தொடர்கள்
கதை
நெஞ்சம் மறப்பதில்லை - முனைவர் என். பத்ரி

20260128081941270.jpeg

அன்று கல்லூரியில் கடைசி நாள்.லதா அவனுக்கு பிடித்த பச்சை நிறப்புடவையில்வரவில்லை.ஏமாற்றத்தை உணர்ந்த அஷோக் அவள் முதல் நாள் அவனிடமிருந்து வாங்கிப்போன புத்தகத்தை கேண்டீன் போகும் வழியில் அவனுடைய கையில் திணித்துவிட்டுஓரவிழிப்பார்வையால் அவனைத் தாக்கிவிட்டு மறைந்து விட்டாள்.அவள் கொடுத்த புத்தகத்தைபையில் வைத்துக்கொண்டான் அஷோக்.அவள் அவனை மணக்கத் தயாராக இல்லை எனபதைஅவள் கட்டியிருந்த நீலநிறப் புடவை அவனுக்கு உணர்த்தியது.

பல வருடங்களுக்குப் பின்....

அஷோக் அப்போதுதான் அந்த ஓட்டலின் உள்ளே நுழைந்தான். ஓட்டலின்உள்ளேயிருந்து ஒரு குழந்தை வெளியே ஓடி வந்துக் கொண்டு இருந்தது.’அஷோக், அஷோக். நில்லு. நில்லு. ஓடாதே’ என்று சொல்லிக் கொண்டே அந்தக் குழந்தையின் பின்னால் ஒருபெண்ணும் ஓடிவந்துக் கொண்டிருந்தாள்.

அந்தக் குழந்தையை தடுத்தி நிறுத்தி அவளிடம்ஒப்படைத்தான்.நன்றி சொன்ன அவள் கண்கள் அவனிடம் எதோ சொல்ல முயற்சித்தன.

அவள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாள். அஷோக்குற்கு அவளைஎங்கேயோ பார்த்தது போல் இருந்தது. எங்கு?எப்போது? மனதைக் குடைந்துக்கொண்டான்.ஆனால் நினைவுக்கு வரவில்லை.தொடர்ந்து யோசித்துக் கொண்டே அங்குஇருந்த ஒரு சேரில் உட்கார்ந்தான்.மேசையின் மேல் இருந்த மெனுக்கார்டை உற்றுப்பார்த்தான்.மனம் அதில் ஒட்டவில்லை.

சாப்பிட்டுவிட்டு கைகளை கழுவ போனவன் பின்னாலையே அந்தபெண்ணும் வந்தாள்.’ என்ன அஷோக் எப்படி இருக்கீங்க?’ என்று கேட்டவளுக்கு இவன் பதில்சொல்வதற்குள் அவளுடைய கணவனும் கைக் கழுவ வந்தான்.

கைகளை அவசர அவசரமாககழுவிக்கொண்டு பில்லுக்கு காசு கொடுத்துவிட்டு அவள் தன் கணவனுடனும்,குழந்தையுடனும்புறப்பட்டு விட்டார்கள்.

லதா. லதாவே தான்.

மறுநாள் அவள் கொடுத்த புத்தகத்தை எதேச்சையாக எடுத்தான்.திறந்துப் பார்த்தான்.உள்ளேலதாவின் கடிதம்.பரபரப்புடன் படித்ததில் அவளுடைய பச்சைப் புடவையை அவள் தங்கைஅணிந்துக் கொண்டு சென்று விட்டாள்.அதனால் அவன் விரும்பிய பச்சைநிறப்புடவையில்வரமுடியவில்லை.வருத்தம் தெரிவித்திருந்தாள்.அவள் காட்டி விட்டுப் போன பச்சைநிறகைக்குட்டை கண் முன்னால் வந்து விட்டுப் போனது.அதற்குப் பிறகு அவளை இன்றுதான்பார்த்தான்.

அலமாரியில் டைரியிலிருந்த அந்த கடிதத்தை திரும்ப ஒரு முறை படித்தான்.மனதில்சோகமும் ஏக்கமும் திரும்பவும் ஒருமுறை வந்து ஒட்டிக் கொண்டது.

விரைவில் என்னை பெண் பார்க்க ’வா’ என்று எழுதி முடித்திருந்தாள். இவனுடையவரவை எதிர்பார்த்து எவ்வள்வு நாள் ஏமாந்து போயிருப்பாள். இன்று பார்த்தும் அவளுடன் பேசமுடியவில்லை.

அவளுடைய குழந்தைக்கு இவனது பெயர்.தனக்குஅடுத்த மாதம் பிறக்க இருக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் அவளுடையபெயர்தான்.முடிவு செய்து விட்டான்.