
தமிழகத்தையே உலுக்கி வந்த சாத்தான்குளம் வழக்கில் 9 காவலருக்கும்தூக்குத்தண்டனையை வழங்கித் மதுரை அமர்வு நீதிமன்றம் சமீபத்தில்தீர்ப்பளித்துள்ளது.இந்த வழக்கில் இப்படியான அரிய தீர்ப்பு கிடைப்பதற்கு முக்கியசாட்சியமே பெண் காவலர் ரேவதி தான்.
சக காவல்துறையினரால் நடத்தப்பட்ட மனித நேயமற்ற கொடூரச் செயலைக் கண்டுமனம் பொறுக்காமல் நேரடி சாட்சியமாக மாறிய ஒரு புதுயுக நீதி தேவதைதான் காவலர்ரேவதி.
இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரணை செய்து வந்தவர் மாஜிஸ்திரேட் பாரதிதாசன். அவரின் முன்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றியவர்தலைமைக் காவலர் ரேவதி, "சார், என்னோட மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்தஅனைத்து கொடுமைகளையும் உங்களிடம் சொல்கிறேன்.எனக்கு இரண்டு பெண்குழந்தைகள்.என் குழந்தைகளுக்கும், எனது பணிக்கும் பாதுகாப்பளிப்பதாக உத்தரவாதம்அளிக்க முடியுமா?" எனக் கேட்கிறார்! அதற்கு உத்தரவாதமும் அளிக்கிறார் மாஜிஸ்திரேட்பாரதிதாசன்.நடந்த அனைத்தையும் கொட்டித்தீர்க்கிறார் ரேவதி.
கொடூர சைக்கோக்களுக்கு மத்தியில்மனிதநேயத்தோடு இருந்த ஒரே மனிதர் ரேவதிதான்.

இவ்வழக்கில் நேரடி சாட்சியமாக இருந்த ரேவதியின் சாட்சியமே வழக்கில்மற்றவர்களின் பொய்களையெல்லாம் அடித்து காலி செய்தது. குறிப்பாக, உடல்நலக்குறைவால் இருவரும் இறந்தார்கள் என்னும் பொய்யான வார்த்தைகளைவெளிச்சத்துக்கு கொண்டு வந்தது இந்த நீதி தேவதையின் நேரடி வாக்கு மூலசாட்சியேஇன்னமும் நீதி தேவதைகள் நம்மோடு சமூகத்தில் வாழ்கிறார்கள் என்பதைஉறுதிப்படுத்துகிறது.இந்நிலையில் ஒரு வீரமான காவல் அலுவலராக நேரமைக்கு துணைநின்று நேரடி சாட்சியம் அளித்த ரேவதியை நாம் அனைவரும் பாராட்டத்தான்வேண்டும்.அவரால்தான் நீதி வென்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.
பாரதியின் புதுமைப் பெண்ணாகவே ரேவதி நம் கண்களின் முன் நிற்கிறார்.புதுமைப்பெண்ணை அடையாளம் காட்டும் பாரதியாரின் ,
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறியாமையில்
அவ்வள மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!”
என்னும் வார்த்தைகள் முழுமையாக காவலர் திருமதி ரேவதிக்கு பொருந்தும்.
தற்கால பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடும்வீரத்தை இந்த சிங்கப் பெண்ணை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு பெறுவதற்கு முனையவேண்டும்.
இவரது மனிதாபிமான செயலையும், நீதிக்கு உரம் சேர்க்க குரல் கொடுக்கும்பாங்கினையும் பாராட்டி விருது வழங்கி பெருமைப்படுத்திட முன்வரவேண்டியது மத்திய,மாநிலஅரசுகளின் கடமை.
இவரது முன்னெடுப்பால் இனியொரு இவ்வாறானகொடுமை சமூகத்தில் இதுபோல் நிகழாது என்று நம்புவோமாக.


Leave a comment
Upload