கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
ஸ்ரீ அண்ணாதுரை ஐயங்கார் -மும்பை சதஸ்
இந்த வார காணொளி நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். கடந்த பல வாரங்களில் பல அனுபவ காணொளிகளில் நாம் அந்த காலத்தில் நடைபெறும் சதஸ் பற்றி கூறியிருப்பார்கள். அப்படி அவர்கள் கூறும்போது அந்த சதஸ் எப்படி இருக்கும் என்று நமக்கு ஒரு ஆவல் இருக்கும். அந்த ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக நமக்கு கிடைத்திருக்கிறது ஒரு காணொளி. அதுவே இந்த வார வரப்பிரசாதம். நமது கண்களை மூடி 1988 அன்று நடந்த சதஸ் நிகழ்ச்சியை கேட்போம்.


Leave a comment
Upload