பொது
வீடியோ கேமுக்கு ஒரு மணி நேரம்தான்! - ஆர். ராஜேஷ் கன்னா

20181118213424305.jpg

சீனாவில், இளம் வயதினர் வீடியோ கேம்களில் எந்நேரமும் மூழ்கி தங்கள் பொழதினை வீணடிப்பதுதான் தற்போதய பெரும் பிரச்சனை. 'வீடியோகேம் விளையாட்டு அடிமைத்தனம்... சீன நாட்டு கலச்சாரத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட போர்' என சீனா நாட்டு அரசாங்கம் கருதுகிறது.

வீடியோகேம் விளையாட்டு மோகத்திலிருந்து இளம் வயதினரை மீட்டெடுக்க சீனாவின் டென்சென்ட் என்ற வீடியோ கேம்களை உருவாக்கி வெளியிடும் நிறுவனம் ஒரு புதிய யுக்தியை கையாண்டுள்ளது. ஆன்லைன் மூலம் முகத்தினை ஸ்கேனிங் செய்து கொண்டு, அதனை சீன அரசின் புகைப்படம் மற்றும் வயது குறித்து தரவு சேகரிப்பு அமைப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது. 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்று ஸ்கேனிங் ரிசல்டு வந்தால், அந்நிறுவனம் அவர்களை தினமும் 1 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட அனுமதிக்கும். வீடியோ கேம் விளையாடும் நபர் 12 வயதிற்கு மேல் 18 வயதிற்குள் உடபட்டவராக இருந்தால், ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட அனுமதிக்கும்.

20181118213526667.jpg

சீனாவில் வீடியோகேம் விளையாடும் சிறுவர்களை அவ்வளவு எளிதாக குறைத்து மதிப்பிட்டு விட முடியாது . 12 வயதிற்குள் இருக்கும் சிறுவர்கள் தாங்கள் 18 வயதிற்குட்பட்ட நபரின் முக அமைப்பினை பயன்படுத்தி ஆள் மாறாட்டம் செய்து விளையாடுகிறார்கள் என்றாலும் வீடியோ கேமின் இறுதி ஆட்ட நிலை வரும் போது தானாக நிகழம் முக அங்கீகரம் ஸ்கேனிங் மூலம் ஆள் மாறாட்டம் செய்து விளையாடும் நபரின் வயதினை சில நொடிகளில் தெரிந்து கொள்கிறார்கள். ஆள் மாறாட்டம் செய்ததது கண்டுபிடிக்கப்பட்டால் அடுத்த முறை ஆள் மாறாட்டம் செய்த நபர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர் என இருவருமே வீடியோகேம் விளையாட முடியாமல் டென்சென்ட் செயலி தடை செய்துவிடும்.

20181118213553921.jpg

சீன நாட்டு அரசு அனைத்து வீடியோ கேம்களிலிலும் முக அங்கீகாரம் கொண்டு வயதினை தீர்மானிக்கும் டென்சென்ட் செயலியை இணைத்துள்ளது. சீனாவில் தற்போது பிரபலமாக விளையாடப்படும் Honour of Kings வீடியோ கேமில் விளையாடும் பாதிக்கு மேற்பட்டவர்கள் தங்கள் முக அங்கீகாரம் மூலம் 18 வயதிற்குட்பவர்களாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

வீடியோகேம் விளையாடும் சிறார்கள் சிலர் தங்களின் மூதாதையரான தாத்தா மற்றும் பாட்டி புகைப்படங்களை முக அங்கீகார செயலிக்கு அனுப்பி வைத்து, முக அங்கீகார செயலியை ஏமாற்றும் ட்ரிக்கான வேலைகளை கம்ப்யூட்டர் மூலம் நிகழ்த்தினர். சில இளைஞர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் தங்கள் உறவினர்களின் முகங்களை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தனர். இதனை டென்செண்ட் செயலி கண்டுபிடித்து, சீன அரசாங்கத்திற்கு ரிப்போர்ட் அனுப்பி, சீன சிறார்களின் அதிபுத்திசாலி திருட்டுதனத்தினை தடுத்தது.

20181118213632115.jpg

அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில், வீடியோகேம் மார்க்கெட் மிக பெரும்பான்மையான இடத்தினை பிடித்துள்ளது. எவ்வளவு கட்டுபாடுகளை சீன அரசு வீடியோ கேம் விளையாட்டிற்கு எதிராக அமுல்படுத்தினாலும், சீனாக்கார்கள் கடந்த ஒரு வருடத்தில் 34 பில்லியன் அமெரிக்க டாலர்களை வீடியோகேம்களுக்காக செலவிட்டுள்ளனர்.

20181118214313825.jpg

பிரபலமான வீடியோ கேம் செயலியான டென்சென்ட், சீன அரசுடன் இணைந்து முக அங்கீகார மற்றும் வயதினை நிர்ணையிக்கும் செயலியை அறிமுகபடுத்திய பின்பு, விடியோ கேம் வர்த்தகம் கடந்த ஒரே வருடத்தில் 30 சதவீத வீழ்ச்சி கண்டது. சீனா தனது இளைஞர்களை வீடியோ கேம் என்ற கொடிய அரக்கனிடமிருந்து எப்படியாவது மீட்டு அவர்களின் பயனுள்ள நேரத்தினை நாட்டிற்கு பயன்படுத்த விரும்புகிறது.

2018111821370114.jpg

விண்வெளிக்கு ஆட்களை அனுப்பி சாதனை படைத்த சீனா, தற்போது வீடியோகேம் என்ற கொடிய அரக்கனிடமிருந்து தனது நாட்டு சிறார்களை மீட்க கடுமையாகவே போராடி வருகிறது. இது இந்தியாவிற்கும் வருமா?