தொடர்கள்
பொது
தற்காலிக புயல் –கண்ணாழ்வார்

20241028205118184.jpeg
சென்னையை அதன் சுற்றுபுறங்களை புயல் தாக்கும் என்று கடந்த ஒரு வாரமாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் பல ஹேஸ்சியங்கள் சொல்லி வந்தனர்.
வீட்டிலிருந்த மாமி டிவியை பார்த்து கொண்டிருந்த என்னை அசடு வழியாமல் ஒரு கிலோ தக்காளி, பச்சை காய்கறி , வாழைத்தண்டு போய் வாங்கி வந்து வையுங்க … ஒரு வாரம் மழை என்றாலும் நான் காய்கறிகளை திருத்தி சாம்பார், அவியல் , சாத்துமது எல்லாம் செய்து சமாளிக்குறேன் என்று என்னை மார்க்கெட்டுக்கு அனுப்பி வைத்தாள்.
மார்க்கெட் சென்றதும் நான் பரபபரப்பாக மாமி போட்ட பட்டியலை காண்பித்து ஒரு வாரம் மழை வரப்போகுதாமே ….சீக்கிரம் லிஸ்ட் படி காய்கறி கொடுப்பா என்றேன்…

கடைக்காரர் என்னை பார்த்து சிரித்து டிவியை பாக்குறீங்களா வீட்டிலே ….மழை எல்லாம் வராது சென்னை க்கு புயலும் இல்லை …என்று கிண்டல் செய்தவாறு காய்கறிகளை பையில் அடுக்கி பில் வாங்கி கொண்டவர் …இனி டிவியில வானிலை அறிக்கை பார்க்காதீங்க என்று சிரித்தவாறு சொல்லி அனுப்பி வைத்தான்.

2024102820520732.jpeg
எப்ப தான் மழை வரும் …துணியை வாஷிங் மெஷினில் போட்டு எடுத்து அவசரமாக மாடிக்கு எடுத்து சென்ற மாமி அங்கு துணிகளை உலர்த்த கொடியில் போட்டு விட்டு வந்தாள்.
மீண்டும் இலங்கை அருகே தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி 3 கிமீ வேகத்தில் நகருகிறது என்று வானிலை அறிக்கை வாசிக்கப்பட்டது.

20241028205245599.jpeg
விகடகவி 8 ம் பிறந்தநாள் அட்டை படம் தயாரித்து வந்தாகி விட்டதா ? என்று ஆசிரியர் போனில் கேட்டதும் தான் …அடடா மறந்து விட்டோமே என்று ஓவியர் அரஸ் இடம் ரேப்பர் ரெடி பண்ணி கொடுங்க.. சென்னையில் புயல் வர வாய்ப்பு கரெண்ட் கட் ஆயிடும்னு சொல்றாங்க என்றதும்…வானிலை அறிக்கை பார்க்கிறீங்களா …மழை வருதா பார்ப்போம் …ரேப்பர் ஒரு மணி நேரத்தில் ரெடி பண்ணி அனுப்புறேன் சொல்லி விட்டு டிவியில , சமூக வலைதளங்களில் வானிலை அறிக்கை பார்க்காதீங்க சொல்லிவிட்டு செல்பேசியை துண்டித்தார்.


இதற்குள் ஹாங்காங்கிலிருந்து தலைமை பொறுப்பாசிரியர் செல்போனில் அழைத்து …என்னய்யா பண்ணிட்டு இருக்கீறீர் …ரேப்பர் வந்தாச்சா என்று அதட்டினார்….புயல் சென்னைக்கு வருதுன்னு டிவியில் செய்தி போகுதுன்னு சொன்னேன்….எவ்வளவு சொன்னாலும் நீ திருந்த போறதில்ல….சென்னைக்கு புயல் வந்தா உனக்கென்னய்யா….நான் ஹாங்காங்கிலிருந்து புயலுக்கு முன் விமானத்தில் சென்னை பறந்து வந்துவிடுவேன் .அதற்குள் விகடகவி 8 ரேப்பர் தயாராக இருக்கனும் …டிவியை ஆப் செய்துவிட்டு வேலையை பாருமய்யா என்றார்.


அப்பாடா …டிவியை ஆப் செய்து விட்டு செல்போனில் ரேடார் மூலம் புயல் எங்கே இருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தேன்.
நான் துணையாசிரியர் ஜாசன் பேசுறேன்…ரேப்பர் வந்தாச்சா…எத்தனை கட்டுரைகள் இந்த இதழில் வைக்கலாம் என்று அதட்டினார்.
சார் ….வானிலை ஆராய்ச்சி நிலையம் செய்தி பார்த்துகிட்டு இருக்கேன்…உன்னோட எனக்கு பெரும் தொல்லையா போச்சுய்யா….சினிமா விழா, வானிலை செய்திகள் முதல் ஆளா போய் நிகழ்ச்சியில் கலந்துக்குறே உன்னைய என்னத்த பண்றதுன்னு தெரியல….சீக்கிரம் ரேப்பர் வாங்கி அனுப்பு பார்க்கணும் என்று அதட்டி செல்பேசியை துண்டித்தார்.

20241028205916434.jpeg
இதற்குள் மழை நல்லது என்று சொன்ன அமைச்சர் நேரு அப்பலோ மருத்துவமனை சிகிச்சையில் இருக்கிறாரே போய் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்புவதற்குள் …
சென்னைக்கும் கடலூருக்கும் இடையே தற்காலிக புயல் வெள்ளி-சனிக்கிழமைகளில் கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி பாலசந்திரன் சொல்லவும் டிவி முன்பு செய்தியை பார்க்க அமர்ந்தேன்.
விகடகவி ஓவியர் அரஸ் ரேப்பர் அனுப்பி 2 மணி நேரம் ஆகுது செக் பண்ணிட்டு சொல்லுங்க…டிவி பார்க்குறீங்களா என்று கேட்டு வேலையை பாருங்க சார் இப்பவே வெள்ளிக்கிழமை இரவு 12 மணி மேல ஆகுது .
சனி காலை 8 மணிக்கு
8வது பிறந்த நாள் விகடகவியை ரீலிஸ் செய்யணும் என்று அவர் அதட்டி விட்டு போனை கட் செய்தார்.
புயல் எப்படியும் வரும் என்று காத்திருந்தேன்….தற்காலிக புயல் வரவில்லை அதற்கு பதில் சில்லென்று சென்னையில் ஏசி போட்ட மாதிரி காற்று வீசிகொண்டிருந்தது.

20241029200653350.jpeg
என்னத்த சொல்ல…வானிலை ஆராய்ச்சி நிலையம் வர வர ஓட்ட உடைசல் ஈயம் பேரீச்சம் பழம் தரும் காயலான் கடை மாதிரி ஆகிவிட்டதே என்று நொந்து கொண்டு விடியற்காலை ஆகிவிட்டதால் ஆபிஸ் வெளியில் வந்து பார்த்தால் சாரல் மழை ….காற்றும் சுழன்று அடிக்கவில்லை ..!

20241028205728179.jpeg
மீண்டும் எடிட்டோரியல் போன் …

யோவ் மணி காலை 7.59 ஆகுது 8 மணிக்கு விகடகவியை ரீலிஸ் பண்ணும்.