
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேவண்ணகவுன்டனூர், கிடையூர் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜு. தனியார் நிறுவனத்தில் காசாளராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில வருடங்களாக தனித்தனியே பிரிந்து வாழ்கின்றனர். இதற்கிடையே தனது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு சங்ககிரி 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் சாந்தி வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி, சாந்திக்கு மாதந்தோறும் ₹3 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அந்தத் தொகையை ராஜு சரிவர கொடுக்காததால், மீண்டும் சங்ககிரி நீதிமன்றத்தில் சாந்தி வழக்கு மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி, ‘சாந்திக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ₹2.18 லட்சத்தை ராஜு உடனடியாக கட்ட வேண்டும்’ என உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த 18-ம் தேதி சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு நிலுவை ஜீவனாம்ச தொகையை செலுத்த ராஜு வந்திருந்தார். அப்போது அவர், 11 பைகளில் ₹10 நாணயங்களை மூட்டையாக கட்டி ₹2.18 லட்சத்தை எடுத்து வந்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
இதற்கு ஒரே நோக்கம் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்த மாதிரியும் இருக்க வேண்டும் அதை அவர் எடுக்கும் போது தொந்தரவாகவும் இருக்க வேண்டும்.
வேறென்ன சொல்ல.
சில்லரை மனிதர்கள்.

Leave a comment
Upload