
புயலுக்கு முன்னும், பின்னும் அமைதி!!
மாலை நேரம்…
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருக்கும் ஒரு காபி ஷாப்….
முகத்திற்கு குரங்கு குல்லாவை அணிந்து கொண்டு கடையின் உள்ளே வந்தவர் தனக்கு ஒரு கப் காபி வேண்டும் என்றார்…
காபி ஷாப்பில் கஸ்டமர்கள் யாருமில்லை…
சமந்தா கோயிங் என்ற பணிப்பெண், காபி தயார் பண்ணும் மிஷின் அருகே சென்றார்.
குரங்கு குல்லாய் அணிந்து வந்திருந்த நபர் தன் இடுப்பில் சொருகி இருந்த துப்பாக்கியை எடுத்து பணிப்பெண் சமந்தா கோயிங் தலையில் வைத்து அசையாமல் நில் என்று மிரட்டினான்.
காபி ஷாப் கல்லாவில் இருந்த டாலர்களை குரங்கு குல்லாய் போட்ட நபர் அள்ளிகொண்டான்.
அசையாமல் பயத்தில் உறைந்திருந்த காபி ஷாப் பணியாளர் சமந்தா கோயிங் கைகளை தான் கொண்டு வந்த ஜிப் மாடல் பிளாஸ்டிக் கயிற்றால் குரங்கு குல்லாய் அணிந்திருந்த நபர் கட்டினான்.
கத்தினால் சுட்டு விடுவேன்…
எங்கே உன் கார் அதை காட்டு என்று குரங்கு குல்லாய் போட்ட மர்ம நபர் பணிப்பெண்ணை மிரட்டினான்.
தனக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை… வீட்டு கஷ்டத்தால் தான் பணிக்கு வந்தேன்… நீங்கள் நினைப்பது போல் என்னிடம் எந்த வசதியுமில்லை என்று குரங்கு குல்லாய் போட்ட மர்ம மனிதனிடம் சமந்தா கோயிங் தன்னை விட்டு விடும்படி கெஞ்சினாள்.
சமந்தா கோயிங் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்திய குரங்கு குல்லாய் போட்ட மர்ம மனிதன் சத்தம் போடாமல் ரோட்டில் நடத்தி கூட்டி சென்றான்.
சிறிது தூரம் நடந்ததும் தான் கொண்டு வந்த டிரக்கில் பணிப்பெண் சமந்தா கோயிங் ஏற்றிக்கொண்டு வண்டியை ஓட்டி சென்ற அந்த மர்ம மனிதன்.. “உன் செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு எங்கே?” என்று பணிப்பெண்ணிடம் கேட்டான்.
தனது செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு காபி ஷாப்பில் வைத்து இருக்கிறேன் என்று பணிப்பெண் சமந்தா கோயிங் சொன்னதும்... தனது டிரக் வண்டியை காபி ஷாப்பிற்கு திருப்பினான்.
காபி ஷாப்பில் கஸ்டமர்கள் யாருமில்லை….
காபி ஷாப்பில் சமந்தா கோயிங் விட்டுச்சென்ற செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டுகளை எடுத்து கொண்ட மர்ம மனிதன் மீண்டும் டிரக் வண்டியை சமந்தா கோயிங்குடன் ஆள் ஆரவாரமில்லாத இடத்திற்கு வேகமாக ஓட்டி சென்றான்.
காபி ஷாப்பில் வேலை செய்த பணிப்பெண்ணை கடத்தி வந்துள்ளேன், நான் கேட்கும் டாலர்களை பிணய தொகையாக தந்தால் கடத்தி வந்துள்ள பணிபெண் சமந்தா கோயிங் விடுவிக்கிறேன் என்று காபி ஷாப் ஓனர் மற்றும் பணிப்பெண் சமந்தா கோயிங்கின் பாய் பிரண்ட்ற்கு பணிப்பெண் செல்போனில் இருந்து குறுஞ்செய்தியை குரங்கு குல்லாய் போட்ட மர்ம மனிதன் அனுப்பினான்.
பணிப்பெண்ணை கடத்திய டிரக் வண்டியை ஓரு வீட்டின் பின்புறம் உள்ள ஷெட்டில் நிறுத்தி சமந்தா கோயிங்கினை டிரக்கின் உள்ளே வைத்து கட்டினான்… டிரக்கிலிருந்த வானொலி சத்தத்தை அதிகப்படுத்தி விட்டு குரங்கு குல்லாய் போட்ட மர்ம மனிதன் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றான்..
