
பரந்தாமனின் மகன் சுந்தர். அதற்கு முதல் நாள் இரவுதான் அந்த புதியக் காரைவாங்கியிருந்தான்.’ குடும்பம் பல்வேறு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பொழுது,இப்படி ஒரு புதிய செலவு தேவைதானா?’ என்று அவனுடைய மனைவி கல்பனா அவனுடன்சண்டை போட்டுக் கொண்டுதான் இருந்தாள்.
இருந்தாலும் ஓர் ஐடி கம்பெனியில் நல்ல வேலையில் இருக்கும் அவனுக்கு இந்த கார் மீது ஒரு ஆசை. அதற்காக குறைந்தபட்ச தொகையை முன்பணமாகக் கட்டிவிட்டு மாதாந்திர தவணைக் கடனில் இந்த காரை வாங்கியிருக்கிறான்.
இதை பரந்தாமனுக்குஅவரின் உள்ளூர் உளவுத்துறை ஏற்கெனவே சொல்லிவிட்டது.இருந்தும் மகனின் தயவில் வாழும் அவர் ஒன்றும் பேசாமல் அமைதி காத்தார். வீணாகமகன் கடன் வாங்குகிறானே? என்ற கவலை அவருக்கு இல்லாமல் இல்லை. இருந்தாலும்அவனுடைய செய்கைகளுக்கு எப்பொழுதுமே எதிர் பேச்சு பேசாதவர் அவர்.இதற்கு காரணம்அவ்வப்போது தொலைக்காட்சிகளில் முதியோர்களைப் பற்றி வரும் செய்திகளே ஆகும்முதியோர்கள் சரியாக பிள்ளைகளால் நடத்தப்படுவதில்லை என்ற கவலையை இந்த சமூகஊடகங்கள் அவருடைய மனதில் ஆழப் பதித்து விட்டன.
மறுநாள் காலை அம்மாவையும், அப்பாவையும் சுந்தர் தன்னுடைய புதிய காரில் உட்காரசொன்னான்.கார் சென்னை மாநகரின் நெரிசல்களில் ஊடுருவிக் கொண்டு, அங்கங்கே நின்றுநின்று ஊர்ந்தது.
ஒரு மணிநேர பயணத்துக்குப் பிறகு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலின் முன்னால்போய் நின்றது. போகும் இடத்தைச் சொல்லாமல் சுந்தர் சஸ்பென்சாகவே வைத்திருந்தான்.ஹோட்டலுக்கு போன உடனே காரை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்திவிட்டு அந்தஓட்டலுக்குள் அப்பாவை அம்மாவையும் அழைத்துச் சென்றான் சுந்தர்.
அவர்கள் விரும்பியதையெல்லாம் வரவழைத்து சாப்பிடச்சொன்னான்.பரந்தாமனின் சந்தேகம் வலுப்பெற்றது. தானும் ,தன் மனைவியும் மகனுடன்சாப்பிடும் கடைசி சாப்பாடு இதுவே என்று மனதளவில் முடிவு செய்து விட்டார். ஆனால்யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. மகன் சுந்தர்,’அப்பா,உங்களுக்கு உடம்பு ஒன்றும்சரியில்லையா?’என்று கேட்டபோது கூட அமைதிகாத்தார். என்ன,மருமகளிடமும், பேரனிடமும்சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டோமே?’என்ற கவலை அவருக்குள் இருந்தது.
நன்றாக சாப்பிட்ட அவர்களை காரில் உட்கார வைத்தான் சுந்தர்.வேறு வழியாக காரை ஓட்டிக் கொண்டிருந்த சுந்தரிடம் எங்கே கூட்டிச் செல்கிறான் என்று கேட்கஆசைதான்.ஆனால்,அடக்கிக் கொண்டார் பரந்தாமன்.அந்த ஏ.சி காரிலும் அவருடையஇதயத்துடிப்பு அதிகமாக இருந்தது.வியர்த்துக் கொட்டியது. ஏறத்தாழ 70 வயதினைத் தொடும்அவருக்கு எதிர்காலத்தை பற்றியும் தன்னுடைய மனைவி கமலாவைப் பற்றியும் கவலைஅதிகமாகவே இருந்தது.
’ஓய்வூதியும் எதுவும் வாங்காமல் பிள்ளைக்கு தான் ஒரு பாரமாக இருக்கிறோம்’ என்றமன உறுத்தல் அவருக்கு இருந்துக் கொண்டே இருந்தது ’ஆனால் பையன் எங்கே அழைத்துச்செல்கிறான் என்று சொல்லவும் இல்லை. இவரால் கேட்கவும் முடியவில்லை. அப்படியேநினைத்துக் கொண்டு இருந்தவர்காரிலேயே சற்று கண்ணயர்ந்து விட்டார்.
சற்று நேர பயணத்திற்கு பிறகு கார் நின்றது. பார்த்தால் அவருடைய வீட்டிற்கே திரும்பிவிட்டு இருந்தார்கள். பரந்தாமனின் மனதில் பரம சந்தோஷம்.அவர் நினைத்தபடி எதுவும்நடக்கவில்லை.
காரிலிருந்து அப்பாவை கைத் தாங்கலாக அவருடைய அறைக்குள்ளே அழைத்துச்சென்றான் சுந்தர்.பின்னாலேயே அவனுடைய அம்மாவும் மெதுவாக நடந்து வந்தாள். அவரைஅவருடைய படுக்கையில் படுக்க வைத்து ஓய்வெடுக்கச் சொன்னான்.சுந்தர் வெளியே வந்துஹாலில் சோபாஃவில் அமர்ந்து டிவியை ஆன் பண்ண முற்பட்டான்.உள்ளேயிருந்து வந்தஅப்பாவின் குரல் சொன்னது,’சுந்தர் நம்மை ஏதோ ஒரு முதியோர் இல்லத்தில்தான் சேர்க்கப்போகிறான் என்று நான் என் தப்புக் கணக்கு போட்டு விட்டேன். ஆனால்அப்படி எதுவும்நடக்கவில்லை. நம்ம பையன் மிகவும் நல்ல பையன்.’என்றார்.
இதைக்கேட்ட அவனுடைய அம்மா கஷ்ட காலம் என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
இது காதில் விழுந்த சுந்தர்தான் அதிர்ச்சியடைந்தான்.’ அவருடைய இந்த்தப்புக்கணக்குக்கு காரணம்" என்று யோசிக்கத் துவங்கினான்.

Leave a comment
Upload