தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்


20210727142611239.jpeg


தேவை ஒரு வேலை... – பா.அய்யாசாமி

அய்யாசாமியின் தேவை ஒரு வேலை சிறுகதை சிம்ப்ளி சூப்பர்ப்!

சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை


வாவ் வாட்ஸப்!

வாட்ஸ் அப் படங்களில் ஒவ்வொன்றும் அற்புதமானவை. இப்படங்களை பார்க்கும்போது மனம் குதூகலிக்கிறது.

கௌஷிக், தீட்சிதா, சௌம்யா, மயிலாடுதுறை


அர்ச்சகர் நியமனம் பற்றிய சர்ச்சை... - டாக்டர் எம்.ஏ. வேங்கடகிருஷ்ணன்

கோயில்களில் அர்ச்சகர் நியமன சர்ச்சைகள் குறித்து எம்.ஏ.வேங்கடகிருஷ்ணனின் கருத்துகள் அனைத்தும் ஹால்மார்க் தரமிக்க பொன்னெழுத்துகள். ஆகம விதிகள் பற்றி அறியாமல், அவசர அவசரமாக உத்தரவிட்டு, தண்ணீருக்குள் முதலையிடம் சிக்கிய யானை போலாகிவிட்டது திமுக அரசு!

ஜமுனா பட்டாபி, வேளச்சேரி


பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 30 - கலைமாமணி பாரதி திருமகன்

என்னம்மா... நல்லா போயிட்டு இருக்கிற வண்டியை பொசுக்குனு பிரேக் போட்டு நிறுத்தற மாதிரி, சென்ற வார சுப்புவின் வில்லிசை மேடை களைகட்டலையே! பாம்பு ராகம் பாடினா, அதுதான் வரும்னு எங்களுக்கு தெரியாதா? வயக்காட்டுல பாட்டு பாடினா பாம்பு வராம... டைனோசரா வரும்!

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை


மாண்புமிகு மனிதர்கள்...! - ஜாசன்

என்னா நைனா... பொசுக்னு மாண்புமிகு மனிதர்கள் 'அடுத்த வாரம் முடியும்'னு சொல்லிப்புட்டே! ஆஞ்சநேயர் மாதிரி, உன் பவரு உனக்கே தெரியல... உன்னோட தொடருக்கு எவ்ளோ பெரிய வாசகர் வட்டம் தெரியுமா? நீ சொல்றதுக்கு ஆளா கெடைக்கிலே... எத்தினி பேரு வேணும்? டிவி சீரியல் மாதிரி இழுக்கற ஐடியா உனக்கு தெரியும்ல... அந்த மாதிரி இஸ்த்துகினு போவியா? அக்காங்..!

பிரபாகரன், சிவசங்கர், திருப்போரூர்


கொடநாடு கொள்ளை, கொலை... - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை பின்னணி விவரங்கள் குறித்து விகடகவியாரின் ஸ்பெஷல் ரிப்போர்ட் படித்ததும் மனம் 'திக்..திக்..'கென அடித்தது. அசந்தா, நம்மளை உசிரோட கொளுத்திருவாங்க போலிருக்கே!

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்


இருண்டது தாலிபானிஸ்தான்... -தில்லைக்கரசிசம்பத்

நல்ல கட்டுரை. பகீர் விஷயங்கள். ( சீரியசான கட்டுரையில் கொஞ்சம் காமெடி கலந்து எழுதுவது தவிர்க்கப்படலாம். உம்.நாதஸ்) பெண்களுக்கு சம உரிமையோ, சமூக நீதியோ, பாதுகாப்போ, மரியாதையோ கொடுக்காத ஒரு இயக்கத்தை நம்மூரில் ஆதரிக்கும் அனைவரையும் அவர்தம் குடும்பம் குட்டிகளோடு மனைவி மற்றும் மகளோடு சேர்த்து ஆப்கானிஸ்தான் அனுப்பவும். செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கவும். சபாஷ் விகடகவி.

ரமா சுப்ரமணிய்ன், சென்னை


முதல் செமஸ்டர் தேர்வில் மு.க.ஸ்டாலின் அரசு பாஸ்? - பா.கிருஷ்ணன்

நீங்களே ஒரு பாஸ் மார்க் போட்ட ஆச்சா ?? இப்படியும் எழுதுவது ஒரு பொழைப்பா ????

சம்சுதீன், காரைகுடி


வலையங்கம்

முதியோர் உதவித்தொகை மற்றுமின்றி மாற்று திறனாளிகளின் உதவித்தொகையும் இதுபோன்ற வங்கி ஏஜென்சி ஊழியர்கள் மூலம் கையாடல் செய்யப்படுகிறது. ஒருசில இடங்களில் தபால் ஊழியர்கள் ₹1000-க்கு ₹200 கமிஷன் பிடித்துக்கொண்டு தருகின்றனர். பல இடங்களில் முதியோர்களின் உதவித் தொகையை அவரது மகன், மகள் மற்றும் உறவினர்களே 'ஆட்டை' போடுகின்றனர். இதனால் இதுபோன்ற முதியோர்கள் பிச்சை எடுத்தே வாழ்கின்றனர் என்பதே நிஜம். இந்நிலை மாறவேண்டும்.

ராதாகிருஷ்ணன், குன்றத்தூர்


அர்ச்சகர் நியமனம் பற்றிய சர்ச்சை... - டாக்டர் எம்.ஏ. வேங்கடகிருஷ்ணன்

மத்த ஊடகங்கள் போலவே விகடகவியும் ஜால்ரா அடிக்குமோ என்று பயந்தேன். நல்ல வேளை. ஒரு அருமையான கேள்வி பதில் வெளியிட்டதன் மூலமா அப்படி இல்லை என்று சொல்லி விட்டது விகடகவி. நச் கேள்வி. அதை விட நச்சோ நச் பதில்கள். பிரம்ம்ம்ம்ம்மதம்.

சங்கர் N., மதுரை


அர்ச்சகர் நியமனம் பற்றிய சர்ச்சை... - டாக்டர் எம்.ஏ. வேங்கடகிருஷ்ணன்

நெத்திஅடி பதில்கள். அட்டகாசம் 👏👏👏🙏

கோவிந்தன், திருச்சி