அஜீத் ஸ்பெயினில் கலந்து கொண்ட பார்சிலோனா F1 சர்க்யூட் கார் ரேஸ் புகைப்படங்கள் இது!
இட்லி கடை
இட்லி கடை படத்தை இயக்கும் தனுஷ் மெயின் ஹீரோ இல்லையாம் கௌரவ வேடம் தானம் மெயின் ஹீரோ அருண் விஜய் தான் என்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ்
தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் பேபி ஜான். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது கெட்டப்பை ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றி இருக்கிறார்.
வில்லி வேடம் ஓகே
அஜித்தின் விடாமுயற்சி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் ரெஜினா . இப்போது வில்லி வேடம் வந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார்.
தொழில்
நடிகை சிம்ரன், பவானி சங்கர், நடிகர் சூரி, ஆர்யா, ஜீவா ஆகியோர் சம்பாதித்த பணத்தை ஓட்டல் தொழிலில் முதலீடு செய்து இருக்கிறார்கள்.
பூஜாஹெக்டே
சமீபத்தில் கேரளா போன நடிகை பூஜாஹெக்டே ஆயுர் வேத சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார் எல்லாம் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளதான்.
அனுஷ்கா
அனுஷ்கா சுருட்டு பிடிக்கும் போஸ்டர் வெளியாகி பரபரப்பாக இருக்கிறது. காட்டி என்ற தெலுங்கு படத்தில் தான் இந்த காட்சி வருகிறதாம். இதுபோன்ற மிரட்டலான வேடத்தில் நடிக்க தயார் என்கிறார் அனுஷ்கா.
100 கோடி
100 கோடி நடிகர் துல்கர் சல்மான் மீனாட்சி சவுத்ரி நடித்த லக்கி பாஸ்கர் இரண்டு வாரங்களில் 100 கோடி வசூலை அள்ளியது.
சுட சுட
வயசு வித்தியாசம்
லப்பர் பந்து படத்தில் ஹீரோவாக நடித்த ஹரிஷ் கல்யாண்க்கு வயது 34. அவரது மாமியாராக நடித்த ஸ்வாசிக்காவின் வயது 32 வலைதளத்தில் இப்போதைக்கு இதுதான் பேசும் பொருள்.
100 கோடி
புஷ்பா 2 படத்தின் ப்ரமோஷனுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்.
பிந்து மாதவி
மன அழுத்தம் காரணமாக அடிக்கடி ஆன்மீக மடங்களுக்கு சென்று வருகிறார் நடிகை பிந்து மாதவி.
அடிப்பார்
அந்த காலத்தில் நான் தவறு செய்தால் என்னை என் அம்மா அடிப்பார். இப்போது அந்த வேலையை என் மனைவி எடுத்துக் கொண்டு விட்டார் என்று நகைச்சுவையாக குறிப்பிடுகிறார் நடிகர் அல்லு அர்ஜுனா.
நவ்யா நாயர்
நடிகை நவ்யா நாயருக்கு பேய் கனவுகள் வந்து தூக்கத்தை கெடுக்கிறதாம்.
அல்லு அர்ஜுனா
சமீபத்தில் தமிழ்நாட்டில் புஷ்பா -2 பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழில் பேசி அசத்தினார் அல்லு அர்ஜுனா. தெலுங்கு ரசிகர்கள் தெலுங்கில் பேச செப்ப , தமிழ்நாட்டில் தமிழில் தான் பேச வேண்டும் என்று தமிழில் பேசினார்.
மாளவிகா மேனன்
மாளவிகா மேனனுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்துக்களை வெளியிட்ட வரை கைது செய்து கொச்சி போலீஸ் விசாரித்து வருகிறது.
Leave a comment
Upload