ஒரு காலத்தில் ஊட்டி இல்லாத சினிமா இருந்ததில்லை என்று தான் கூறவேண்டும் .
இந்தியாவின் பெரும்பாலான திரை படங்கள் ஊட்டி குன்னூரில் படமாக்க பட்டவை .
பிரபலமான மிக பெரிய நடிகர் நடிகைகளின் நடிப்பு இந்த மலைகளின் அரசியின் மடியில் அரங்கேறியுள்ளது .
காதல் பாடல்கள் ஊட்டி இயற்கை அழகில் படமாக்க பட்டத்தை மறக்க முடியதா ஒன்று .
கன்னட பைங்கிளி சரோஜா தேவி நடித்த முக்கிய படங்கள் ஊட்டி பொட்டானிக்கல் கார்டனில் ஷூட் செய்யப்பட்டவை .
ஏராளமான நடிகைகளின் நடிப்பில் ஊட்டி மெருகேறியிருந்தாலும்
கன்னடத்து பைங்கிளியின் அழகு கம்பிர உயரம் நடை சிரிப்பு அனைவரையும் கவர்ந்திழுத்தது .
1960 , 70 களில் அன்றைய ஊட்டி இளைஞர்கள் மற்றும் நடுத்தர டிப்டாப் ஆண்கள் நகரின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்களில் ஷூட்டிங் நடக்கும் போது தவறாமல் ஆஜர் நடிகைகளை பார்க்க .
அதே சமயம் சரோஜா தேவிக்கு ஏகப்பட்ட ரசிகர்களின் கூட்டம் மொய்த்து விடும் !.
சரோஜா தேவியின் உயரம் அழகிய கண்கள் கம்பிர நடை போசை பார்த்து மெய்மறந்து ரசித்தவர்கள் ஏராளம் .
ரசிகர்களிடம் அவரின் மெல்லிய அழகிய குரலில் பேசுவாராம் கூட்டத்தை பார்த்து மூட்டவுட் அல்லது எரிச்சல் அடைந்ததில்லை .
ஊட்டிக்கு அடிக்கடி விசிட் செய்த ஒரு பிரபல நடிகை சரோஜா தேவி .
எம் ஜி ஆர் , சிவாஜிக்கு ஜோடியாக நடிக்க ஊட்டிக்கு விசிட் செய்த சூப்பர் நடிகை .
என் டி ஆருடன் படப்பிடிப்புக்கு வரும்போது சரோஜா தேவிகாரு என்று என் டி ஆர் அழைப்பதை மறக்கமுடியாது என்கிறார் நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் .
ஊட்டியில் சரோஜா தேவி ஹீரோயினாக நடித்து படமாக்க பட்ட சூப்பர் ஹிட் படம் 'அன்பே வா ' 1966 ஆம் வருடம் சரோஜா தேவியை பொட்டானிக்கல் கார்டனில் பார்த்து ரசித்த ஊட்டி ஆண்களின் தூக்கம் பறிபோனது .
ஆலி வுட் படமான 'Come September' படத்தை மூலதனமாக வைத்து எடுத்த படம் தான் ' அன்பே வா '
எம் ஜி ஆறும் சரோஜா தேவியும் ஊட்டியின் இயற்கை சூழலில் நடித்த சூப்பர் படம் இன்றும் ரசிகர்களின் இதயத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது .
ரசிகர்களின் கூட்டம் எம் .ஜி .ஆரை பார்ப்பதா சரோஜா தேவியை பார்ப்பதா என்று தவித்த காலங்கள் மறக்கமுடியாதது.
பொட்டானிக்கல் கார்டனில் ஷூட்டிங் நடக்க ஒரு அழகிய டிப் டாப் உள்ளூர் இளைஞர் சரோஜாதேவியை பார்த்து சிரிக்க அவரை பார்த்து மெய்சிலிர்த்து சரோஜா தேவி அருகில் வந்து "you are handsome " என்று கூறினாராம் அந்த இளைஞர் இன்ப அதிர்ச்சியில் துள்ளி குதித்தாராம் .
ஊட்டி கார்டன் , வென்லாக் டவ்ன்ஸ் நவநகர் பேலஸ் , கால்ப் கிளப் , படகு இல்லம் ..என்று சரோஜா தேவி நடித்து வலம் வந்த ஷூட்டிங் ஸ்பாட்கள் சரோஜா தேவியின் நினைவில் !.
பொட்டானிக்கல் கார்டனில் உள்ள இத்தாலிய கார்டெனில் மிக பிரபலமான 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் ' பாடல் படமாக்க பட்டபோது குதிரை சாரியேட் செயற்கை மூடுபனி, அரச உடையில் படமாக்க பிரமித்து போயினர் ரசிகர்கள் .
இந்த படப்பிடிப்பின் போது ஆயிரம் கணக்கில் ரசிகர்கள் குவிந்து புல் தரை மலர் செடிகள் மிதிப்பட்டு போக இதை பார்த்த எம் ஜி ஆர் மற்றும் சரோஜா தேவி கார்டன் காப்பாளரிடம் ரசிகர்களின் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்களாம் .
ஷூட்டிங் எங்கு நடந்ததோ அங்கு ரசிகர்கள் படையெடுக்க அவர்களை எல்லா இடத்திற்கும் வரவேண்டாம் படம் முடிந்தவுடன் திரையில் பாருங்கள் என்று கேட்டுக்கொண்டனராம்
ஊட்டியின் அழகுடன் இணைந்து சரோஜா தேவி எம். ஜி.ஆரின் அழகு இன்னும் மெருகேற்றி முதல் ஏ வி எம் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவான கலர் படம் என்பது குறிப்பிடத்தக்கது .
1964 யில் சரோஜா தேவி சிவாஜி கணேசனுடன் ஊட்டி வந்து ' புதிய பறவை ' படப்பிடிப்பில் நடித்து புதிய ஜோடியாக மலைகளின் அரசியின் அழகை மேலும் மெருகேற்றினார்கள் .
அதே படத்தில் ஊட்டியின் புல்வெளிகளில் சரோஜா தேவியின் அழகிய நடிப்பில் உருவான பாடல் காட்சியில் 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து ' பாடல் இன்னும் ஒலித்து கொண்டிருக்கிறது .
புதிய பறவை படத்தில் சிவாஜி கணேசனுடன் மற்றும் வி .கே .ராமஸ்வாமியுடன் ஊட்டி குதிரை பந்தயத்தை ரசித்த காட்சி இன்னும் கண் முன் .
அதே போல சிவாஜியும் சரோஜாதேவியும் காரில் பயணிக்க கேத்தி ரயில்நிலையம் அருகில் லெவெல்க்ராஸிங் கேட் மூடப்பட நீலகிரி மலை ரயில் கடந்து செல்ல பயணிகளுக்கு இருவரும் கையசைத்த காட்சி இன்னும் மறக்கமுடியவில்லை .
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
பாடல் காட்சி ஷூட்டிங்கில் சரோஜா தேவியை மலைகளின் ராணி அரவணைத்து கொண்டாள் என்று கூறுகிறார்கள் ஊட்டி வாசிகள் .
சரோஜா தேவியின் நினைவில் கண்கலங்கி நிற்கிறாள் மலைகளின் அரசி ...
Leave a comment
Upload