தொடர்கள்
பொது
அட இதக் கேட்டீங்களா? – பால்கி

எலான் மஸ்க்கின் பெருந்தன்மை

20250701120042119.jpg

கூகுளின் தாய் கம்பெனியான ஆல்ஃபபெட் கம்பெனியின் அரையாண்டு முடிவில் வருமானங்களின் வளர்ச்சிசும்ம 28.2 பில்லியன் டாலர்களை எட்டியது. இது போன வருஷ இதே அரையாண்டு வருமானத்தை விட 20% அதிகமாம். இந்த விவரங்களை அதன் தலைவர், அதான் நம்ம சுந்தர் பிச்சை போட அதைப் படித்துவிட்ட மஸ்க்,”இம்ப்ரசிவ் (impressive)” என்று புகழாரம் சூட்டி பதில் போட்டிருக்கிறார்.

***

சிவன் கோயிலுக்கு சண்டை

20250701120131933.jpg

தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்திற்கும் கம்போடியாவிற்கும் போன வாரம் சணடை போட்டுக்கொண்டார்களே. அதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட நிறுத்தினாரே. அதான்.

இந்த இரு நாடுகளுக்கும் இடையே இருந்த வாய்க்கா சண்டைக்குக் காரணமே அந்த இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் இருக்கும் 900 வருட புராதனம் கொண்ட ப்ரீ விஹியர் கோயில் தானுங்க. இந்த கோயில் அங்கிருக்கும், கம்போடியாவின் டாங்கிரெக் மலையில் 525 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. க்மீர் பேரரசினரால் கட்டப்பட்ட இந்த சிவனார் இரு நாட்டின் மக்களாலும் வணங்கப்படுபவர்.

***

ஏக்கர் ஒன்றுக்கு 12 லட்சம் வருமானமா? அதில் 10.5 லட்சம் நிகர லாபமா?

20250701120213638.jpg

ஷடாவரி என்ற மூலிகையை ஆர்கானிக் முறையில் தனது நிலத்தில் பயிரிட்டு வருகிறார் நிமேஷ் வர்மா எனும் உ.பி யைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி.

அந்த மூலிகையை பொடி செய்து உள்நாட்டிலும், ஜப்பான் ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தும் வருகிறார்.

****

சின்னசாமி ஸ்டேடியத்தில் இனி ஐபிஎல் ஆடமுடியாது.

20250701120253595.jpg

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 18ஆவது சீசனில் வெற்றிபெற்ற ஆர்சீபீயின் வெற்றியை இந்த ஸ்டேடியத்தில் கொண்டாடப்போய் 11 பேரின் உயிர் பறி போனது உலகமறிந்த செய்தி. அதை அடுத்து அமைக்கப்பட்ட ஜான் மைக்கேல் டி குனா நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட ஜுடீஷியல் கமிட்டீயின் பரிந்துரைப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.

****

சௌதி அரேபியாவில் நடன நிகழ்ச்சியா?

20250701120331491.jpg

பாலிவுட் நடிகையும் முன்னாள் அழகியுமான ஊர்வஷி ரௌடேலா தான் சௌதியில் ஜெட்டா நகரில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடியிருகிறார். அதற்கு அவர் பெற்ற சன்மானத் தொகை ரூ.7 கோடி தான்.

இதன் மூலம் சௌதியில் ஜனரஞ்சக நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் இந்திய பெண்மணி ஆகிறார். கூடவே அதிகத் தொகையான ரூ7கோடையைப் பெற்றவராகிறார்.

உலகம் மாறி வருகிறது.

****

சல்மான் கானுக்கு பெயில் வாங்கிக் கொடுத்த ஜக்தீப் தன்கர்.

20250701120443568.jpg

இந்த ஜக்தீப் தங்கர் நமது நாட்டின் முன்னாள் துணை அதிபராயிருந்தவர். இவர் பிரசித்தி பெற்ற வக்கீலும் ஆவார்.

1998ல் ராஜஸ்தானில் சினிமா ஷூட்டிங்க்கிற்குச் சென்ற சல்மான் கான், சாய்ஃப் அலி கான், டப்பு, நீலம், சோனாலி பென்ட்ரே என்ற நடிக பட்டாளம் பொழுது போக்கிற்காக வேட்டையாடச் சென்ற இடத்தில் 2 புல்வாய் மாங்களைக் கொன்ற வழக்கில் அவர்களுக்கு பெயில் வாங்கிக் கொடுத்திருக்கிறார் தன்கர்.

இந்த மான் இனத்தத் தனது குலதெய்வமாகவே அங்குள்ள பிஷ்ணோய் குலத்தவர் கொண்டாடுகின்றனர். இதனால் தான் இன்றளவும் லாரன்ஸ் பிஷ்ணோய் என்ற கடத்தலர் குழுவின் தலையாய குறியாக தண்டனைத் தரத் துடித்துக்கொண்டிருக்கிறது.

நீ ஒத்து சார்….ந்னு இருக்காங்க.

சல்மானுக்குக் காப்பு தந்து கொண்டிருந்த பாபா சித்திக்கி என்ற படு பலம் வாய்ந்த அரசியல்வாதியும் தனது உயிரை சமீபத்தில் பறி கொடுத்துவிட்டார். இது பற்றிய நமது விகடகவியில் எனது கட்டுரையின் லிங்க் மும்பையில் பாபா சித்திக்கி கொலை – பால்கி