
(வலைகடியன். பொன்னியின் செல்வன் கதாபாத்திர பெயர் போல இருக்கே...)
கடந்த சில வாரங்களாக சென்னை கடற்கரைகளில், கடல் பாம்புகள்அதிகம் தென்பட்டன. சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு கடல் பாம்புகள்கரையில் தென்படும். ஆனால் கடந்த சில வாரங்களில் இவ்வகை பாம்புகள் அதிகஎண்ணிக்கையில் கரையில் ஒதுங்கின. இது குறித்த தகவலை கடல் ஆமைபாதுகாவலர்கள் வன துறையிடம் தகவல் தெரிவித்தனர்.
கடல் பாம்புகள் குறித்த ஆராய்ச்சி செய்து வரும் இந்திய விலங்கியல் ஆய்வகம்ஆராய்ச்சியாளர் ப பத்மநாபன் கூறுகையில் பழவேற்காடு கடற் பகுதி முதல் கடலூர்கடல் பகுதி வரை கடல் பாம்புகள் குறித்து தான் ஆராய்ச்சி மேற்கொண்டதாககூறினார். இவ்வாறு ஆராய்ச்சி செய்யும் போது பதிமூன்று வகையான கடல் பாம்புகள்அவர் பதிவு செய்துள்ளார்.
பொதுவாக மீனவர்கள் தங்கள் வலையில் கடல் பாம்புகள் சிக்கிக்கொண்டால்அவற்றை கடலில் வீசி விடுவார்கள். ஆனால் கடந்த சில வாரங்களாக சென்னைகடற்கரை பகுதிகளில் கடல் பாம்புகள் அதிக எண்ணிக்கையில் தென்பட்டன எனஅவர் கூறினார்.
வலக்கடியன், மஞ்சள் கடல் பாம்பு மற்றும் தொகுப்பு கடல் பாம்புகள் ஆகிய மூன்றுபாம்பு இனங்கள் சென்னை கடற்பகுதிகளில் பொதுவாக காணப்படுபவை. தரையில்இருக்கும் பாம்புகளை விட பத்து மடங்கு அதிக விஷத்தன்மை கொண்டவை கடல்பாம்புகள், என்கிறார் அவர். ஆனால், கடல் பாம்புகள் தீண்டி மீனவர்கள் அல்லதுகடற்கரைக்கு சென்றவர்கள் பாதிக்கப்பட்டு/இறந்ததாக இது வரை தகவல்கள்இல்லை என்கிறார் பத்மநாபன்.

(தொகுப்பு கடல்பாம்பு)
கடல் பாம்புகளின் விஷத்திற்கு விஷ முறிவு மருந்து இது வரை இந்தியாவில்செய்யப்படவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவின் பவள பாறைகள் ஆராய்ச்சி மையம்கடல் பாம்புகள் விஷ முறிவு மருந்து ஆராய்ச்சி மூலம் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கூறுகிறார்.

(மஞ்சள் கடல் பாம்பு)
பத்மநாபன் மற்றும் அவரது ஆராய்ச்சி குழுவினர் மாதம் இரு முறை கடல் பயணம்மேற்கொள்வார்கள். அவ்வாறு செல்லும் போது ஒவ்வொரு மீனவரின் வலையில் ஒன்றுஅல்லது இரண்டு கடல் பாம்புகள் சிக்கிக்கொண்டு உள்ளதை பதிவு செய்துள்ளனர்.இந்த வகை பாம்புகள் அதிக ஆழம் இல்லாத கடல் பகுதிகளில் காணப்படும். மேலும்இவை நான்கு அல்லது ஐந்து நாட்டிகல் மைல் தூரத்தில் தென்படும், என்கிறார் அவர்.
கடல் பாம்புகள் 1.2 மீட்டரில் இருந்து 1.4 மீட்டர் வரை வளரக்கூடியவை. இவற்றின்எடை அதிக பட்சமாக1.3 கிலோ கிராம் வரை இருக்கும். இவற்றின் வால் பகுதி துடுப்புபோன்று காணப்படும். அதனால் இப் பாம்பு வகைகள் தண்ணீரில் இலகுவாக நீந்துவதற்கு தங்கள் வாலை பயன் படுத்திக் கொள்ளும் என்கின்றனர்ஆராய்ச்சியாளர்கள்.
கடல் பாம்புகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடலிலே கழிக்கும். அங்கேயே உண்டு உறங்கி இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டது கடல் பாம்புகள், என்கின்றனஆராய்ச்சி பதிவுகள்.
இந்த பாம்புகள் கடலுக்கடியில் செல்லும்போது தங்கள் நாசி துவாரங்களை மூடிக் கொண்டு விடும். பிறகு கடல் மட்டத்தின் மேல் பகுதிக்கு வரும்போது, மீண்டும் நாசித்துவாரங்கள் திறந்து கொள்ளும். இவ்வகை அமைப்பினால் கடல் பாம்புகள் தண்ணீருக்கு அடியில் அதிக நேரம் செலவிடும் திறன் கொண்டவை என்கிறது ஆராய்ச்சி பதிவுகள்.
கடல் சீற்றம் மற்றும் புயல் காற்று போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் கடல்பாம்புகள் கரைக்கு ஒதுங்கி விடும். இப்பாம்பு வகைகளுக்கு தரையில் உள்ள பாம்புகள் போல உடம்பில் செதில்கள் இல்லாததால், கடல் பாம்புகள் ஊர்ந்து சென்று மீண்டும் கடலுக்குள் செல்வது என்பது இயலாத ஒன்று. எனவே இவை தங்கள் துடுப்பு போன்ற வால்களை பயன்படுத்தி மெதுவாக நகர்ந்து கடலுக்குள் சென்று விடும்.
சென்னை காசிமேடு பகுதியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்று வரும் பிமுத்துக்குமரன் கூறுகையில் இந்த வகை பாம்புகள் வலையில் பட்டால் உடனேமீனவர்கள் அவற்றை கடலில் வீசி விடுவார்கள். ஏனெனில், மீனவர்களுக்கு அவற்றின்விஷ தன்மை குறித்து நன்றாகவே தெரியும். சில சமயங்களில் கடற்கரைக்கு வந்தபிறகு இந்த பாம்புகள் வலையில் தென்பட்டால், அவற்றை உடனே கரையில் வீசி விடுவார்கள், என்றார் அவர்.

Leave a comment
Upload