பணிப்பெண் சமந்தா கோயிங்கின் ஏடிஎம் கார்டில் டாலர்கள் மற்றும் பின்நெம்பர் சரியாக இருக்கிறதா என்று செக் செய்ய போன குரங்கு குல்லாய் போட்ட மர்ம மனிதன், போதிய டாலர் இருப்பு இல்லை என்ற தகவலுடன் மீண்டும் தன்னுடைய ஷெட்டிற்கு வந்தான்…
கடத்தப்பட்ட பணிப்பெண் சமந்தா கோயிங்கை விடுவிக்க, அவரது ஏடிஎம் கார்டில் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை பணய தொகையாக வைப்பீடு செய்ய காபி ஷாப் ஓனர் மற்றும் அவளது பாய் ஃபிரெண்டிற்கு மீண்டும் ஒரு குறுஞ்செய்தியை மர்ம மனிதன் அனுப்பினான்.
தன் மகளை கடத்தல்கார மர்ம நபரிடம் இருந்து மீட்க, தனக்கு தெரிந்த நண்பர்களிடம் பணத்தை பெற்று, தனது மகளின் ஏடிஎம் அக்கவுண்டில் பணய தொகையினை பணிப்பெண்ணின் தந்தை செலுத்தினார்.
அடுத்து சில நாட்களில்…
கடத்தப்பட்ட பணிப்பெண் சமந்தா கோயிங்கின் உடல் மதனுஸ்கா ஏரியில் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.
காவல்துறையினர் மோப்ப நாயுடன் சென்று வழக்கம் போல் கொலையாளியை தேடினார்கள்.
கடத்தப்பட்ட பணிப்பெண் சமந்தா கோயிங் பாலியியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்று போஸ்ட்மார்டம் அறிக்கை சொன்னது.
நெஞ்சை பதற வைக்கும் இந்தக் கொலை வழக்கை எஃப்பிஐ இடம் லோக்கல் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
கடத்தபட்ட பெண் பணி செய்த காபி ஷாப்பில் இருந்த வீடியோ கிளிப்பிங்கனை காவல்துறையினர் பதிந்து கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட சமந்தா கோயிங்கின் செல்போன் மட்டும் உயிர்ப்புடன் வேலை செய்து கொண்டிருந்தது.
கொலை செய்யப்பட்ட பணிப்பெண்ணின் ஏடிஎம்-மை பயன்படுத்தி மர்ம நபர் பணம் எடுக்கும் விபரங்களையும் அவ்வப்போது காவல்துறையினர் டிராக் செய்து கொண்டு இருந்தனர்.
கொலை செய்யப்பட்ட பணிப்பெண் சமந்தா கோயிங்கின் செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்திய நபர், நகரும் இடங்கள் அவன் பயன்படுத்தும் கார் செல்லும் விவரங்களை காவல்துறையினர் டிராக் செய்தனர்.
இறுதியாக… ஹைவேயில் சென்று கொண்டிருக்கும் ஓரு காரில் கொலையுண்ட சமந்தா கோயிங் செல்போனை காவல்துறை டிராக் செய்தது.
ஹைவே பேட்ரோல் காவல்துறையினருக்கு குறிப்பிட்ட காரினையும் அதில் உள்ள நபரையும் பிடிக்க சொல்லி உத்திரவு பறந்தது.
அடுத்து சில நிமிடங்களில்…
ஹைவேயில் சந்தேகத்திடகிடமான காரினை போலீஸார் சுற்றி வளைத்தனர்.
காரை சோதனையிட்ட போது காரின் பின் சீட்டில் பணிப்பெண் சமந்தா கோயிங்கின் செல்போன், காரை ஒட்டிய நபரின் பாண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த வாலட்டில் பணிப்பெண்ணின் ஏடிஎம் கார்டையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து, கார் ஒட்டுனரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
காவல்நிலையத்தில் பிடிப்பட்ட கார் ஓட்டுநருக்கு காவல்துறையினர் ஸ்பெஷல் டீரிட்மெண்ட் கொடுத்ததும்... உண்மையை கக்க ஆரம்பித்தான்.

என் பெயர் இஸ்ரேல் கெய்ஸ். எனது தாய் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததில், நான் 2 வது மகன். ஏழ்மை நிலைமையில் எனது பெற்றோர் இருந்ததால், வீட்டில் மின்சாரம் மற்றும் குளிர்காலத்தில் வெப்பம் தரும் இயந்திரம் இல்லை. எனது தாய் தந்தையருடன் நான் வாஷிங்டனுக்கு இடம்பெயரும் போது, நான் தவழும் குழந்தை.நான் வளர்ந்த பின், எனது மனம் போன போக்கில் ஊர்களை சுற்றி திரிந்தாலும், ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பில் ஒரு மகள் பிறந்தாள். என் மனம் போன போக்கில் கொள்ளை அடிப்பதும், கொலை செய்வதும் எனது ஹாபியாக மாற்றி கொண்டு ஜாலியாக சுற்றி திரிவேன்.
