சைக்கிள் ஓட்டுபவர்கள் ஏராளமாக இருந்தாலும்
இரண்டு கால் இரண்டு சக்கரத்தில் சாதனை புரிபவர்கள் சொற்பமானவர்கள் .

அதிலும் சமூக சிந்தனையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பயணத்தை மேற்கொள்பவர்கள் உலகத்தை திரும்பி பார்க்க செய்கிறார்கள் .

கோவையை சேர்ந்த இளம் 45 வயது தொழிலதிபர் விஷ்ணு ராம் கடந்த டிசம்பர் மாதம் பெண்களுக்கு எதிராக செயல்படும் பாலியல் துன்புறுத்தலை எதிர்த்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த 15 மணிநேரம் 8 நிமிட தொடர் சைக்கிள் ஓட்டி சாதனை புரிந்துள்ளார் .
கடந்த டிசம்பர் மாதம் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமைகளை நிறுத்தும் விதமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியாவின் கடைசி முனையான ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல் முனை கடற்கரையில் இருந்து கோவை வரை 500 கிலோமீட்டர் தொலைவை 15 மணிநேரம் 8 நிமிடத்தில் கடந்து கின்னஸ் சாதனையினுள் நுழைந்துள்ளார் விஷ்ணு !.

நாம் விஷ்ணுவிடம் பேசினோம் , " நான் சிறுவயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் அலாதி பிரியம் அதிலும் நீண்ட தூர பயணம் என்பது என் passion " என்கிறார் .
இந்த 500 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் , ' 'பெண்களுக்கு எதிரான வன்முறை ' சைபர் க்ரைம் எதிர்த்து மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு பயணம் என்று துவங்கி முடித்துள்ளேன் .பாம்பன் பாலத்தில் வரும்பொழுது தான் எனக்கு சற்று பயம் காற்று சைக்கிளை தள்ளிவிடும் என்று ஆனால் சமாளித்து கடந்து வந்தேன் .
என்னுடைய இந்த வெற்றிக்கு மிக பெரிய உறுதுணை காவல் துறை உயர் அதிகாரிகள் தான் .

இந்த விழிப்புணர்வு பயணத்தை கொடியசைத்து பாதுகாப்புடன் துவக்கிவைத்தார் ராமநாதபுரம் எஸ் .பி .சண்டீஸ் .
என் பயணம் டிசம்பர் 6 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு அரிச்சல் முனை கடற்கரையில் துவங்கி 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு கோவை காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் கால் ஊன்றினேன் " என்கிறார் கூலாக .
இவரின் நான் ஸ்டாப் சைக்கிள் பயணம் ராமேஸ்வரம் , மதுரை , தேனி , திண்டுக்கல் , ஓட்டன்சத்திரம் , பல்லடம் மற்றும் கோவை அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இவரின் பயணத்திற்கு வரவேற்பு மற்றும் பாதுகாப்பு கொடுத்துள்ளனர் .
" எனக்கு இந்த சைக்கிள் பயணத்தை தொடர தூண்டிய நிகழ்வு கோவை ஏர் போர்ட் பின் புறம் நடந்த கொடூர பாலிய வன்கொடுமை தான் என் 500 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் பொதுமக்களிடம் பாதுகாப்பு , காவல் உதவி ஆப்பை எப்படி பயன்படுத்துவது , குழந்தைகள் , பெண்கள் உதவி ஹெல்ப் லைன் மற்றும் பிங்க் பெட்ரோல் ஊக்குவிப்பு குறித்து இந்த பயணம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என நம்புகிறேன் .என்று கூறுகிறார் .

இந்த சைக்கிள் பயணத்தை கோவையில் முடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் சரவண சுந்தர் ,கோவை எஸ் .பி .கார்த்திகேயன்,துணை காவல் துறை ஆணையாளர்கள் தேவநாதன் மற்றும் திவ்வியா ஏர்போர்ட் முதல் கோவை ஆணையாளர் அலுவலகம் வரை என்னோடு சைக்கிள் ஓட்டி வந்து என் பயணத்தை முடித்து கொடுத்ததை மறக்க முடியாது.

அதே நேரத்தில் என் 13 வயது மகள் ரக் ஷா என்னோடு கோவையில் சைக்கிள் ஓட்டி வந்து என்னை ஊக்குவித்தாள் .எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு சைக்கிள் ஓட்டி சாதனை புரிய அதிக ஆவல் தான் .

