தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20250527172248804.jpeg

2026 சட்டசபைத்தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு என்னைப் போன்ற தொண்டர்கள் பதிலளிக்கக் கூடாது பொதுச்செயலாளர் தான் பதில் சொல்ல வேண்டும் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன்

அதாவது கட்சி அவரை தொண்டர்லெவலில் தான் வச்சிருக்காம்?!

நாங்கள் அதிமுக கூட்டணிக்கு செல்ல முடியும். ஆனால் பாஜக அங்கு இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை தொல்.திருமாவளவன்

இதைத்தான் தொகுதி பங்கீடு அரசியல்ன்னு சொல்லுவாங்க !!

திமுகவிடம்கூடுதல் தொகுதி கேட்கப்படும் மதிமுக தீர்மானம்

தலைவரை டென்ஷன் பண்றாங்கப்பா !!

பல அதிகாரிகள் தன்னாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழக வாழ்வுரிமைக் கழக தலைவர் வேல்முருகன்.

இந்த விஷயம் முதல்வருக்கு தெரியுமா ?

முருக பக்தர்கள் மாநாடு இந்து சமூகத்தை ஒருங்கிணைத்துள்ளது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.

எப்படியும் 2026 தேர்தலில் தெரிந்துவிடும் !!

என்ன சாதனை செய்தாலும் எனக்கு கிடைக்காது நோபல் பரிசு டிரம்ப் ஆதங்கம்.

ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறார் போல தெரியுது !!

மாம்பழ விவசாயிகளை தமிழக அரசு காக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி சீமான்.

ஏதாவது ஏற்பாடு பண்ணுங்கப்பா இல்லனா மாமரத்துல ஏறிடுவாரு !!

சென்னையில் பவன் கல்யாண் வெல்ல முடியுமா சேகர் பாபு கேள்வி.

அவர் உடனே ஆந்திராவில் வெல்ல முடியுமான்னு கேப்பாரு ? இது தேவையா ?

பிரதமர் மோடி இந்தியாவில் மிகப்பெரிய சொத்து காங்கிரஸ் எம்பி சசிதரூர் மீண்டும் புகழாரம் .

இவர் எப்பவும் ராகுல் காந்தியை டென்ஷன் பண்ணுவாரு இதே வேலையா இருக்காரு !!

அமித்ஷா இனி அடிக்கடி தமிழகம் வருவார் நயினார் நாகேந்திரன்.

வந்து எடப்பாடியை டென்ஷன் பண்ணுவார் அதுதானே பிளான் !!

முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும் பாஜகவிடம் மக்கள் ஏமாற மாட்டார்கள் செல்வப் பெருந்தகை.

உங்ககிட்ட மட்டும் தான் ஏமாறுவாங்களா ?

திமுக இந்துக்களுக்கு விரோதமான கட்சி இல்லை கனிமொழி கருணாநிதி.

இதுதான் முருகர் மேஜிக் என்று சொல்வார்கள் !!