
டெல்லியில் 10 நாட்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 35 முதல் ரூ. 40 ஆக இருந்தது. தென் மாநிலங்களில் சில நகரங்களில் ரூ. 100 வரை விற்கப்படுகிறது. வெங்காய விலை உயர்வு பற்றி மக்கள் கருத்து என்ன?

ஸ்ரீராம் , நங்கநல்லூர்.
கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் முன்னெப்போதும் இல்லாத மழை காரணமாக பயிர் சேதமானதால், வெங்காய விலை உயர்ந்துள்ளது என்று அரசு கூறுகிறது....
ஆனால், வெங்காயத்தை சுமார் 10 மாதங்களுக்கு சேமிக்க முடியும் என்று கூறுகிறார்கள்..
பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை மதிப்பிடுவது, தேவை மற்றும் வழங்கலுக்குள்ளே இடைவெளியை மதிப்பிடுவது, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, பெறுவது மற்றும் விநியோகிப்பதற்கு 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என்று நாம் கருதினாலும், 9 மாத சேமிப்பு கணக்கிற்கு இன்னும் 4 முதல் 5 மாதங்கள் வரை எஞ்சியிருக்கின்றது...
அரசு அரிசி மற்றும் கோதுமைக்கும் இதைப் போல் செய்கிறது. சேமிப்பு இருப்பதால், திடீரென இவைகளின் விலை உயர்வதில்லை. உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், பருப்பு வகைகள் போன்ற சில அத்தியாவசிய பொருட்களுக்கு இதேபோன்ற சேமிப்பு வசதிகளை அரசாங்கம் சிந்தித்து நடைமுறை படுத்தினால், திடீர் விலை உயர்வை தவிர்க்கலாம்.
AE.Senthil , Adambakkam, Chennai.
Find whenever election is there especially northern states, either before or after,onion prices raises abnormally, allowing the election sponsors to mint back their money..
கார்த்திக், நாகை
ஆன்மீக ஆட்சியில் இது எல்லாம் சகஜமப்பா, விலை உயர்வு என்று தெரிந்து, ஏன் அதை சாப்பிடுகிறீர்கள். அப்படி என்று நான் கேட்கவில்லை, பிஜேபியின் மத்திய அமைச்சர்கள் கேட்கிறார்கள்.
Padma Anand , Adambakkam , Chennai
This has become more of a political issue than a people issue. Every year this happens and the party in power gets blamed for it. The heavy rains have destroyed the crops and created a supply shortage and whatever stock available is being hoarded in anticipation of a growth in demand resulting in price increase. Sheer speculation.
பா.சம்பத், சென்னை
இந்தியாவில், வெங்காயம் அதிகம் விவசாயம் செய்யப்படும் மத்திய மாநிலங்களான மகராஷ்டிரா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா போன்ற இடங்களில் மிகவும் கனமழை பெய்திருக்கிறது. இப்போது இருப்பில் உள்ள பழைய வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. வெங்காய பற்றாக்குறையை போக்க மத்திய அரசு, எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்கிறது. இன்னும் சில நாட்களில் வெங்காயம் விலை குறையும்.....
ரேவதி , முகப்பேர் கிழக்கு
அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து ஏன் வெங்காயத்தை நீக்குனீங்க.. அதான் இப்ப விலை ஏறிப்போச்சு..
எல்லாம் இந்த 6 வருடத்தில் தான் என்று குறை கூறுகிறார்கள்... அதற்கு முன் என்ன தேனும் பாலும் ஓடியதா? இல்லை வெங்காயம் கிலோ 5 ரூபாய்க்கு கிடைத்ததா?
இந்த கொரோனா போன்ற அசாதாரண சூழ்நிலையில் அரசு முடிந்த அளவு சிறப்பாகவே செயல்படுகிறது, குற்றம் சொல்லுவது மிக எளிது, போய் உருப்படியா ஏதாவது செய்தி போடுங்கள்...
மாசாணிமுத்து ,ஆட்டோ ஓட்டுனர், கொருக்குப்பேட்டை
நாங்க இந்தியாவை டிஜிட்டலு இந்தியாவா மாத்திக்கினுக்கீறோம்... இதுல வந்து வங்காயம் பெருங்காயம்னு சொல்லிக்கினு... வெலை உசர்றது எல்லாம் சர்வ சாதாரணம்... கண்டுக்காம போவியா, அத்த உட்டுட்டு... பஞ்சம், பட்டினின்னு அல்லார் டயத்தையும் வேஸ்ட் பண்றியே...
