கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த சில கருத்துக்கள் வழக்கின் போக்கு எப்படி இருக்கும் என்பதை முதலமைச்சர் தெரிந்து கொண்டு விட்டார். 'நிச்சயம் சிபிஐ விசாரணை என்ற உத்தரவு வரும்' என்று தீர்ப்புக்கு முந்தினமே மூத்த கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போது சொல்லி இருக்கிறார் முதல்வர்.
கரூர் விவகாரத்தை பாஜக நமக்கு எதிராக திருப்பி விடும். சிபிஐ விசாரணை என்ற உத்தரவு வந்ததுமே செந்தில் பாலாஜியை சிபிஐ நிச்சயம் அழைத்து விசாரிக்கும். மீடியாவில் விஜய் செய்த தவறுகள் எல்லாம் இனி மூடி மறைக்கப்பட்டு எல்லாமே மாநில அரசின் குளறுபடிதான் என்பது போன்ற செய்திகள் வரும். இது நமது தேர்தலை பாதிப்பதற்காக அவர்கள் செய்யும் வேலை. நாம் நிதானமாக இந்த விஷயத்தை கையாள வேண்டும். யாரும் அவசரப்பட்டு எதுவும் கருத்து சொல்லாதீர்கள். நான் ஏற்கனவே ஆர் எஸ் பாரதி, வில்சன் இருவரையும் இதை டீல் செய்ய சொல்லி இருக்கிறேன் என்று கட்சி நிர்வாகிகளிடமும் அமைச்சர்களிடமும் சொல்லி இருக்கிறார் முதல்வர்.
வில்சன் முதல்வரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தைத் தான் விமர்சித்து கருத்து சொல்லி இருக்கிறார்கள்.
தமிழக அரசு பற்றி அவர்கள் குறிப்பிடும் போது அவசர அவசரமாக போஸ்ட்மார்ட்டம் செய்திருக்கிறார்கள் என்று மட்டும் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.
விசாரணையை கண்காணிக்க அவர்கள் நியமித்திருக்கும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பாரதிய ஜனதா ஆதரவாளர். எனவே நாம் எச்சரிக்கையுடன் இதை கவனிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் வில்சன்.
Leave a comment
Upload