தொடர்கள்
பிஸினஸ் ஸ்பெஷல்
டெஸ்லா இந்தியாவில் டாக்ஸ்லா ?? ஜெயிக்குமா டெஸ்லா ?? - ராம்

20250619071411748.jpegபுலி வருது புலி வருது....கடைசியில் வந்தே விட்டது டெஸ்லா.

இந்தியாவில் டெஸ்லா முதல் ஷோரூம் திறந்தாகி விட்டது.

மூன்று வருடங்களுக்கு முன்பே விகடகவியில் இந்தியாவில் டெஸ்லா ஜெயிக்குமா என்று காணொளி எடுத்து போட்டு விட்டோம்.

சற்றேறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது இந்த டீலிங் முடிய.......

விலை.... சுண்டக்கா கா பணம் சும கூலி முக்கா பணம் போல வரி தான் ஏகத்திற்கு இருக்கிறது.

20250619072233759.jpeg

ஆனால் உலகம் முழுவதும் கார்களுக்கு வரி அதிகம் தான். ஹாங்காங்கில் கூட வரி அதிகம் தான். சுமார் 150 சதவிகிதம். ஆனால் பாட்டரி கார்களுக்கு இன்று வரை ஏதேனும் சட்ட நுணுக்கங்களில் இந்த வரி சலுகை தொடர்கிறது.

ஆனாலும் இந்தியாவில் டெஸ்லா ஜெயிக்குமா ??

சார்ஜ் பாயிண்டுகள் தான் அடிப்படை ஆதாரம். தினமும் சாதா சார்ஜரில் எட்டு மணி நேரம் நிறுத்த வேண்டும் என்றால் சிக்கல் தான். ஏனெனில் இந்தியாவின் நீள அகலம் வேறு. அதற்கு உட்கட்டமைப்பு அதிகமாக தேவை.

முதல் அடி வைத்திருக்கிறார் எலான் மஸ்க். போகப் போக பார்க்கலாம். இதில் பாட்டரி கார் ஏரியாவில் மஹிந்திராவில் துவங்கி ஏகப்பட்ட போட்டி வேறு....

பழைய காணொளி தான்.. இருந்தாலும் இன்றைக்கும் தேறும்.

இந்தியாவில் டெஸ்லா ஜெயிக்குமா ????