Heading : விகடகவி வயது 8 ஆரம்பம்…
Comment : என்னது... விகடகவிக்கு 8 வயசு ஆகுதா?! இப்பவே சகல கலா வல்லவனாகத் திகழும் எம் பிள்ளை நீடூழி வாழ்ந்து, இன்னும் பல சிறப்பான கட்டுரைகளை வழங்க வாழ்த்துகிறோம். மதன் சாரின் கார்ட்டூன் கனகச்சிதம். அவரது வழிகாட்டுதலில் விகடகவி இன்னும் புகழ் உச்சிக்கு செல்லட்டும்.
மாயா குப்புசாமி, ராதா வெங்கட் , சென்னை
Heading : தகுதித்தேர்வு – பா.அய்யாசாமி
Comment : அருமை.
Malini , Mayiladuthurai
Heading : மகாராஷ்டிரா முதல்வர் - தேவேந்திரா பாட்னாவிஸ்-விகடகவியார்
Comment : மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் அரசியல் தாத்தாவான சரத்பவார் எங்கப்பா... எதிர்க்கட்சி இந்தியா கூட்டணியை ஜெயிக்க விடாம பண்ணிட்டு தூங்க போயிட்டாரா? விகடகவியார் ஆரம்பத்திலேயே பட்னாவிஸ்தான் முதல்வர்னு ஆரூடம் சொன்னாரே... ராகுல்காந்தி, உத்தவ் தாக்கரே சுதாரிக்க வேண்டாமா? இனி இவங்களை பாஜக கதிகலங்க வைக்கப் போகுது. சரத் தாத்தா அதோகதிதான்!
ஷோபனா, கங்காதரன், ஜேம்ஸ், வசந்தன் , புதுடெல்லி
Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்
Comment : சுடச்சுட ஹாட் சினிமா நியூஸா கொடுக்க ஆரம்பிச்சிட்டாரே லைட் மேன். கீர்த்தி சுரேஷ் கல்யாண நியூஸை மிஸ் பண்ணிட்டார் ஏ! நயன்தாரா மாதிரி அவங்களும் கல்யாண வீடியோவை ஓடிடி தளங்களில் வெளியிடுவாரா எனக் கேட்டு சொல்லும்!
சிவகுமார், சுஜாதா, வைஜயந்தி , மைசூர்
Heading : தற்காலிக புயல் –கண்ணாழ்வார்
Comment : என்னய்யா நீரும் சென்னை வானிலை மைய இயக்குநரை கிண்டலடிக்கிறீர். கேட்கிறவன் மாத்தி மாத்தி ஒரே கேள்வியை கேட்டா, மனுஷன் என்ன பண்ணுவார், பாவம். போனவாட்டி புயல், மழையை பத்தி சரியா சொல்லைனு திட்டினீங்க. ஊரே வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போச்சு. இம்முறை சென்னைக்கு பதிலா வெளியூர் மக்கள் திண்டாடுறாங்க. அடுத்த முறை ரிபீட்டுதான்! அதுசரி... கண்ணாழ்வார் யாருப்பா... குசும்புக்காரரா இருக்கார்!
ஆகாஷ் வாணி, திலோத்தமை, சுந்தர் , பல்லாவரம்
Heading : உலகின் 8 முக்கிய நிகழ்வுகள் -தில்லைக்கரசிசம்பத்
Comment : தில்லைக்கரசியிடம் இருந்து இப்படியொரு கட்டுரையை நாங்க எதிர்பார்க்கவில்லை. அடடா... அற்புதம்! ஒருபக்கம் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியை சொல்லிட்டு, மறுபக்கம் ஏழை நாடுகளின் மீது வல்லரசு நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் பகீர் தகவலையும் கூறுகிறார். இவர் கிளி ஜோசியம் போல் புயலைக் கிளப்பிட்டாரே!
