
செல்லக் கொலுசு பேசுது...!
மெல்ல மனசைத் திறக்குது...!
வெள்ளை உள்ளத்தைக் காட்டுது...!
முப்பொழுதும்... எப்பொழுதும்....
நான்… உன்னுடனே…… வாசம் செய்கிறேன்...!
நீ … பொலிவாய்... சிரித்து.. மகிழும் போது... ...
நானும்… ஒலியாய்...சிரித்து...மகிழ்கிறேன்...!
நீ…செல்லமாய்… சிணுங்கும் போது...
நானும்… மெல்லமாய்.. சிணுங்குகிறேன்...!
நீ ...இயைந்து…நடக்கும் போது...
நானும்.. நயந்து …நடக்கிறேன்...!
நீ… இசைந்து ஓடும் போது...
நானும்… இசைத்து ..ஓடுகிறேன்...!
நீ.. கனிவாய்… பேசும் போது...
நானும்.. இனிதாய்… பேசுகிறேன்...!
நீ.. கண்ணயர்ந்து… உறங்கும் போது...
நானும்.. மெய் மறந்து… உறங்குகிறேன்...!
பெண்மனசை முழுமையாய்
அறிந்தவர் எவருமில்லை...!
இது சொல் வாக்கு..!
நான் மட்டும்.. அதற்கு விதிவிலக்கு...!
இது செயல் வாக்கு..!
முப்பொழுதும்...எப்பொழுதும்....
நான்… உன்னுடனே…… வாசம் செய்கிறேன்...!
உன்னை நான் அறிவேன்...!
என்னை நீ அறிவாய்...!
நீ பிஞ்சுக் குழந்தையாக இருந்த போது...
நானும் மாம்பிஞ்சு வடிவம் கொண்டிருந்தேன்...!
நாளொரு மேனியும்... பொழுதொரு வண்ணமாக,,
நீயும் வளரும் போது....
நானும்... வளர்ந்து.. அத்திக்காய்...
ஆலங்காய் வடிவம் கொண்டேன்...!
நீ அணிந்திருப்பது...
வெள்ளிக் கொலுசு.. அல்ல...!
எந்தன் வெள்ளை மனசு...!
செல்லக் கொலுசு பேசுது...!
மெல்ல மனசைத் திறக்குது...!
வெள்ளை உள்ளத்தைக் காட்டுது...!

Leave a comment
Upload