கடந்த 2001 முதல் 2005 ஆண்டு வரை வாஷிங்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள 10 மாநிலங்களில் உள்ள 11 பேரை கொலை செய்து புதைத்து இருக்கிறேன். நான் எந்த இடங்களில் எல்லாம் கொலை செய்தேன் என்று எனக்கு ஞாபகமில்லை.. எனக்கு எப்போது எல்லாம் கொலை செய்ய தோன்றுகிறதோ அப்போதெல்லாம் தனியாக வரும் நபர்களை கொன்று புதைத்து விடுவேன். கடைசியாக எனக்கு பணம் தேவைப்பட்டதால் காபி ஷாப் பணிப்பெண் சமந்தா கோயிங்கை கடத்தி, கற்பழித்து கொலை செய்தேன். நான் கொலை செய்வதற்கு தனியாக ஆயுதங்கள் வைத்து உள்ளேன் என்று காவல்துறையினர் முன்பு விசாரணையில் சொல்லி விட்டான்.
அமெரிக்காவில் 12 பேரை கொன்ற சீரியர் கில்லர் இஸ்ரேல் கெய்ஸ் பற்றி அமெரிக்க செய்தி நிறுவனங்கள் பிரேக்கிங் நியூஸ் ஒளிபரப்பியது.
சீரியல் கில்லர் இஸ்ரேல் கெய்ஸ் வீட்டை சோதனையிட்ட போது, தான் கொலை செய்ய பயன்படுத்திய ஜிப் கயிறுகள், துப்பாக்கிகள் மற்றும் சிறு கத்திகள் ஆகியவற்றை அவனது வீட்டில் இருந்த ஒரு ப்ளாஸ்டிக் பக்கெட்டிலும், இன்னொரு பக்கெட்டில் சில கொலை செய்யப்பட்ட நபர்களின் உடல் உறுப்புகளையும் புலனாய்வு துறையினர் கைப்பற்றினர்.
சீரியர் கில்லர் இஸ்ரேல் கெய்ஸ், கொலை குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.

சீரியர் கில்லர் இஸ்ரேல் கெய்ஸ், சிறையில் தனது ரத்தத்தால் மண்டை ஓடுகளை காகிதத்தில் வரைகிறான் என்று தகவல் சென்றதை அடுத்து எஃப்பிஐ புலனாய்வு அமைப்பு சிறைக்கு விரைந்தது.
சீரியல் கில்லர் இஸ்ரேல் கெய்ஸ் தனது படுக்கைக்கு கீழே, தான் கொன்ற நபர்களின் மண்டை ஓட்டு மாதிரிகளை தன்னுடைய ரத்தத்தை கொண்டு 11 வெள்ளை தாளில் வரைந்து வைத்திருந்ததை சிறையில் சோதனையிட்ட எஃப்பிஐ சிறப்பு ஏஜெண்ட் ஜோலன் கோலன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
சீரியல் கில்லர் இஸ்ரேல் கெய்ஸ் அமெரிக்கா முழுவதும் கிட்டதட்ட 30 வீடுகளை கொள்ளையடித்ததையும், கொள்ளை அடித்த வீடுகள் சிலவற்றை தீவைத்து கொளுத்தி ரசிப்பது தனது வழக்கம் என்று சொன்னவன், சென்ற 2001 முதல் 2012 ஆண்டு வரை பல வங்கிகளில் தனியே சென்று கொள்ளையடித்ததையும் அமெரிக்க எஃபி.பி.ஐ அறிக்கை தெரிவித்தது.
சீரியல் கில்லர் இஸ்ரேல் கெய்ஸ் 11 கொலைகளை செய்திருந்தாலும் புலனாய்வு அமைப்பினர் 3 கொலைகளை மட்டுமே கண்டுபிடித்து, குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
சீரியல் கில்லர் இஸ்ரேல் கெய்ஸ்க்கு நீதிமன்றத்தில் கொலை குற்றத்திற்கான இறுதி விசாரணை துவங்க இன்னும் மூன்று மாதமே இருந்த நிலையில், சிறைக் கதவில் இருந்த தகடு ஒன்றில் தனது கை மணிகட்டு நரம்பினை அறுத்து கொண்டு ரத்த வெள்ளத்தில், தற்கொலை செய்து கொண்டான்.
கொலைக்கே கொலை (ode to murder) என தனது கடைசி மரண சாசன இரண்டு பக்க கடிதத்தில், தனது தற்கொலை பற்றி சீரியல் கில்லர் இஸ்ரேல் கெய்ஸ் எழுதியிருந்ததை எஃப் பி ஐ வெளியிட்டது.!கடைசி வரை சீரியல் கில்லர் இஸ்ரேல் கெய்ஸ், தன் வாழ்நாளில் எத்தனை பேரை என்ன காரணத்திற்காக கொலை செய்தான் என்ற மர்ம முடிச்சு மட்டும் அவிழவில்லை!

Leave a comment
Upload