
காணும் பொருளெலாம் உந்தன் முகமே...
கண்இமை மூடினேன் உந்தன் முகமே...
கனவில் வருவதும் உந்தன் முகமே...
உள்ளங்கைகள் திறந்திட உந்தன் முகமே...
உந்தன் முகமே... எதிலும் உந்தன் முகமே..!
சுட்டும் சூரியனில் உந்தன் முகமே...
வட்ட நிலவிலும் உந்தன் முகமே...
சிமிட்டும் நட்சத்திரத்தில் உந்தன் முகமே...
சிந்தும் கண்ணீர் துளியில் உந்தன் முகமே...
உந்தன் முகமே... எங்கும் உந்தன் முகமே..!
ஓடும் நதியினில் உந்தன் முகமே...
கூடும் மேகமதில் உந்தன் முகமே...
ஆடும் அலைகளில் உந்தன் முகமே...
தேடும் விழிகளில் உந்தன் முகமே...
நாளும் பொழுதும் உந்தன் முகமே
மறவா நாடும் எந்தன் மனமே...!!

Leave a comment
Upload