தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20250701171706200.jpeg

இந்தியாவுக்கு 25 சதவீத வரி டிரம்ப் அதிரடி.

ஜி எஸ் டி கே, ஜி எஸ் டி யா ?

அண்ணா வழியில் மக்களை சந்தியுங்கள் தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்.

முதலில் இவங்களுக்கு அண்ணா யாருன்னு தெரியணுமே !!

டிரம்ப் பொய் சொல்கிறார் என பிரதமரால் கூற முடியாது ராகுல் காந்தி.

நீங்களும் உசுப்பேத்தி பாக்குறீங்க அங்க ஒன்னும் நடக்கலையே ?

திமுக ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஒடுவதாக நாங்கள் சொல்லவில்லை இரா.முத்தரசன்.

வெள்ளம்ம்ன்னுதான் சொல்லி இருக்கீங்க !!

கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்.

தலைவர் இத்தனை நாளா கோமாவில் இருந்தார் !!

தமிழக வெற்றி கழகம் செயலியை வடிவமைத்தது பாஜக நிர்வாகி நிறுவனமாம்.

ஆமா அவங்களுக்கு தான் இந்த விஷயத்துல சர்வீஸ் ஜாஸ்தி !!

மாநிலத் துணைத் தலைவராக குஷ்பு நியமனம்.

தாமரை மலர்ந்துரும் டோய் !!

காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் திமுக முன்னாள் எம்பி வழக்கில் ஹைகோர்ட் வேதனை.

உங்களுக்கு இப்ப தான் தெரியுது !!

பாஜகவுடன் கூட்டணி முறிந்தது பண்ருட்டி பேட்டி.

அண்ணன் இப்ப எந்த கட்சியில் இருக்காரு ?

யார் எந்த யாத்திரை போனாலும் பயனில்லை ராமதாஸ் பேட்டி

அப்படியா சொல்றீங்க !!

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.

தலைவரை டென்ஷன் பண்ணாதீங்கப்பா !!

எடப்பாடி பேசுவது எல்லாமே பொய் அமைச்சர் சேகர்பாபு.

நீங்க உண்மையை மட்டும் பேசுறீங்களோ !!