
நவராத்திரி துவங்குமுன் ‘உங்கள் வீட்டு கொலுவை படமெடுத்து அனுப்புங்கள், சிறந்த கொலுவிற்கு பரிசுகள் காத்திருக்கின்றன’ என்று அறிவித்தோம்.
இது ஒரு போட்டியல்ல...
ஏனெனில் கொலு வைப்பது என்பது நமது பாரிம்பரியத்தின் தொடர்ச்சி. பெண்கள் ஒருவர் இல்லத்திற்கு ஒருவர் சென்று வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொள்ளும் சாக்கில் அளவளாவுவது, நட்பைத் தொடர்வது... இது தான் அதன் ஆதாரம்.
இதில் கொலு பெரிதாக வைப்பது, அல்லது சிறிதாக வைப்பது, பக்கத்தில் பார்க் வைப்பது, பிரம்மாண்டமாக வைப்பது என்பதெல்லாம் அவரவரது விருப்பம், சூழ்நிலை, இடம் பொறுத்தது.
ஆக பரிசுகள் அறிவிப்பது என்பது இது தான் சிறந்தது என்ற வரையறையில் சொல்வதல்ல. கொலு வைத்த ஒவ்வொருவருமே பரிசு பெற்றவர்கள் தான்.
இருந்தாலும், பிரபல காஸ்டியூம் டிசைனர், அனு பார்த்தசாரதியிடம் அவருக்கு பிடித்த மூன்று கொலுவை தேர்ந்தெடுக்கச் சொன்னோம்.
சிரமேற்கொண்டு தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.
அந்தப் பட்டியல் இங்கே….
முதல் இடம்..

46. லக்ஷ்மி மஹால் சென்னை.
அனு காமெண்ட்ஸ்:
நவ துர்க்கை கான்செப்ட், கைவினை பொம்மைகள், நூறு வயதான கொலு பொம்மைகள் பராமரிப்பு, ஒவ்வொரு கொலு பொம்மையையும் விளக்கிச் சொன்னது, பிரமாதமான அலங்காரம், கிரியேடிவான ஐடியா... அதற்காகவே தேர்ந்தெடுத்தேன்.
இரண்டாவது இடம்


5. ஜெயா குருமூர்த்தி பெங்களூரு.
அனு காமெண்ட்ஸ் :
தெர்மாகோலை வைத்துக் கொண்டு பிராதமான கை வேலைப்பாடு. அவ்வளவும் நூதனமான வேலைப்பாடு, ஏராள உழைப்பு, விஷ்ணுவும், தேவியரும் அவ்வளவு தத்ரூபம். லவ்லி!!
மூன்றாவது இடம்

36. சாய் சுதா, போரூர், சென்னை.
அனு காமெண்ட்ஸ் :
சமூக அக்கறையுடன் ஒரு கொலு தீம். கொலு பொம்மைகளும், கதைகளும் பிரமாதம்.
இன்றைய வாழ்வை சிறப்பாக எடுத்துரைத்தது இந்த கொலு. ஒவ்வொரு கொலு பொம்மையிலும் ஒரு கதை சொன்னதற்காக, அருமையாக அலங்கரித்தற்காக, சிறந்த திட்டமிடல். இது தான் என்னைக் கவர்ந்தது.
வெளிநாடுகளிலும் கொலு வைத்து அசத்தியிருக்கின்றனர் நம் வாசகர்கள்.
கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் பரிசு கொடுப்பது தான் முறை. ஏனெனில் இந்தியாவும் சரி, வெளிநாடுகளும் சரி, அத்தனை கொலுவும் அழகுதான். அதில் சந்தேகமேயில்லை.
இருந்தாலும், அனு தேர்ந்தெடுத்த வெளிநாட்டு கொலு...
அயல்நாடு பகுதியில்....

40. உமா ராமனாதன், பிரிட்ஜ் வாட்டர், அமெரிக்கா
அனு காமெண்ட்ஸ் :
தீம்பார்க் அட்டகாசம். அதிலும் சூரிய பகவானையும், மிருகங்களையும் வாட்டர் பெட்டையும், நூதனமாகவும், கிரியேடிவாகவும் செய்திருந்தது என்னைக் கவர்ந்தது.
முதல் மூன்று இடங்கள் பெற்றவர்கள் தங்களுக்கான பரிசினைப் பெற விகடகவியை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் info@vikatakavi.in
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்!
- விகடகவி குழு.

Leave a comment
Upload