மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக் பயிற்சிப் கல்லூரியில், பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
மாநில அரசு இந்த கொலையை மூடி மறைக்க பல முயற்சிகளை செய்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. முதல்வரே இந்த கொலையை எதிர்த்து பேரணி நடத்துகிறார். ஆனால், அந்த பேரணியில் அவரது கட்சி முக்கிய தலைவர்களே பங்கேற்கவில்லை. குறிப்பாக முதல்வரின் உறவினர் அபிஷேக் பானர்ஜி இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை. தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டிய அதிகாரத்தில் இருப்பவரே பேரணி ஊர்வலம் என்று அரசியல் நடத்தியது வெட்கக்கேடான ஒரு நிகழ்வு.
இந்த விஷயத்தில் கல்கத்தா உயர் நீதிமன்றம் கேட்ட பல கேள்விகளுக்கு அரசு வழக்கறிஞர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். இறந்து போன பெண்ணின் தாயார் கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையரை சிபிஐ விசாரிக்க வேண்டும். இரண்டரை மணி நேரம் எங்கள் பெண்ணை அவர் பார்க்கவே அனுமதிக்கவில்லை. அந்த சம்பவத்தையே மூடி மறைக்க அவர் முயற்சி செய்தார் என்று சொல்லி இருக்கிறார். இதே கருத்தை மம்தா கட்சியின் மாநிலங்காளவை உறுப்பினர் சொன்னதும் அவரை விசாரிக்க காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதிலிருந்து இந்த கற்பழிப்பு கொலை இவற்றை மூடி மறைக்க மம்தா அரசு எல்லா நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறது தெள்ளத்தெளிவாகிறது.
ஒரு பெண் முதல்வர் இருக்கும் மாநிலத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த இந்த அவலத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்வது தான் உத்தமம். ஏனெனில் பாஜக ஆளும் மாநிலத்தில் இப்படி ஏதாவது நடந்திருந்தால் மம்தா இதைத்தான் கேட்டிருப்பார். இந்தியா முழுக்க இறந்து போன பெண் மருத்துவருக்கு ஆதரவாகவும் மம்தா பானர்ஜிக்கு எதிராகவும் குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கிறது. இது ஒரு வெட்கக்கேடு என்பதை மேற்குவங்க முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்.
Leave a comment
Upload