
மறைந்த முன்னாள் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் துணை முதலமைச்சருமான அஜித் பவாரின், மனைவி சுனேத்ரா பவார், பாராமதி இடைத்தேர்தலில் வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த இடைத்தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பாராமதி விமான ஓடுதளத்தில் தரையிறங்க முயன்றபோது, ஜனவரி 28-ஆம் தேதி நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே வியாழக்கிழமை மதியமே காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் இருந்து விலகிக்கொண்டது.
இறந்தவரின் உறவினர் அந்த இடத்திற்கு இடைத் தேர்தலில் நிற்கையில், அவரை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது வழக்கம் தான்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளரும் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னித்தலா செய்தியாளர்களிடம் , "அஜித் பவாரின் துயரமான மறைவின் காரணமாக, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிடாது," என்று தெரிவித்தார்.
வேட்பாளரை வாபஸ் பெறுமாறு சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (NCP) பிரிவைச் சேர்ந்த தலைவர்களும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த பாராமதி இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் வெற்றிபெற இண்டி கூட்டணித் தலைவர்கள் விரும்பியிருந்தாலும் காங்கிரஸ் இதற்கு உடன்படவில்லை
சிவசேனா (UBT) கட்சியும் முன்னதாகவே, இந்தத் தேர்தலில் தாங்கள் வேட்பாளர் யாரையும் நிறுத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தது.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் இன்றாக இருந்தது.
1991-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றதிலிருந்து, இந்த ஆண்டு அவர் காலமாகும் வரை, இத்தொகுதியை அஜித் பவார் தன் வசம் வைத்திருந்தார். அதற்கு முன்னதாக, அவரது சித்தப்பா சரத் பவார் இத்தொகுதியை 24 ஆண்டுகளாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
பவார் குடும்பத்தினரின் கோட்டையாகத் திகழும் பாரமதி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இத்தொகுதி அமைந்துள்ளது.
சுனேத்ரா பவார் திங்களன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். தற்போது காங்கிரசும் தனது வேட்பாளரை வாபஸ் வாங்கிவிட்டதால் போட்டியின்றி சுனேத்ரா பவார் எம் எல் ஏ வாக ஆகியும் விட்டார்.
மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராகப் பதவியேற்றார் .

Leave a comment
Upload