சிவகாமி, சுந்தரேசன், பாலகிருஷ்ணன் , மதுரை
Heading : அப்பாவி விவசாயிகள்
Comment : நம் நாட்டில் இயற்கையை நம்பி வாழும் விவசாயிகளை, மத்திய-மாநில அரசுகள் ஏளனமாக நினைக்கிறது என்பது நிஜமே. அவர்களின் முழுக்கவனமும் பன்னாட்டு நிறுவனங்கள் மீதுதான். இங்கு விளைநிலங்களுக்கு நீராதாரமாக விளங்கும் பலவற்றை மூடிவிட்டு, வடிகால்வாய்களை தூர்வாரியதாக கோடிக்கணக்கில் மத்திய-மாநில அரசுகள் கணக்கு காட்டுகின்றன. எல்லாம் விளம்பர மயம். இம்மென்றால் அடி, உதை... ஏனென்றால் கைது, வழக்கு, சிறைதான்! கேட்பதற்கு ஆளில்லாத விவசாய ஏமாளிகள்!
புகழேந்தி, தங்கராஜ், பரமசிவம், தச்சநல்லூர்
Heading : சனாதன தர்மத்தில் “எட்டின் மேன்மை” - பரணீதரன்
Comment : 1. ஓரெட்டில் ஆடாத ஆட்டமும் 2. ஈரெட்டில் வாராத கல்வியும் 3.மூவெட்டில் ஆகாத திருமணமும் 4. நாலெட்டில் பெறாத பிள்ளையும் 5. ஐயெட்டில் சேர்க்காத செல்வமும் 6. ஆரெட்டில் சுற்றாத ஊரும் 7.ஏழெட்டில் ௭டுக்காத ஓய்வும் 8. எட்டெட்டில் ஏற்படாத மரணமும் ௨பயோகமில்லை (இந்த லௌகீக எட்டாம் வாய்ப்பாடு நான் எட்டுக்கட்டினது இல்லை... பல முறை பலர் சொல்லி, காதுக்கு எட்டியது ) எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : கவியரசரின் கானங்கள் -எட்டு - மரியா சிவானந்தம்
Comment : கண்ணதாசன் பிறந்தது எட்டாவதாக! அவன் புகழ் யாரும் எட்டாததாக! -பித்தன் வெங்கட்ராஜ் ✍️ அருமை அம்மா..
Pithan Venkatraj , Chennai
Heading : எல்லாம் எட்டும் - சத்யபாமா ஒப்பிலி
Comment : என் குழந்தைக்கு 8 போடச்சொல்லித்தந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த எட்டு. அருமை மேம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். இந்த ரெண்டும்தான் தலையெழுத்துக்கு முதல்படி. இது ரெண்டும் சரியா கத்துக்கிட்டா அவங்க கையெழுத்தே தனி Font ஆ கூட மாறும். ஆம். எல்லாம் எட்டும். மகிழ்ச்சி.
Pithan Venkatraj , Chennai
Heading : உலகில் நான்கு வகையான ராஜ நாகங்கள் - ப ஒப்பிலி
Comment : புதிய தகவல்கள் சார். மேலும், இராஜநாகம் அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் இருப்பதால், அவை முற்றாக அழிவுற்றால் உணவுச் சங்கிலியில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிச் சொல்லமுடியுமா சார்?
Pithan Venkatraj , Chennai
Heading : நயத்தகு நற்றிணை 12 -மரியா சிவானந்தம்
Comment : அற்புதம். ஸ்விக்கி, சொமேட்டோ காலத்தில் விவாதிக்கப்படவேண்டிய கருத்து. உணவு என்பது அன்புக்குரியவர்களுக்காக, அன்போடு சமைத்து, அன்போடு பரிமாறப்படுவது என்பதை நினைவூட்டும் குறிப்பு. மகிழ்ச்சி.
