தொடர்கள்
விகடகவியார்
எல்லாம் ஜனவரியில் தான் - விகடகவியார்

202591619051948.jpg

கூட்டணி விஷயம் எல்லாம் நாம் ஜனவரியில் முடிவு செய்யலாம் இப்போது அவசரப்பட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் விஜய். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு தலைமறைவாக இருந்த நிர்மல் குமார்,புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் விஜயைசந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள். இப்போதைக்கு இந்த 41 குடும்பங்களை கவனித்து அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வேலையில் ஈடுபட விஜய் முடிவு செய்திருக்கிறார். அதே சமயம் ஆதவ் அர்ஜுனா டெல்லியில் சில பல தலைவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்பியதும் நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை விஜய்க்கு எடுத்து சொல்லி இருக்கிறார். இப்போதைக்கு விஜயின் கருத்து திமுகவுக்கு எதிராக மட்டும் தான் இருக்குமாம்.