தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

2025916182333742.jpeg

திமுக அரசால் விஜய்க்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் ஆபத்து நயினார் நாகேந்திரன் விமர்சனம்.

உங்களுக்கு அண்ணாமலையால் ஆபத்து கரெக்ட் தானே ?

சோகத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தால் சோகம் போய்விடாது கமலஹாசன்.

இது ஊழலுக்கும் பொருந்தும் தானே !!

பூத் கமிட்டியினர் திமுகவின் ஸ்டெதஸ்கோப் போன்றவர்கள் -உதயநிதி ஸ்டாலின்.

அவங்க தான் வாக்காளர்கள் பல்ஸ் பார்த்து வைட்டமின் "பா" எவ்வளவு தரணும் என்று பிரிஸ்கிரைப் பண்ணுவாங்க !!

அதிமுக தமிழக வெற்றி கழக கூட்டணி என்பது பகல் கனவு செல்வ பெருந்தகை.

காங்கிரஸ் தமிழக வெற்றிக்கழக கூட்டணி என்பது மட்டும் நிஜமாக்கும் !!

திமுகவின் காசா மீதான கருணைக்கு சட்டப்பேரவை தேர்தலே காரணம் சீமான் விமர்சனம்.

அண்ணன் எப்பவும் கம்பெனி ரகசியத்தை போட்டு உடைத்து விடுவார் !!

இலங்கை சுற்றுலாவில் இந்தியா தொடர்ந்து முதலிடம் துணை தூதர் தகவல்.

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை அடிக்கடி கைது பண்ணி கூட்டிட்டு போறாங்களா அதை வச்சு சொல்றாரோ ?

முதல்வர் ஸ்டாலினுக்கு உலக அரசியல் தேவை தானா அண்ணாமலை கேள்வி.

பொது அறிவு வளர்த்துக்கிறது ஒரு குத்தமா ?

தேர்தல் ஆணையத்துக்கு ஏழு கேள்விகள் பா.சிதம்பரம்.

நீங்கள் நூறு கேள்வி கேட்டாலும் ஒரே பதில் தான் "தேர்தல் ஆணையம் சட்டப்படி நடக்கும் யாருடைய தலையீடும் இல்லை" என்பதுதான்.

பீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தேஜஸ்வி யாதவ்.

அதைவிட அதிக சம்பளத்துல ஏற்கனவே அவங்க தமிழ்நாட்டில வேலை பார்க்கிறார்கள் இது கூட தலைவருக்கு தெரியவில்லை !!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 16 இல் தொடங்கும்.

அத விடுங்க வெள்ள நிவாரண ரூபாய் எப்ப தருவீங்க அத சொல்லுங்க ?

கிராம சபை கூட்டங்களில் மக்கள் முன் வைக்கும் தீர்மானம் திட்டங்களாக மாறும் முதல்வர் ஸ்டாலின் உறுதி.

ஆனா இதெல்லாம் ஓட்டாக மாறுமா ?

இபிஎஸ் அதிமுகவை உள் வாடகைக்கு விட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

தலைவரே நம்ம ஏற்கனவே அமைச்சர் கட்சிப் பொறுப்பு என்று முன்னாள் அதிமுக தலைவர்களுக்கு குத்தகைக்கு விட்டுட்டோம் !!

என் வாகனத்தை மறித்த விவகாரம் திட்டமிட்ட சதி திருமாவளவன்.

தலைவரே வக்கீல் பேரு ராஜீவ் காந்தி ! ஏதோ கூட்டணி விவகாரம் போல தெரியுது !!

விஜய் திங்கட்கிழமை கரூர் செல்ல திட்டம்.

அப்ப கரூர் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாதுன்னு எச்சரிக்கை செய்ய வேண்டும் !!