மொழிப் பிரச்சினை ஓய்ந்த பாடில்லை மஹாராஷ்ட்டிராவில்…
ஆங்கிலம் சர்வதேச உலாவிற்கு தேவையெனில் ஹிந்தி நாடு முழுவதுக்கும் தடையின்றி சென்றிட ஒரு கேட் பாஸ் .
மொழிப்பற்றாளர்கள் என்று கூவிடும் சிறு பான்மையினர், ஆம், அவர்களது சிந்தனையெல்லாம் தன் மொழி தான் மற்ற மொழிகளில் சிறந்தது, மற்ற மொழிகளால் தன் மொழி சிதைந்து விட்டதாகச் சொன்னாலும் உண்மை அதுவல்ல. மொழிகள் யாவும் மனிதனால் தன் நலத்திறகாக உபயோகப்படுத்துவது தானே. அப்படியெனில் இவர்கள், இந்த சிறுபான்மையினர், மற்ற மொழி பேசுபவர்களை, சக மனிதர்களை வெறுப்பவர்கள் என்று தானே அர்த்தம்.
சத்ரபதி சிவாஜியின் பட்டாபிஷேகத்திற்கு காசியிலிருந்து வேத வல்லுனர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
மொழி பற்றி பாலிவுட் நடிகர்கள் இந்த விஷயத்தில் என்ன கூறுகிறார்கள்? கேட்போமா?
சிங்கம் ஆக்டர் அஜய் தேவ்கன், “அத்தா மாஜி சடக்லி” (மராட்டியில், இப்ப என்னோட மூளை சூடாயிடிச்சி!) என்கிறார்.
ஷில்பா ஷெட்டியோ, “ அ…நானு மஹராஷ்ட்ராவின் மகள் என்று வெட்டுகிறார். இன்னும் வில்லு மாதிரி உடம்பு….
குண்டு மல்லி ரெண்டு ரூபா பாடலைப் பாடிய உதித் நாராயணன்,”மும்பை எனது கர்ம பூமி, ஆக இந்த மொழியும் முக்கியமானது தான்” என்று பாடுகிறார்.
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் பாய் ஃப்ரெண்ட் ஷிகார் பஹாரியா, முன்னாள் மஹராஷ்டிரா முதல்வர் சுஷில்குமார் ஷிண்டே இது பற்றி எழுதியது இதோ.
மராத்தியின் பெருமை மிகவும் ஆழமானது, உணர்ச்சிவசமானது மற்றும் நம் வாழ்க்கை முறையில் வேரூன்றியுள்ளது. அதற்கு மற்றவர்களின் கண்ணியத்தை விலையாகக் கொடுக்க முடியாது. பயத்தின் மூலம் ஒரு மொழியை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் முடியாது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வாரிசு அரசியல் ஜிந்தாபாத். சன்ஸ் ரைசிங்க்
பாகிஸ்தானில் இம்ரான் கானின் இரு மகன்களும் அரசியலில் குதிக்கப்போகிறார்களாம்.
இது நாள் வரை லண்டனில் வாழ்ந்து வந்த 29 வயதாகும் சுலைமான் இசா கான் மற்றும் 26 வயதாகும் காசிம் கான் என்ற இருவரும் விரைவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைலா ஜெயிலில் கம்பி எண்ணும் தந்தை இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரும் மகா ஆதரவு பேரணியில் பங்கு பெறப் போகிறர்களாம். பேரணி நடை பெறும் நாள் ஆகஸ்ட் 5. நடைபெறும் இடம் லாஹூர்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கார்டூனிஸ்ட்டுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம்
மோடியைப் பற்றியும் ஆர் எஸ் எஸ்சைப் பற்றியும் அருவருக்கத்தக்க, அதாவது உச்ச நீதிமன்றத்தில் கணிப்பிலேயே அவைகள் வெறுப்பூட்டுகின்ற மற்றும் முதிற்சியற்ற கார்டூன்களைப் போட்டமைக்கு மத்தியப்பிரதேசத்தைச்சேர்ந்த இந்தோரில் வசிக்கும் ஹேமந்த் மாளவியாவிற்கு வரும் ஜூலை 22க்குள் மன்னிப்பு கேட்க்க கெடு கொடுத்துள்ளது உ. நீ. மன்றம். இதனால் அவரை கைது செய்ய தடை கோரிய பெயில் கொடுக்க மறுத்துவிட்டது.
அந்த கார்டூனிஸ்டுக்காக வாதாடிய வழக்கறிஞர் வ்ருந்தா குரோவர், அவருக்கு 50 வயதாகிறது, இது ஒன்றும் அவதூறு அல்ல. மேலும் அது அவரின் தனிப்பட்ட சுதந்திரம் ஆகும், என்று தனது வாதத்தில் கூறியிருந்தார்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
டர்புனேட்டட் டோர்னடோ, அதாவது கொண்டையிட்ட சூறாவளி என்று போற்றப்பட்ட 114 வயதே ஆன ஃபௌஜா சிங்க் சமீபத்தில் ஜலந்தரில் வாக்கிங்க் செல்கையில் வேகமாக வந்த காரினால் இடிக்கப்பட்டு மாண்டு போனார்.
இந்த தற்போதைய காலமாகுமுன்னர், உலக அளவில் மிக வயதான மராதான் ரேசில் பங்கு பெற்றவரிடம் (OLDEST MARATHONER) அவரது நீண்ட ஆயுளுக்கும் அவரது உடலை ஃபிட்டாக வைத்திருப்பதன் ரகசியம் என்ன என்றதற்கு அவர் அளித்த பதில் தான் செம.
வெஜிட்டேரியன் உணவு தான். அதென்ன என்று கேட்கிறீர்களா?
சப்பாத்தி, சமைத்த பருப்பு, கற்காய், கீரை தானுங்க.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நான் கேப்டனாக இருந்தப்ப இந்த (பயல்), இப்போதைய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் என் சொல் பேச்சே கேக்க மாட்டான் என்று அங்கலாய்க்கிறார் இதற்கு முந்தைய கேப்டன் ஜோ ரூட்.
இவர் தற்போதைய இங்கிலாந்து டீமில் விளையாடி வருகிறார்.
சரியாத்தான் இருக்கும். கடு கடுவென முகம்…. எப்ப கொதரிடுவாரோன்னு பயம் தான்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Leave a comment
Upload