தொடர்கள்
அரசியல்
ஶ்ரீரங்கத்தில் என்ன வேண்டினார் குமாரசாமி?! - ஆர். ராஜேஷ் கன்னா

20180422170220391.jpg

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி திருச்சி ஸ்ரீரங்கநாதர் ஆலயம் முழவதும் தீடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விஜபி யாரோ வரப்போகிறார்கள் என்று ரங்கநாதர் கோயில் முன்பு பொதுமக்கள் கூடிவிட்டனர். அடுத்த அரைமணி நேரத்தில் பெங்களுருவிலிருந்து தனி விமானத்தில் வந்து எந்தவித ஆரவாரமுமின்றி கர்நாடக ஜனதா தளம் (மதசார்ப்பற்ற) மாநில தலைவரும் அடுத்த கர்நாடக முதல்வருமான எச்.டி.குமாரசாமி ஸ்ரீரங்கநாதர் கோயிலில் பக்தியுடன் நுழைந்தார். ஆலய அர்ச்சகர் சுந்தர் பட்டாசாரியர் பொன்னாடை போர்த்தி குமாரசாமியை கோயிலுக்கு உள்ளே அழைத்துச் சென்றார்.

20180422170303107.jpg

கோயிலின் உள்ளே திரளாக பக்தர்கள் குழமியிருந்தனர். அனைவருக்கும் குமாரசாமி வணக்கம் தெரிவித்தார். இதற்குள் கூட்டத்திலிருந்த மக்கள் ‘நீங்கள் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர வேண்டும். இரு மாநிலத்திற்கிடையே நதி நீர்ப் பங்கீட்டில் நேர்மையாக நடந்து காவேரி நீரை தமிழத்திற்கு தர வேண்டும்’ என்று குரலெழுப்ப.. அதை புன்முறுவலுடன் கேட்டுக்கொண்ட குமாரசாமி 'நல்ல தீர்வு கிடைக்க நான் முயற்சி செய்கிறேன்' என மக்களிடம் புன்னகையோடு கூறிவிட்டு ஶ்ரீரங்கநாதரை பார்க்க அர்ச்சகர்களுடன் சென்றார்..

20180422170358849.jpg

குமாரசாமி தான் வருங்கால முதல்வர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் ஸ்ரீரங்கநாதரை மிகுந்த பக்தியுடன் கும்பிட ஆரம்பித்தார். குமாரசாமி தன் கோரிக்கையாக 'காவேரியில் தண்ணீர் பெருக நிறைய மழை பொழிய வேண்டும்' என அர்ச்சனை செய்யச் சொன்னார்.

குமாரசாமி வருகை பற்றி ஸ்ரீரங்கம் அரச்சகர் சுந்தர் பட்டாச்சாரியரிடம் கேட்டபோது.. "எச்.டி.குமாரசாமி ஸ்ரீரங்கநாதரின் தீவிர பக்தர். அவர் எந்தக் காரியத்தில் இறங்கினாலும் பெரியபெருமாள் ரங்கநாதர் உத்திரவின்றி எந்த செயலையும் செய்யமாட்டார். தனக்கு அடுத்த கர்நாடக முதல்வர் பதவி வருகிறது என்றதும் குமாரசாமி உடனே புறப்பட்டு வேறு எந்த கோயிலுக்கும் செல்லாமல் முதலில் ஸ்ரீரங்கநாதரை காண வந்ததாகச் சொன்னார். அத்துடன் கர்நாடக காவேரி அணைப் பகுதியில் அதிக மழை பொழிந்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் காவேரி கரைபுரண்டு ஓடி இரு மாநில விவசாயிகளும் செழிப்புடன் வாழ வேண்டும்... அதற்கு ஸ்ரீரங்கநாதர் அருள்புரிந்து மாமழை தரவேண்டும் என மனமுருக வேண்டினார். அத்துடன் தன் ஆட்சியினை நிலையான ஆட்சியாக ஸ்ரீரங்க பெரியபெருமாள் வழிநடத்தி கருணை புரிய வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.

20180422170454895.jpg

ஆடி மாதம் 18ம் நாள் ஆடிப்பெருக்கு வரவிருக்கிறது. நதிகளில் காவேரி நதி தான் மிக புனிதமானாது . ஸ்ரீரங்கநாதனின் கால்களை நனைத்துதான் காவேரி செல்கிறது . தொண்டரடிப்பொடியாழ்வார் காவிரி நீர் கங்கை நீரை விட புனிதமானது என 'கங்கையிற் புனிதமாய காவிரி நடுவுப் பாட்டுப் பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம்' என எம்பெருமான் மீது பாடல் பாடியுள்ளார். அரசன், ஆலயம், அந்தணர் மூன்று பேருமே நல்லா இருந்தாதான் நாடும் சுபிட்சமா இருக்கும். கர்நாடகாவிலிருந்து அகண்ட காவேரியா வரும் மஹாலட்சுமி ஸ்ரீரங்கம் வந்து பெரியபெருமாள் கால்பட்டு அவர் அருள் பாலித்தபின் அகண்ட காவேரி ஸ்ரீரங்கத்தினை விட்டு குறுகிச் செல்கிறாள் என்பது வழக்கம். இங்கு வந்து பிரார்த்தித்த கர்நாடகாவின் அடுத்த முதல்வர் குமாரசாமி கூட வரும் ஆடி 18 ஆடிப்பெருக்கில் இரு மாநில மக்களும் காவேரி நதியில் நீராட வேண்டும் என்பதே தனது ஆசை என்று சொல்லிக் கேட்க சந்தோஷமாக இருந்தது." என்றார்.

" குமாரசாமி பதவி ஏற்பில் நீங்கள் பிராதனமானவராகக் கலந்து கொள்வீர்கள் என கர்நாடாகவில் சொல்கிறார்களே’"என்ற போது..

‘நான் எப்போதும் ஸ்ரீரங்க பெரியபெருமாளோடு தான் இருப்பேன். அவருக்கு சேவை செய்வது ஒன்றே எனது குறிக்கோள். எனக்கு தனிப்பட்ட ஆளுமை மூலம் எந்த புகழும் வேண்டாம். நான் கர்நாடக முதல்வர் பதவியேற்பிற்குச் செல்வதாக இல்லை. மாதம் மும்மாரி பொழிந்து தமிழ்நாடு கர்நாடகத்தில் காவேரி நதி பெருகி விவசாயம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதே என் பிராத்தனையுமாகும்.’ என்றார் சுந்தர் பட்டாச்சாரியார்.

2018042217312314.jpg