நம் நாட்டில் தற்போது அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வாயிலாக நடந்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த ஒருவர் கழுத்தில் டிஜிட்டல் க்யூ.ஆர் கோடு கார்டை அடையாள அட்டை போல் அணிந்தபடி பிச்சை எடுத்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘என்னிடம் தற்போது 3 வங்கிகளில் சேமிப்பு கணக்கு உள்ளது. இதில் பிச்சை எடுக்கும் பணத்தை சேமித்து வருகிறேன். இந்த 3 வங்கிகளின் ஏடிஎம் கார்டுகள் மூலம் தேவைப்படும்போது சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்வேன். முதலில் சில்லறை காசோ, பணமோ இல்லை எனக் கூறியவர்கள், தற்போது எனக்கென பிரத்யேக டிஜிட்டல் க்யூ.ஆர் கோடு மூலம் ரூ.20 வரை பிச்சை அளித்து வருகின்றனர். இதனால் எனக்கு வருவாய் அதிகரித்துள்ளது!’’ என்று தெரிவித்தார்.
இந்த கியூ ஆர் கோடை ஸ்கான் செய்து விகடகவி வாசகர்கள் பிச்சை போட்டீர்களால் அது உங்க இஷ்டம்.
ஒரு தமாஷுக்கு ஸ்கான் செய்து பார்த்ததில் செல்வமணி என்ற பெயர் வருகிறது !!!
Leave a comment
Upload