தொடர்கள்
அழகு
மயிலாப்பூரில் கோலங்களின் கொண்டாட்டம் – ந. ராமலக்ஷ்மி

20260016113415716.jpg
மயிலாப்பூரில் வரும் ஜனவரி 10, 11 (மார்கழி 26,27) தேதிகளில் கோலத் திருவிழாப்போட்டி என உள்ளூர் செய்தித் தாள் விளம்பரப்படுத்தியது .

மயிலாப்பூர் திருவிழா என் சுந்தரம் ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் வருடா வருடம் இங்கு நடத்திக் கொண்டு வருகிறது.

வடக்கு மாட வீதியில் கோலம் மற்றும் ரங்கோலி போட்டிகள் தான்.

இலவச முன்பதிவு மூலம் அனுமதி, ஒவ்வொரு போட்டியாளருக்கும் 4க்கு 4 அடி இடம் ஒதுக்கல். 45 நிமிடங்களுக்குள் டிசைன் திட்டமிடல், 3 முதல் 5 மணிக்குள் வரைந்து முடித்துவிடல், ஒதுக்கப்பட்ட இடத்தில் டோக்கன் நம்பர் எழுதப்பட்டு போட்டியாளர்கள் தங்கள் பங்கேற்பாளர் உடையில் பேட்ஜுடன் இருப்பது, பங்கேற்பாளர்களே தேவையான கோலப் பொருட்கள் கொண்டு வருவது, நடுவர் தீர்ப்பே முடிவானது என்ற போட்டி கண்டிஷன்கள் மூலம் போட்டிகள் ஆரம்பித்தன.

வடக்கு மாட வீதி முழுவதும் தண்ணீர் தெளித்துசுத்தமாக்கி வைக்கப்பட்டிருந்தது.

.75 டோக்கன்கள் சம்பிரதாயக்கோலம் போடுபவர்களுக்கும், 25 டோக்கன்கள் ரங்கோலிக்கும் ஒதுக்கப்பட்டன.

ரெடி ஸ்டார்ட் என்ற குரல் எழும்பியதும் மடிசார் மாமிகளும், பஞ்சக்கச்ச மாமாக்களும் ஜீன்ஸ் பேண்டுகளில் மாணவ, மாணவியர்களும், வெளிநாட்டு பங்கேற்பாளர் பங்கேற்பாளிகளும் குனிந்த தலை நிமிறாது போட்ட கோலங்கள்....

கோலம் போடும் போது மனம் மூளை, நரம்பு மண்டலம் ஒருங்கிணைந்து செயல்படுவது நமக்கு ஆரோக்கியமான வாழ்வைத் தருகிறது என்பார் நம் வீட்டு பெரியோர்.

போடப்பட்ட கோலங்கள் பல, அவற்றில் சில

20260016114441143.jpg

(ஆடவரும் வரைவரே)

20260016114545542.jpg

(பெண்டிரும் வரைவரே)

20260016114630198.jpg

(தம்பதியர் கோலம்)

2026001611471920.jpg

(குழந்தையுடன் குழைந்த கோலம்)

2026001611482002.jpg

(யாரது இங்கே ஈரோடு பவானி ஜமக்காளம் விரித்தது!!! ஓ இது வண்ணக்கோலம்)

20260016115025768.jpg

(கபாலீஸ்வரர் கோவில் மயிலும் மயிலையும்)

20260016115133680.jpg

(கரும்புடன் அம்மன்)

20260016115310298.jpg

(கோடு போட்டுக் கோலம்)

20260016115444971.jpg

(ஓரு நேரம் இங்கு தான் தெப்பத்திருவிழா என்று எண்ணிவிட்டனராம்)

இயல் இசை நடனத்தை விளக்கும் வகையில் பரத நாட்டியம்

2026001611574730.jpg

(பொங்கல் திருவிழா)

20260016120110365.jpg

(இரட்டை ஜடை இளவரசி)

20260016120246221.jpg

(ஆண்டாள் திருவுருவம்)

20260016120446786.jpg

(மங்கையிட்டாள் மங்கையிட்ட வண்ணக் ரங்கோலி)

20260016120811210.jpg

(நெளிவு சுளிவுடன் கோலமாக்கோலம்)

20260016121012827.jpg

(எத்தனைப் பின்னலோ!)

20260016121216261.jpg

(யம்மாடி! கணக்கிலடங்கா பின்னல்கள்)

20260016121419358.jpg

(அம்மையும் அப்பனும் இணைந்து....)

20260016121615824.jpg

ஆமாம் ! யாரது அங்கே சாப்பாட்டு இலை போட்டு பரிமாறியும் விட்டார்கள்!?)

20260016122453915.jpg

(குளிரிலும் சிறுமியிடும் மார்கழி கோலம்)

20260016122257734.jpg

(மல்லிகை மலர் சூடிய வெளிநாட்டு அம்மணிகள் இருவரில் ஒருவர் புடவையுடன் குனிந்து கோலமிடுவதும்....)

ஜன 11 அன்று மாலை வருண பகவான் கோலங்களை பார்வையிட வந்த போதும் , பங்கேற்பாளர்கள் குடை பிடித்த வண்ணம் கோலத்தில் மூழ்கியிருந்தனர்.

திருநெல்வேலியிலிருந்து இதற்காக வந்த மாமி கோலமும் போட்டாள். பரிசையும் வென்றாள்.

பத்மாவதி ரமேஷ் என்பவர் போட்ட கோலத்தில் படிக்கோலமும், நாதஸ்வரமும், தமிழும் தானா தமிழர்கலை!?, விரல்களின் நாட்டியத்தில் விளையாடும் கோலம் என்று வினா விடை வடிவில் எழுதப்பட்டிருந்தது மிகவும் சிறப்பாக இருந்தது.

ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களிலிருந்தும் வந்த பங்கேற்பாளர்கள் ஆச்சர்யத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர்.

கிட்டத்தட்ட பங்கேற்ற அனைவருமே பரிசு பெற்றிருந்தனர்.

அடுத்த வருஷம் தெற்கு மாட வீதியையும் குத்தகை எடுக்க வேண்டி வரும். அவ்வளவு உற்சாகம் என்றெண்ணியவாரே மனதுள் கபாலியிடம் பிரார்த்தனை கோலமிட்டபடி அகன்றேன்.

கோலங்களின் ஊர்வலம் தான் அங்கு.

கொசுறு செய்தி...

ஹாங்காங்கில் பொங்கல் சமயத்தில் மொட்டை மாடியில் போட்ட கோலம் இது. கீர்த்தியின் கைவண்ணம்.

கோலங்கள் எங்குமே

20260017092953760.jpeg

வசீகரமானவை. !!