வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரம் படி பெட்ரோல் கார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு வெகுவாக குறைந்து வருகிறது என்பது தெரியவந்துள்ளது.
2021-ஆம் ஆண்டில் 70% கார்கள் பெட்ரோல் கார்களாக இருந்தது. இப்போது அது 48.2 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரம் 8.5% இருந்த சி என் ஜி, எல் பி ஜி கார்களின் எண்ணிக்கை 20.8 சதவீதமாகவும், 16.8 சதவீதமாக இருந்த டீசல் கார்களின் எண்ணிக்கை 17.9 சதவீதமாகவும், 1.2 சதவீதம் இருந்த எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 8.3 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இது தவிர பெட்ரோல், டீசல், கேஸ் அல்லது மின்சாரம் என இரு வேறு எரிசக்திகளில் இயங்கும் கார்களின் எண்ணிக்கை 4.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புவி வெப்பமயமாதல் கார்பன் உமிழ்வு பிரச்சனைகளுக்கு பெட்ரோல் டீசல் போன்ற மரபு சார்ந்த எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் சூரிய ஒளி இயற்கை வாய்வு போன்ற மரபுசாரா எரிசக்தி பொருளுக்கு வாகனங்கள் மாறுவது அவசியம். இதை வெறும் சுற்றுச்சூழல் பிரச்சனை என்றும் பார்க்காமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவும். கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறையும் என்ற நோக்கில் மரபுசாரா எரிசக்தி பயன்படுத்துவது அதிகரிப்பது என்பது வரவேற்க கூடிய ஒரு விஷயம். பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் மரபுசாரா எரிசக்திக்கு முக்கியத்துவம் தருகின்றன. சீனாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு 30.2 சதவீதமாக இருக்கிறது.
மரபுசாரா எரிசக்தியை நோக்கி இந்தியா நகர்வது நல்ல விஷயம்தான். அதே நேரம் அதற்கேற்ற தொழில் வாய்ப்புகளும் உள்கட்ட அமைப்புகளும் நம் நாட்டிற்கு தேவை. இதையும் அரசாங்கம் கவனிக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
Leave a comment
Upload