தொடர்கள்
தொடர்கள்
:சென்னை மாதம் - 126 - ஆர்.ரங்கராஜ்

20240312180842308.jpg
மூன்றாம் குலோத்துங்கனின் 4 கல்வெட்டுகள் சென்னையின் பழைய பெயர் புலியூர் கோட்டம் என்பதை நிருப்பிகின்றன.

மூன்றாம் குலோத்துங்கனின் (சோழனின்) மேலும் 4 கல்வெட்டுகள் சென்னையின் பழைய பெயர் புலியூர் கோட்டம் என்பதை நிருப்பிகின்றன.

1. மூன்றாம் குலோத்துங்கன், ஆட்சி ஆண்டு 28, கி. பி. 1206, திருநீர்மலை, காஞ்சிபுரம் மாவட்ட கல்வெவெட்டுகள் V: 733/2017:

"ஜெயங்கொண்ட மண்டலத்து புலியூர்க் கோட்டத்து கோவூர் என்கிற உலகமாதேவி சதுர்வேதிமங்கலத்து ஊராருக்கு மன்னன் அளித்த ஆணை. இவ்வூரிலிருந்த 75 வேலி நிலத்தினைத் திருநீரமலை திருமலையில் உள்ள ஸ்ரீநரசிங்கத்து எம்பெருமானுக்கும், மலை அடிவாரத்தில் உள்ள திருவண்ணமேனி எம்பெருமானுக்கும் தேவையான வழிபாட்டுச் செல்விளங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது."

2. மூன்றாம் குலோத்துங்கன், ஆட்சி ஆண்டு 23, கி. பி. 1210, திருநீர்மலை, காஞ்சிபுரம் மாவட்ட கல்வெவெட்டுகள் V: 734/2017; இ.க.ஆ. அறிக்கை 557/1912:

இடம்: நீர்வண்ணர் கோயில் ராமர் சன்னதி தென்புறச் சுவர்.

குறிப்புரை: அணைக்கரைச்சேரி என்கிற சோழகங்கதேவ நல்லூர் ஊரைச் சார்ந்த பஞ்சநதிவாண நீலகங்கரையன் நல்லநாயன் என்றழைக்கப்பட்ட சோழகங்கதேவன் என்பவன் பம்மல் நக்க நாயனார்க் கோயிலுக்கு 10 வேலி நிலத்தினைத் தேவதானமாக வழங்கியுள்ளான்.

3. அரசன்: திரிபுவன வீரராசேந்திரன் (மூன்றாம் குலோத்துங்கன்), சோழர்; ஆட்சி ஆண்டு : 34, வரலாற்று ஆண்டு : கி.பி. 1212, இ.க.ஆ. அறிக்கை : 556/1912; தொடர் எண் : 735/2017

அரசன்: திரிபுவன வீரராசேந்திரன் (மூன்றாம் குலோத்துங்கன்), சோழர்; இடம் : நீர்வண்ணர் கோயில் ராமர் சன்னதி தென்புற அதிட்டானம்.

குறிப்புரை : ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் புலியூர் கோட்டம் என்கிற குலோத்துங்கசோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டுப் பிரிவிலுள்ள பம்மல் ஊர்க் கோயிலின் இறைவன் பம்ம நக்க நாயனாற்கு திருவைகாசி திருநாள் வழிபாட்டுச் செலவினங்களுக்காக, திருமடைவளாகத்தில் இருப்பவர்களிடம் வசூலிக்கப்படும் வரியினைப் பயன்படுத்திக் கொள்ள பஞ்சநதிவாணன் நல்லநாயன் என்கிற சோழகங்கதேவன் ஏற்பாடு செய்துள்ளான்.

4. அரசன்: சோழர்: வீரராஜேந்திரன் (மூன்றாம் குலோத்துங்கன்): கிரந்தங் கலந்த தமிழ்; காஞ்சிபுரம் மாவட்ட கல்வெவெட்டுகள் V: தொடர் எண் : 736/2017;
கி. பி. 1178-1218; இ.க.ஆ. அறிக்கை 559/1912:

இடம்: நீர்வண்ணர் கோயில் கோபுர வாயிலின் இடதுபுறம்.

குறிப்புரை: ஜயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு சுரத்தூர் நாட்டு மடப்புறம் தண்ணியாலத்தூர் என்கிற ஊரில் உள்ள பள்ளிப்படை அகரத்து விஸ்வேஸ்வர நாயனார் இறைவனுக்குப் பூசை மற்றும் கோயில் திருப்பணிகளுக்காக பஞ்சந்திவாணன் நீலகங்கரையன் என்பவன் 12 வேலி எட்டு மா அளவு நிலம் தானமளித்துள்ளான்."

நன்றி : த. நா. அ. தொல்லியல் துறை (கல்வெட்டு ஆதாரங்கள்)