விசித்திரமான ஆசை நிறைவேறியது. "நான் எப்படிப்பட்ட மரணத்தை விரும்புகிறேன் என்று உனக்குத் தெரியுமா?" என்று சக ஊழியரிடம் கேட்டுள்ளார். நான் உயரமாக பறந்துகொண்டே இருக்க வேண்டும், அப்போது நான் திடீரென்று பூமியில் விழுந்து இறக்க வேண்டும். அது அற்புதமாக இருக்கும்.

ஆனால் தைவான் நாடு, அப்படி ஒரு வானூர்தி விபத்து நடக்கவில்லை எனக் கூறி மறுத்தது.

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cd/Subhas_Chandra_Bose_%28tokyo%29.JPG/200px-Subhas_Chandra_Bose_%28tokyo%29.JPG

ரெங்கோயி கோயில், ஜப்பான்

இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. 'நேதாஜி இறந்துவிட்டார்' என்பதைப் பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். அது தான் ஜப்பானின் ரெங்கோயி கோயிலில் இருக்கிறது. ஆயினும்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதலாக மற்றும் பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர்.

விசாரணை ஆணையங்களும் அதன் முடிவுகளும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956 ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை, டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான் என்று அறிக்கை கொடுத்தனர். ஆனால் மூன்றாவது உறுப்பினரான சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்), இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார்.

அதன்படி 1970-ம் ஆண்டு ஜுலை மாதம், முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது, ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. டி. கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை ஆணையம்” அமைக்கப்பட்டது. அவர் நிப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை தந்தார். 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , 'முகர்ஜி ஆணையம்', என மூன்றவது ஆணையம் அமைக்கப்பட்டது.

இதில் முகர்ஜி ஆணைய அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில், நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும், சோவியத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறியது. அதனாலும் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.

1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள்

  • விமான விபத்துக்குப் பிறகு நேதாஜி ரஷ்யாவில் காவலில் சில ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1949-ல் ஜோசஃப் ஸ்டாலினும் வ்யாஸ் லால் மொலேடோவ்-ம் நேதாஜி ரஷ்யாவில் தங்கியிருப்பது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.0
  • 1949-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான் நேதாஜியை ரஷ்யாவில் சந்தித்ததாகவும் அவருடன் சீனாவில் தங்கியதாகவும் கூறிப்பிட்டார். இவர் இவ்வாறு கூறிய பிற்பாடுதான் இந்தியாவில் நேதாஜியை பற்றிய மர்மம்த்தை அறிய மக்களிடம் அலையை ஏற்படுத்தியது. அதுவே நேருவை ஷா நவாஸ்கான் கமிஷன் அமைக்க மறைமுகமாக தூண்டியது.
  • மேலும் திடுக்கிட வைக்கும் விஷயம் இந்தியாவின் ரஷ்ய தூதர் Dr. S. ராதாகிருஷ்ணன் நேதாஜியை ரஷ்யாவில் வெளியே தெரியாத இடத்தில் சந்திக்க அனுமதிக்கப்பட்டார் என்பதாகும்.
  • காபூலில் ஆப்கன் கவர்னர் கோஸ்ட் -இடம் ஆப்கனுக்கான ரஷ்ய தூதர்," மாஸ்கோவில் காங்கிரஸ் அகதிகள் உள்ளனர். அதில் நேதாஜியும் உள்ளார். கிலாசி மலாங்கிற்கு நேதாஜியுடன் நேரடித் தொடர்பு உள்ளது." என்று கூறியுள்ளார்.
  • 1945க்குப் பிறகு அதாவது இரண்டாம் உலகப்போருக்குப் பின் வியட்னாமின் மரியாதைக்குரிய தலைவர் ஹோஸோமின் - உடன் நேதாஜிக்கு நட்பு இருந்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் வியட்னாமில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
  • 1945 டிசம்பர் 20 அன்று வெளியான செய்திக்குறிப்பில் நேதாஜி உயிருடன் இருப்பதாக H.V. காமத் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • மோலொடோஃப் என்ற ரஷ்ய வெளியுறவு மந்திரி மார்ச் 1946-ல் நேதாஜி ரஷ்யாவில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
  • 1946 நவம்பர் 7 அன்று ராஜா யுவராஜ் தத்தா சிங் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்கின் துணைத்தலைவரான ஷீல் பத்ர யாஜீ நேதாஜி, உயிருடன் இருப்பதாகக் கூறியதாகக் குறிப்பிடுகிறார்.
  • மாஸ்கோவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள படோல்ஸ்க் இராணுவ ஆவணக் காப்பகத்தில் அலெக்சாண்டர் கொலசிரிகோவ் என்ற warsaw pact-ன் முன்னாள் மேஜர் ஜெனரல் 1996 அக்டோபரில் சில ஆவணங்களைப் பார்த்துள்ளார். அதில் நேதாஜியை ரஷ்யாவில் தங்க வைத்திருப்பதன் பல்வேறு விளைவுகள் குறித்து ஆராய்ந்ததற்கான தகவல்கள் உள்ளன. ஆனால் அதை நகலெடுக்கவோ ஆவண எண் போன்றவற்றைக் குறிப்பெடுக்கவோ அவர் அனுமதிக்கப்படவில்லை.

