தொடர்கள்
பொது
ராஜி - ஒரு பழங்கால சரித்திரம்! கேம் உலகம்... - ராம்.

2020930074615604.jpg

வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளை படிக்கப் போடா... எப்பப் பார்த்தாலும் என்ன கேம், வெளியிலயாவது போய் விளையாடு என்ற தாரக வசனம் கேட்காத இந்திய வீடுகளே இல்லை.

ஆனால், இந்த கேம் உலகத்தில் ஏராள பணம் இருக்கிறது.

ஏராள வேலை வாய்ப்புக்களும் இருக்கிறது.

இது ஒரு தனி உலகம்.

அது ஏனோ சின்ன வயதிலிருந்தே இந்த வீடியோ கேம் என்ற விஷயத்தில் எனக்கு ஆர்வமில்லாமல் போனது.

காரணம்... அப்போதிருந்த சாதனங்களாகவும் இருக்கலாம்.

இந்த வீடியோ கேம் விஷயத்தில் இந்தியா மிகவும் பின் தங்கியிருக்கிறது என்று தெரிகிறது.

ஃபிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகள், ஏன் சீனாவும் கூட இந்த கேம் விஷயத்தில் நம்மை மிகவும் பின்னுக்கு தள்ளியிருக்கிறது.

அப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் வெளியான ராஜி - அன் ஏன்சியன்ட் எபிக் என்ற விளையாட்டு, இந்தியாவில் இப்பொது ஹிட் ஆகியிருக்கிறது.

நமது பண்டைய சரித்திரத்தில் இல்லாத கதைக் கருவா கேம் விளையாட்டிற்கு.

இன்னும் சொல்லப்போனால் பாகுபலி போன்ற படங்களின் கருவும் விளையாட்டிற்கு ஏற்ற விஷயங்கள் தான்.

அதைப் பெரிய அளவில் கொண்டு செல்ல வில்லையெனில், அதற்கு காரணம் அந்த வியாபாரத்தை சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பது தான்.

ராஜி - ஒரு பழங்கால சரித்திரம், புதிய சரித்திரம் எழுதட்டும்.

அஜீத் அல்லது அஜய் துடிப்பான கல்லூரி மாணவர். மேற்படிப்புக்காக விரைவில் ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறார்.

இவர் ஒரு கேம் டெவலப்பர். அவருடன் ஆயுஷையும் (மாணவர். சீமந்த புத்திரன். சதா சர்வகாலமும் கேம் தான் இவருக்கு!) சேர்த்துக் கொண்டு இந்த உலகில் என்னதாண்டா இருக்கு என்று துவங்கிய உரையாடலில் ஆச்சரியமான சில தகவல்கள் கிடைத்தன.

அவர்கள் பேசிய விளையாட்டுக்களில் ஒன்று கூட நான் விளையாடியதில்லை என்பது உரையாடலைக் கேட்டாலே புரிந்து கொள்ளலாம்.

இனி இந்தியாவில் வீடியோ கேம் உலகம்……….