தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260015212814604.jpg

மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி முதல்வர் பதவியில் அமரக்கூடாதா ? ஐ.பெரியசாமி கேள்வி.

அப்பதான் நீங்களும் அமைச்சராக முடியும்.

தேர்தலில் செல்வப் பெருந்தகை டெபாசிட் கூட வாங்க மாட்டார் பாஜக கணிப்பு.

நீங்க தேர்தல் ஆணையம் எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு தானே , !நீங்க சொன்னா சரியா தான் இருக்கும். .

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு! -முதல்வர் குற்றச்சாட்டு.

நீங்களும் பாவம் தொடர்ந்து சொல்லிக்கிட்டு தான் இருக்கீங்க !!

உங்கள் கனவுகளுக்கு உருவம் தருவேன்! முதல்வர் ஸ்டாலின்.

தலைவருக்கு ஏதோ சக்தி வந்திருக்குன்னு நினைக்கிறேன் !!

வள்ளலார் அருள் பெற்ற ஒருவன் அரியணை ஏறுவான் என முத்துராமலிங்க தேவர் குறிப்பிட்டது என்னைத்தான்! சீமான்.

அண்ணே, ஆனா எந்த வருஷம்ன்னு அவர் சொல்லல !!

பொங்கலுக்குள் பெண்களுக்கு மகிழ்வான செய்தி ஒன்றை முதல்வர் அறிவிப்பார் - ஐ.. பெரியசாமி.

அந்த உரிமைத்தொகை 2000 மேட்டர் தானே அதுதான் எல்லாருக்கும் தெரியுமே , ஆனால் எடப்பாடி 3000 சொல்றாரு !!

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு ஸ்டாலினும் ராகுலும் முடிவு செய்வார்கள் - செல்வப் பெருந்தகை.

தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்யிற இடத்துல இல்ல அப்படித்தானே !!

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்.

அதெல்லாம் திமுக பாத்துக்கும் விடுங்க !!

விஜயின் ரசிகனாக ஜனநாயகன் படத்துக்காக காத்திருக்கிறேன் –அண்ணாமலை.

அப்புறம் என்ன சென்சார் போர்டுல ஒரு வார்த்தை சொல்றது.

இலங்கையில் கூட்டாட்சி முறையை உருவாக்க வேண்டும் மோடிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம்.

இங்க உங்க கூட்டாளிகள் எல்லாம் கூட்டணி ஆட்சி வேணும்னு கேக்குறாங்க !!

கனிம வளக் கடத்தல் விவகாரம் அண்ணாமலை, அன்புமணி தமிழக அரசுக்கு கண்டனம்.

அவங்க நீதிமன்ற கண்டனத்தையே பார்த்தவங்க !அதையே கண்டுக்கல !!

கூட்டணி தொடர்பாக யாரும் என்னிடம் பேசவில்லை டாக்டர் ராமதாஸ் ஆதங்கம்.

உனக்கு வயசு ஆயிடுச்சாம் !!

அமித்ஷாவிடம் பழனிச்சாமி சரண்டர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம்.

அங்க இன்ப நிதி கூப்பிடுறார் முதல்ல அது என்னனு பாருங்க.