நேதாஜி உயிருடன் இருந்ததற்கு இவ்வளவு சாட்சியங்கள் இருந்த போதும் அதைப்பற்றி ஆராய காங்கிரஸ் அரசாங்கம் தயாராக இல்லை.

பகவான்ஜி

பகவான்ஜி அல்லது கும்னாமி பாபா(கும்னாமி பாபா என்றால் பெயரில்லாத துறவி என்று பொருள்) என்ற துறவி உத்தரப்பிரதேசத்தில் அயோத்யாவுக்கு அருகில் ஃபைசாபாத் என்ற இடத்தில் ராம்பவன் என்ற இல்லத்தில் வசித்தார். அவர் நேதாஜிதான் என்று மக்கள் நம்புகிறார்கள். அதற்குப் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன. Dr. B. Lal (Additional Director of the National Institute of Criminology and Forensic Science) என்ற கையெழுத்தியல் நிபுணர் முகர்ஜி கமிஷன் முன்பு ஆஜராகி "பகவான்ஜி மற்றும் நேதாஜி இருவரின் கையெழுத்து பொருந்துகிறது", என்று சாட்சியம் அளித்தார். பகவான்ஜி லக்னோவில் ஆலம்பா என்ற இடத்தில் ஸ்ரீநகர் என்ற பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். வாடகை கொடுக்க இயலாததால் வீட்டு சொந்தக்காரர் தொந்தரவினால் காதியா என்ற கிராமத்தில் கோமதி நதிக்கரையில் ஒரு இடிந்த சிவன் கோவிலில் அடுத்த ஆறேழு மாதங்கள் வசித்தார். பகவான்ஜி ஒரு முறை "ஒரு துறவி ஆரம்ப கால வாழ்க்கையைப் பொறுத்தவரை இறந்தவராவார். அந்த துறவி இந்து மத முறைப்படி இயற்கையான மரணம் அடைய விரும்புகிறார். போர்க்குற்றவாளியாக அல்ல", என்று கூறினார். உத்தரப்பிரதேசத்தின் அப்போதைய முதல்வரான Dr.சம்பூர்ணாநந்த் டிசம்பர் 1954 முதல் ஏப்ரல் 1957 வரை பகவான்ஜியுடன் தொடர்புகொண்டு அவரது தேவைகளைக் கவனித்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

பகவான்ஜியுடன் தொடர்பில் இருந்தவர்கள்

சுரேஷ் போஸ்

நேதாஜியின் மூத்த சகோதரர். ஷாநவாஸ் கமிட்டியின் உறுப்பினர். கமிட்டி முடிவுடன் ஒத்துப்போக மறுத்துவிட்டார்.

திலீப்ராய்

இவர் D.L. ராய் என்ற பிரபலமான பாடகரின் மகன். பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். நேதாஜி லண்டனில் இருந்தபோது உடன் இருந்தவர். இவர் துறவியாகி 1980 களில் இறந்தார்.

சுனில்தாஸ்

தேசப்பற்று மிகுந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருடைய சகோதரர் அனில் தாஸ் டாக்கா சிறையில் சாகும் வரை அடித்துக் கொல்லப்பட்டார். அவருடைய தம்பியும் சகோதரியும் கூட சுதந்திரப் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள். அவர் ஒரு MSc பட்டதாரி. ராமன் விளைவு பற்றி அமெரிக்க இயற்பியல் இதழில் எழுதியுள்ளார். பகவான்ஜியின் நம்பிக்கைக்கு உரியவர்.

பசந்தி தேவி

சித்தரஞ்சன் தாஸின் மனைவி. நேதாஜியைத் தன் மகன் போல் நேசித்தார். அவரைப்பற்றிய செய்திகளால் மிகவும் வருத்தம் அடைந்து இருப்பதாக அஷூடோஸ் காளி என்பவர் பகவான்ஜிக்கு எழுதியுள்ளார்.

பபித்ரா மோஹன் ராய்

இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்தவர். நேதாஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். 1962-லிருந்து 1985-ல் பகவான்ஜி மரணம் அடையும் வரை உடனிருந்தவர்.