விஷ்ணுராமின் சாதனைகள் ஏராளம் என்று சொன்னால் மிகையாகாது !.
கடந்த 2023 மே 28 ஆம் தேதி ஒரு மறக்கமுடியாத சாதனை பயணத்தை மேற்கொண்டார் விஷ்ணு , "இந்தியாவின் நான்கு முனைகளை காரில் ஸ்பீடாக கடந்த இந்தியன் என்ற பெயர் கிடைத்தது , அதிலும் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் விழிப்புணர்வு பயணம் அது " என்கிறார் .
" நான் சென்னையில் இருந்து புறப்பட்டு மே 30 ஆம் தேதி அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள தேசு நகரை அடைந்தேன் அங்கிருந்து ஜூன் 2 ஆம் தேதி லடாக்கில் உள்ள லே நகரை அடைந்தேன் பின்னர் குஜராத்தில் உள்ள கோடீஸ்வரர் நகரை ஜூன் 4 ஆம் தேதி அடைந்தேன் அதை தொடர்ந்து கன்னியாகுமரியை ஜூன்7 ஆம் தேதி அடைந்தேன் இந்தியாவின் நான்கு முனைகளை 256 மணிநேரத்தில் 12,226 கிலோமீட்டர் தொலைவில் முடித்து சாதனை புரிந்தேன் என்று கூறும் விஷ்ணு கின்னஸ் சாதனை சான்றிதழை பெற்றுள்ளார் .

கொரோனா தன்னார்வலர்களின் பணியை பாராட்டி 2021 ஜூலை 6 ஆம் தேதி காரில் 20 மணிநேரம் 40 நிமிடம் 2152.32 கிலோமீட்டர் தூரத்தை பெங்களூர் டு நாக்பூர் சென்று மீண்டும் பெங்களூர் திரும்பி வந்து வணங்கிய நேரத்தை மறக்கமுடியதாம் .
2022 பிப்ரவரி 22 ஆம் தேதி கோவை டு திரிச்சூர் 100 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை 2 மணிநேரம் 55 நிமிடத்தில் கடந்து நுறு சதவிகிதம் கொரோனா தடுப்பூசி சாதனைக்காக சைக்கிள் ஓடினார் .
2022 மார்ச் 26 ஆம் தேதி புவி வெப்பம் சீதோஷ்ணநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிவேக சாலை சைக்கிள் பயணத்தை கோவை முதல் சேலம் வரை பயணித்துள்ளார் விஷ்ணு .

முதல்வரின் திட்டமான போதை பொருட்கள் இல்லாத தமிழ் நாடு நிகழ்வை ஆதரித்து கடந்த 2022 அக்டோபர் 28 ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு துவங்கி அக்டோபர் 30 ஆம் தேதி காலை 6.35 மணிக்கு ஹைதிராபாத் முதல் கோவை வரை 1000 கிலோமீட்டர் தொலைவை கடந்து சாதனை புரிந்தார் .தெலுங்கானா , ஆந்திரா , கர்நாடக , தமிழ் நாடு என்று நான்கு மாநிலங்களை 37 மணிநேரம் 42 நிமிடங்கள் பயணித்துள்ளார் தன் சைக்கிளில் .
டொயாட்டோ பார்ச்சுனேர் காரில் கலைஞரின் 99 வது பிறந்தநாளை கௌரவிக்கும் வகையில் நாற்கர சாலையில் 82 மணிநேரம் 20 நிமிடம் பயணத்தை 5870 கிலோமீட்டர் தொலைவில் சென்னை துவங்கி கொல்கொத்தா , டெல்லி , மும்பை சென்று திரும்பிய ஒரே தனி மனிதர் என்ற பெருமையை பெற்றவர் விஷ்ணு .
என் சைக்கிள் சாதனைக்கு மிக உதவியாக இருப்பது என் மனைவி ஸ்வாதி என்கிறார் விஷ்ணு .

இவரின் செல்ல சைக்கிள் Scott cycle addict RC மற்றும் RC pro சைக்கிளில் தான் சாதனை பயணம் மேற்கொள்கிறேன் என்கிறார் .

இப்படி தொடர்ந்து பயண சாதனைகளை புரிந்து வரும் விஷ்ணு ராம் இன்னும் பல சைக்கிள் சாதனைகளை புரிய இருக்கிறார் விரைவில் ....

Leave a comment
Upload