
ஆட்சியில் பங்கு என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாக்கூர், விஜய் வசந்த் ஆகியோர் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். .
திமுக மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி ஆட்சியில் பங்கு எல்லாம் கிடையாது என்று முதல்வரின் குரலாக இவர்களுக்கு பதில் சொல்லி இருக்கிறார். .
திமுகவைப் பொருத்தவரை ராகுல் காந்தி சொல்லி தான் ஆட்சியில் பங்கு என்ற கோஷம் வரத் தொடங்கி இருக்கிறது என்று சந்தேகப்படுகிறார்கள்.
சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜராகிய அன்று ராகுல் காந்தி தமிழகம் வந்தார்.
அன்று ஜனநாயகம் படத்துக்கு ஆதரவாக "பிரதமர் தமிழகத்தின் குரலை ஒடுக்க முடியாது என்று பிரதமருக்கு எதிராகவும்....
விஜய்க்கு ஆதரவாகவும் கருத்து சொல்லியிருந்தார் ராகுல் காந்தி.
திமுக எனது அரசியல் எதிரி என்கிறது தமிழக வெற்றி கழகம். தீய சக்தி திமுக என்று வர்ணிக்கிறார் விஜய்
ராகுல் காந்தியின் கருத்து திமுகவுக்கு ஏதோ மெசேஜ் சொல்வது போல் தெரிகிறது.
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மீது காங்கிரஸ் கடும் கோபத்தில் இருக்கிறது.
பொய்யான வரலாற்றை சொல்லி இருக்கிறார்கள் என்று இளைஞர் காங்கிரஸ் அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் "இதெல்லாம் தேவையா இதெல்லாம் ஒரு ஆவணப்படமா என்று கொந்தளிக்கிறார்.
திமுக தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு இந்த படத்தை வெளியிட்டுள்ளதோ என்ற சந்தேகம் காங்கிரஸ் கட்சிக்கு வரத் தொடங்கி இருக்கிறது.
இந்த படத்தை ரிலீஸ் செய்யும் உரிமை இன்பநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கிறார்.
காங்கிரஸ் எதிர்ப்பு படம் என்று பாரதிய ஜனதாவே சொல்லியது.
ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் விழாவுக்கு அமைச்சர் எல் முருகன் தன் வீட்டுக்கு பிரதமரை அழைப்பது வழக்கம்.
இந்த முறை பிரதமருடன் பராசக்தி பட ஹீரோ சிவகார்த்திகேயன், வில்லன் ரவி மோகன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் முருகன் வீட்டு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
ஜனநாயகனுக்கு ராகுல் காந்தி ஆதரவு பராசக்திக்கு பாஜக ஆதரவு என்ற நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. .

Leave a comment
Upload