சமர் குஹா

சமர் குஹா என்பவர், Nethaji: Dead or Alive என்ற நூலை எழுதியுள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் நேதாஜியுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர். பல முறை சந்தித்துள்ளார். நேதாஜி இந்தியாவில் இருப்பதாக சமர் குஹா அறிவித்தவுடன் பகவான்ஜி அவருடன் தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொண்டார். அவரது பெரும் முயற்சியினால் நாடாளுமன்றத்தில் நேதாஜி படம் வைக்கப்பட்டது. 1967-ல் ஏப்ரல் 3-ல் 350 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமிட்ட கோரிக்கையினால் கோசலா கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. நேதாஜி மத்தியப் பிரதேசத்தில் அமர்கந்தகா என்ற இடத்தில் செப்டம்பர் 27 1968 முதல் அக்டோபர் 2 1968 வரை இருந்ததாகவும் உத்தரப்பிரதேசத்தில் மணிப்பூரி என்ற இடத்தில் பிப்ரவரி, மார்ச் 1969 ல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

லீலாராய்

1963-ல் இருந்து அவர் இறக்கும் வரை (1970) பகவான்ஜியின் செலவுகளைக் கவனித்துக் கொண்டார். 1963 மார்ச் 25 அன்று ஸ்ரீகாந்த் என்பவரிடம் கூறுமாறு லீலாராயிடம்,"நான் என்னை வெளிப்படுத்துவது யாருக்கும் நன்மை தராது", என்று பகவான்ஜி கூறினார். லீலாராய் தனது கணவருடன் இந்திய காங்கிரசில் இருந்தவர். பின்னர் நேதாஜி காங்கிரசிலிருந்து விலகிய போது அவருடன் சேர்ந்துவிலகி ஃபார்வர்டு ப்ளாக்கில் சேர்ந்தனர். அவர் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல பள்ளிகள், நிறுவனங்கள் துவக்கியவர். 1970-ல் லீலாராய்க்கு நேதாஜி எழுதிய கடிதம் தான் கையெழுத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கடிதம் ஆகும். பகவான்ஜி அறிவுரையின்படி அவர் 1963 செப்டம்பர் 7 அன்று திலீப் ராய்க்கு " உங்கள் நண்பர் இந்தியாவில் உயிருடன் இருக்கிறார்", என்று கடிதம் எழுதினார்.

1978-ல் மொரார்ஜி தேசாய் பிரதம மந்திரியாக இருந்தபோது முதல் 2 கமிட்டிகளின் முடிவுகளைத் தள்ளுபடி செய்தார். 1983 ஜூலை 6 அன்று Nethaji: Dead or Alive என்ற நூலின் மறு வெளியீட்டு விழாவில் மொரார்ஜி தேசாய், "நேதாஜி உயிருடன் இருக்கிறார். ஆனால் துறவு பூண்டுள்ளார்", என்று கூறினார்.

ஜஸ்டிஸ் முகர்ஜி பெங்காலியில் Times Now -இடம் 2010-இல் பகவான்ஜி நேதாஜியாக இருக்க 100% வாய்ப்புள்ளது." என்று கூறியது ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

பகவான்ஜி 1985 செப்டம்பர் 16 அன்று இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அவரது பொருட்கள் என்று கொடுக்கப்பட்டுள்ள பட்டியலைப் பார்க்கும் போது அவர் நேதாஜி தான் என்பது சந்தேகமில்லாமல் நிரூபணம் ஆகிறது. Charles Dickens-இன் புத்தகங்கள் பல, ஷேக்ஸ்பியரின் மொத்தப் படைப்புகள் அடங்கிய நூல், இன்னும் பல ஆங்கில புத்தகங்கள், புகைப்படங்கள் (அவை அனைத்தும் நேதாஜியுடன் சம்பந்தப்பட்டவை), பத்திரிக்கைக் குறிப்புகள் (அவை அனைத்தும் நேதாஜியுடன் சம்பந்தப்பட்டவை) போன்றவை அங்கிருந்தவை ஆகும். பகவான்ஜியின் பிறந்த நாளும், நேதாஜியின் பிறந்த நாளும் ஜனவரி 23 தான்.

காங்கிரஸில் இருந்த பலர் மூலம் அவர சந்தித்த துரோகங்கள் ஏராளம். அது தான் மனதிற்கு துக்கமாக இருக்கிறது.

பாரத ரத்னா விருது

1992-இல் சுபாஷ் சந்திரபோசுக்கு, இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான, "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால், சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை. எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.

இத்துடன் மாவீரனின் வரலாறு முற்றுப்பெறுகிறது.

ஜெய் ஹிந்த்.