தொடர்கள்
கவர் ஸ்டோரி
காக்கி சட்டையை கிழித்தெறிந்த நீதி -கண்ணாழ்வார்

20260311074247145.jpeg

20260309164007974.jpeg

சாத்தன்குளம் வியாபாரி ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தந்தை மகன் இருவரையும் விடிய விடிய கடுமையாக லாக்-அப் பில் வைத்து சித்ரவதை செய்து அடித்து துவைத்து கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர் .

தந்தை மகனும் அடுத்தடுத்து இறந்ததும் இந்த காவல்துறை மரணம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

சாத்தன்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் , சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ் , பாலகிருஷ்ணன் ,சிறப்பு சப் –இன்ஸ்பெக்டர் பால் துரை,போலீஸ்காரர் முருகன் முத்துராஜ், செல்லதுரை,தாம்ஸ் பிரான்ஸிஸ் , வெயிலுமுத்து, சாமத்துரை என 10 போலீஸார் கைதாகி மதுரை மத்திய சிறையில் இரட்டை கொலை வழக்கு பதிந்து அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.

சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பால்துரை கரோனா தொற்றில் இறந்துவிட்டார்.

9 போலீசார் மீது இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரணை நடைப்பெற்றது.

காவல் நிலையத்தில் விசாரனை கைதியான தந்தை-மகன் இருவரையும் தாக்கி மரணம் விளைவித்த 9 போலீசாருக்கும் அதிக பட்ச தண்டனை விதிக்கலாம் என்று மத்திய , மாநில அரசு அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

20260309164155646.jpeg

நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பினை வாசித்தார்…

”ஜெயராஜ் , பென்னிக்ஸ் இருவர் மீதும் எந்தவித குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை.

கவுரமாக, கண்ணியமிக்க வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

நிராயுதபாணிகளான இருவரையும் சட்ட விரோதமாக போலீஸ் காவலில் வைத்து தந்தை முன் மகனையும் , மகனின் முன்பு தந்தையும் நிர்வாணப்படுத்தி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் உடன் 9 போலீஸார் ஈவு இரக்கமின்றி அடித்து சித்ரவரதை செய்துள்ளனர்.

இறந்த தந்தை மகன் இருவரின் பிரேத பரிசோதனை வீடியோவில் இறந்த இருவரின் உடலில் இருந்த காயங்கள் பார்த்து மனம் கொதிக்கிறது. குற்றவாளிகளின் கொடூர மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறது. காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து வரும் நபர்களை எப்படி நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழிகாட்டுதல்களை கடை பிடிப்பதில்லை என்பதற்கு இந்த வழக்கு உதாரணம்.

போலீஸ் நிகழ்த்திய காவல் நிலைய மரணம் என்ற கொடிய நோய் மேலும் பரவக்கூடாது.

2026030916444273.jpeg

கடும் தண்டனை விதித்தால் மட்டுமே இதை கட்டுபடுத்த முடியும் என்பதால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை(இரண்டு எண்ணம் ) வழங்கப்படுகிறது.

குற்றவாளிகள் மொத்தம் 1 கோடியே 36 லட்சம் அபராத தொகையாக பாதிக்கபட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும் .

அபராதம் செலுத்த தவறினால் வருவாய் வசூல் சட்டப்படி அந்த தொகையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

20260310134151626.jpg

தீர்ப்பளித்த நீதிபதி இரட்டை (எண்ணம்) தூக்கு தண்டனை விதித்ததால் தனது பேனாவின் நிப் முனையை உடைத்தார்.

இந்திய தண்டனை சட்டங்களை பொறுத்தவரை, ஒவ்வொரு கொலைக்கும் குற்றப்பத்திரிகையில் தனித்தனியாக எண்ணம் கூட்டப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.

சாத்தான்குளம் இரட்டை கொலை காவல் நிலைய வழக்கும் அப்படித்தான் தான் நடந்திருக்கிறது.

ஒருவர் செய்த குற்றத்திற்காக அவருக்கு இரண்டு எண்ணம் மரண தண்டனை விதிக்கப்படுவதே 'இரட்டை மரண தண்டனை' எனப்படும்.

சாத்தான்குளம் வழக்கில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் என இருவர் கொல்லப்பட்டதால், ஒவ்வொரு கொலைக்கும் தனித்தனியாக ஒரு மரண தண்டனை என மொத்தம் இரண்டு மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நடைமுறையில் ஒரு மனிதருக்கு ஒருமுறைதான் மரண தண்டனையை நிறைவேற்ற முடியும், தூக்கிலிட முடியும்.

சட்டப்பூர்வமாக ஒரு மரண தண்டனை மன்னிப்பு அல்லது மேல்முறையீடு என ஏதேனும் ஒரு காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டலாம் அல்லது குறைக்கப்படலாம்.

அப்படி செய்தால் மற்றொரு மரண தண்டனை அமலில் இருக்கும்.

இது குற்றவாளிக்கு சலுகை கிடைப்பதைத் தடுத்து, அவர் செய்த ஒவ்வொரு உயிரிழப்புக்கும் உரிய தண்டனையை உறுதி செய்கிறது.

இரட்டை மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

அடுத்து மேல்முறையீடு குற்றவாளிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் .

லாக் அப் சித்ரவதை மரணம் குறித்த தகவல்களை அப்போது அங்கு பணியில் இருந்த பெண் காவலர் ரேவதி விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தது தான் ஹைலைட்

காக்கி சட்டையை கிழித்தெறிந்த நீதி.