காய்கறிகள் ஏற்றுமதி செய்யும் சிறு, நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துவிட்டு, அதானியின் ஏற்றுமதி நிறுவனம் கோடிக்கணக்கான கிலோ வெங்காயங்களை ஏற்றுமதி செய்வதோடு, பதுக்கியும் வைத்திருப்பதையும் மத்திய அரசு சுத்தமாக கண்டுகொள்ளவே இல்லை. இதனால்தான் தென் மாநிலங்களில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
விளைச்சல் குறைந்ததால், விலை அதிகரிப்பது இயல்பு. இதற்கெல்லாம் தப்பு கண்டுபிடித்தால் அது தவறு. வெங்காயம் வெளிமாநிலத்தில் இருந்து வருகிறது. இதுவே நம் தமிழ்நாட்டில் தக்காளி விலை கிலோ 100 ரூபாய் வரைக்கும் சென்றுள்ளது. தக்காளி, தமிழ்நாட்டில் விளைகிறது அதற்கு என்ன காரணம்? விளைச்சல் குறைவால் நடக்கிறது, இது ஒன்றும் புதுசு இல்லை. எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்வது தவறு.
GST வந்தா எந்த பொருளோட விலையும் இப்படி ஏறாதுனு முட்டுக்குடுத்தானுவலே எங்கடா அவனுக வரிசையா வாங்க.. ஓங்கி மூக்குல குத்தனும்..
வெங்காய விலையையே கட்டுப்படுத்த முடியலை... அப்புறம் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தப்போறாங்க..??!
இனிமேல் பகோடா கடையும் போட முடியாதா?
ஆக எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஈஜிபுத்து வெங்காயம் தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட சதி.
முத்துக்குமார், மளிகை கடை வியாபாரி, போரூர்
நாங்க கோயம்பேட்டில் கிலோ ₹55 என வாங்கி வந்தாலும், பாதி மூட்டை வெங்காயம் அழுகிடுது. இதனால விலையை கூட்டி விற்க வேண்டியிருக்கு. மக்களும் வெங்காயத்தை வேடிக்கை பார்த்தபடி செல்கின்றனர். இதனால சிறு வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம்தான்.
ராஜேந்திரன், கடை ஊழியர், ஆலப்பாக்கம்
இதுல கொடுமை என்னான்னா, டாஸ்மாக் பார்ல வெங்காயம் போட்ட ஆம்லெட் ₹25, ₹30னு சொல்றாங்கனு பார்த்தா... எதுவுமே போடாத ஆஃப் பாயிலுக்கும் அதே ரேட் கேக்கறாங்க! ஒரு நியாயம் வேணாமாங்க!!? வீட்டுல பாதி வெங்காயத்தை அரிஞ்சு சாம்பார் வைக்கிறாங்க. இனிமே குடிச்சுட்டு வந்தா, ஒரு கிலோ வெங்காயம் வாங்கிட்டு வரணும்னு ஆர்டர் வேற..!
செந்தில்வேலன், வேன் டிரைவர், வடபழனி
முன்னெல்லாம் கோயம்பேட்டுல இருந்து சின்ன வியாபாரிகளின் காய்கறி மூட்டைகளை ஏற்றிச் செல்வேன். அவங்க வெங்காயம், உருளை, காய்கறிகளை ஒரு கவர்ல போட்டு தருவாங்க. இப்போ எல்லாமே விலை அதிகரிப்பால்... மூச்! வண்டி கூலியை மட்டும் கொடுத்துட்டு கிளம்பிடறாங்க.
வெங்காயம் விலை ஏறியதை பற்றிப் பேசும் ஊடகங்கள். வெங்காயம் விளைவிக்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டதை பற்றி பேசுவது இல்லை.... ஊடகங்கள் என்பது உண்மையை கூறவேண்டும். அதை விடுத்து மக்களிடம் இது போல கேள்வி கேட்டு பீதியை கிளப்பி விடுவது தவறு....
Leave a comment
Upload