Pithan Venkatraj , Chennai
Heading : விகடகவி ஆசிரியர் குழு
Comment : எட்டை எட்டிய விகடகவி மேலும் பல உச்சங்களை எட்ட எமது நல்வாழ்த்துகள்.. 🌹எம. ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : விகடகவி வயது 8 ஆரம்பம்…
Comment : Hearty congratulations to TEAM VIKATAKAVI.Wishing more Anniversary celebrations...SURESH .R., PONDICHERRY 99944 69767
Heading : ஹாங்காங்கில்...மேஜர் முகுந்த் வரதராஜனின் சகோதரியுடன் ஒரு சந்திப்பு !! - ராம்
Comment : அமரன் படம் பார்க்கும்போதும் கண்களில் நிறைய கட்சிகளில் கண்ணீர்! உன் பேட்டியைய் படிக்கும் போதும்... காலையில் கண்ணீர் வர வைத்து விட்டாய் !!
Anand Sundarmurthy, Facebook comment
Posted Date : 24/11/2024 08:36:04 pm
Heading : ஹாங்காங்கில்...மேஜர் முகுந்த் வரதராஜனின் சகோதரியுடன் ஒரு சந்திப்பு !! - ராம்
Comment : ொம்பவே மனசுக்கு ஒரு இதமாக இருந்தது இந்த இன்டர்வியூ, சொல்லப்போனால் கொஞ்சம் பாரமாகவே இருந்தது. ஏதோ நம்ம கூடவே இருந்து கடைசியில் தவறி போனவர் மாதிரி ஒரு பீலிங். கண்டிப்பா சினிமாவில காட்டுனத விட நூறு மடங்கு ஒரு பெரிய ஹீரோவா தான் இருந்திருப்பாருன்னு நினைக்கிறேன். அவரும் அவரோட சிஸ்டர்ஸும் இந்த ஜூலால ஆடுறது ....அதுக்கு பேக்ரவுண்ட்ல அந்த பாட்டு.... ரொம்ப ஹாண்டிங்கா இருக்கு. தேங்க்ஸ் ஃபார் தி இன்டர்வியூ.
Prabhu venkatramani, Tiruchy
Heading : 2024 மஹராஷ்டிரா சட்டசபை தேர்தல்- யார் ராஜா?
Comment : மகாராஷ்டிரா நிலவரம் ; " பாஜக வின் வெற்றி வெறும் அலை அல்ல.. சுனாமி... " என்று உதவ் தாக்கரே கூறுமளவுக்கு பாஜக கூட்டணி பின்னி பெடலெடுத்தால் (.வரலாறு காணாத 234 இடங்கள் ) , தேர்தலில் சதி... விளையாடியது நிதி... மின்னணு வாக்குப் பதிவின் கதி.. எங்கள் விதி என்று 16 இடங்களுடன் உதவ் தாக்கரே புலம்ப, வயநாடு, தங்கச்சிக்குத் தந்த மாபெரும் வெற்றியின் மகிழ்ச்சியில்.... இது ரூம் போட்டு யோசிக்க வேண்டிய விஷயம்னு, 20 இடங்களுடன் ராகுல் காந்தி இருக்க, இறுக்கமாக 10 இடங்களுடன் பேந்தப் பேந்த விழிக்கிறார் சரத் பவார் தினமும் வி.டி க்கு வேலைக்கு, மின்சார ரயிலில் தொங்கிக்கொண்டு போகும் காலை 8.37 கல்யாண் லோக்கலில், ஒரு நாளாவது உட்கார்ந்து கொண்டு போக ஆசைப் படுகிறார் சராசரி மும்பைக்கர்.... எம. ஆர். மூர்த்தி, இன்னொரு மும்பைக்கர்...
Heading : 2024 மஹராஷ்டிரா சட்டசபை தேர்தல்- யார் ராஜா?
Comment : " பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகள்ள ஜெயிச்ச கட்சி தலைவர், தேர்தல்ல ஏதோ சதி நடந்திருக்கு ன்னு ஏன் சொல்றாரு....? " " அஞ்சு தான் எதிர்பார்த்தாராம்..." ( மேற்கண்ட ஜோக்குக்கும் மகாராஷ்டிர தேர்தலில் 10 இடங்கள் பெற்ற சரத் பவாருக்கும், 16 இடங்கள் பெற்ற ராகுல் காந்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை) எம. ஆர். மூர்த்தி, மும்பை
Leave a comment
Upload