
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கப்போகிறது என்று உச்சநீதிமன்றம் சொன்ன நாம் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்ற முடிவில் தான் இருந்தார் விஜய்
தனி விமானத்தில் சென்ற விஜய் இடம் சிபிஐ அதிகாரிகள் ஏழு மணி நேரம் விசாரணை செய்தார்கள்.
முழு விசாரணையும் வீடியோ எடுக்கப்பட்டது.
விஜய் வாக்குமூலம் டைப் செய்யப்பட்டு அவரிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. .
விஜய் முழுக்க முழுக்க தமிழக அரசு மீது குற்றம் சுமத்தினார்.
உயிரிழந்த 41 பேர் உடல்களை நான்கு மணி நேரத்தில் பிரேதப் பரிசோதனை எப்படி சாத்தியம் என்று கேட்டார்.
சட்டசபையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் 607 பேர்கள் என்றார் முதல்வர்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் 500 பேர்கள் என்கிறார். .
இதில் எது உண்மை என்று தமிழக அரசு மற்றும் காவல்துறையின் குளறுபடிகளை சிபிஐ அதிகாரிகளிடம் பட்டியலிட்டு அவர்களிடமே கேள்வி கேட்டார் விஜய். .
சிபிஐ வசம் இருந்த பிரச்சார நிகழ்வு தொடர்பான வீடியோ காட்சிகள் ,ட்ரோன் கேமரா பதிவினை காண்பிக்க அதிகாரிகள் அந்த சூழலில் நீங்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டார்கள்.
அதற்கு விஜயால் சரியான பதில் சொல்ல முடியவில்லை
.கூட்டத்தின் இடையே பிரச்சார வாகனம் சென்ற விதம், அதன் வேகம், அதனால் ஏற்பட்ட நெரிசல் குறித்து ஓட்டுனரிடம் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் விஜயிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்கள் அதிகாரிகள் .சில கேள்விகளுக்கு பளிச்சென்று சில கேள்விகளுக்கு தெரியாது என்றும் பதில் சொல்லி இருக்கிறார் விஜய்.
. மறுதினம் மீண்டும் விசாரணை என்று சொன்னபோது பொங்கல் மற்றும் ஜனநாயகன் படம் பிரச்சனைக் காரணமாக மூன்று நாள் தள்ளி விசாரணை வைத்துக் கொள்ள விஜய் கேட்க அவர் கோரிக்கை ஏற்று 19-ஆம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். .
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் விசாரணை நடத்திய அதே நேரத்தில் தமிழக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை தலைமையிட கூடுதல் காவல் ஆணையர் ஜோஷி நிர்மல் குமார் ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது.
யார் தலைக்கு கத்தி என்று தெரிந்து விடும்..

Leave a comment
Upload