
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கிளை கழக நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோருக்கு தீபாவளி, பொங்கல் போன்ற நன் நாட்களில் அவர்கள் தேவை அறிந்து 'கவனிப்பு 'செய்யும் புதுப்பழக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இது பத்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை இந்த கவனிப்பு இருக்கும். .
இந்த முறை பொங்கலுக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு பொங்கல் போனஸ் ஆக 5 ஆயிரத்தில் ஆரம்பித்து ஒரு லட்சம் வரை அவரவர் வகிக்கும் கட்சிப் பொறுப்புக்கு தகுந்தவாறு கவனிப்பு நடந்திருக்கிறது. .
இது தவிர இளைஞர் அணி பொறுப்பு வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் போனஸ் ஆக வழங்கி இருக்கிறார். .
ஏற்கனவே பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு மாத சம்பளமாக மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது..
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பட்டுவாடா நடக்கிறது.
இவர்கள் வேலை அவர்களின் பூத் கமிட்டியில் உள்ள வாக்காளர்களில் கோரிக்கையை கவனிப்பது. அவர்களை திமுக வாக்காளர்களாக மாற்றுவது போன்ற பணிகளுக்கு தான் இந்த ஊதியம். .
இது ஒரு புறம் இருக்க அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு கவனிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள் சேகர் பாபு 2000 ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை வழங்கி வருகிறார்.
அமைச்சர் நேரு எல்லா வாக்காளர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை வழங்கி இது முதல் தவணை தான் என்றும் சொல்லியிருக்கிறார்.
எடப்பாடி 4 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று ஆளுநரிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க கேட்டிருக்கிறார்.
இந்த பட்டுவாடவை எல்லாம் பார்த்தால் அது உண்மைதானோ என்று தோன்றுகிறது.

Leave a comment
Upload