இந்தியாவிலேயே உள்நாட்டு தயாரிப்பின் மூலமாக சுமார் 2 ஆயிரம் கிமீ தூரம் துல்லியமாக சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி பிரைம் ஏவுகணை பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏவுகணை முதன்முறையாக ரயில் மீதுள்ள மொபைல் லாஞ்சரில் இருந்து கடந்த 25ம் தேதி ஏவப்பட்டது. இச்சோதனை வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ எனும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதன்மூலம் ரயிலில் இருந்து ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.
அக்னி குஞ்சொன்று கண்டே என்று பாரதி எழுதினான்.
அக்னி பிரைம் ஒன்று கண்டேன் என்று டி.ஆர்.டி.ஓ உரக்க சொல்லியிருக்கிறது. பாதுகாப்புக்கு ஓகே.
இந்தியா இதுவரை எந்த நாட்டுடனும் வலிய சென்று போர் புரிந்ததில்லை !!! அண்டை நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் .
Leave a comment
Upload